வியாழன், 30 ஜூன், 2016

கொஞ்சம் சிரிச்சுக்கிறேன்......

     வங்கிக்கு புதிதாக வந்த மேனேஜர் வங்கியின் கணக்கு வழக்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்தார்.*

*அதில் ஒரு அக்கௌண்ட்டில் மட்டும் தினமும் 1000 ரூபாய் போடப்பட்டே... வந்தது.*

*ஒரு நாள்கூட தடையில்லாமல் அந்த கணக்கில் போடப்பட்டு வந்தது.*

*இடையில் ஞாயிறு போன்ற விடுமுறை தினங்கள் வந்தால் அன்றைக்கும் சேர்த்து அடுத்த வேலைநாட்களில் அந்த கணக்கில் சேர்க்கப்பட்டு வந்தது கண்டு அதிசயித்தார்.*

*கேஷியரை கூப்பிட்டு “யாருய்யா அந்த ஆள்” என்று கேட்டார்.*

*தெரியலை சார் ! தினமும் காலையில் 10 மணிக்கு டான்னு வருவார், பணத்தை போடுவார் போய்ட்டே இருப்பார். ஆள் கொஞ்சம் சிடுமூஞ்சி மாதிரி இருக்கிறதால நாங்கலாம் யாரும் பேசுறதில்லை சார் ! என்றார்.*

*மேனேஜருக்கு இப்படி ஒரு கேரக்டரை சந்திச்சே ஆக வேண்டுமென்று பெரிய ஆவலாகவிட்டது. அடுத்த நாள் காலையிலேயே வந்து காத்திருந்து அந்த நபர் வந்தவுடன் பக்கத்தில் போய் பேச்சு கொடுக்க முயன்றார். அந்த நபரோ இவரை கண்டுகொள்ளாமல் போய்விட்டார்.*

*அவர் புறக்கணித்ததும் வங்கி மேனஜருக்கு அவருடன் பழகி அவர் ஏன் தினமும் ஆயிரம் ரூபாய் வங்கியில் போடுகிறார் என்றும் கண்டுபிடிக்கவேண்டும் என்று பெரிய வெறியே ஆகிவிட்டது.*

*தினமும் பணம் செலுத்தும் இடத்தின் அருகே நிற்பது சிரிப்பதுமாய் இருந்து அந்த நபரும் லேசாக புன்னகைக்க துவங்கியிருந்தார்.*

*ஒரு நாள் மேனஜர் வரும் வழியில் அந்த ஆயிரம் ரூபாய் பார்ட்டி வண்டி பழுதாகி ரோட்டில் நின்றிருந்தார்.மேனேஜர் லிஃப்ட் கொடுத்து வங்கிக்கு அழைத்து வரவே கொஞ்சம் பேசவும் துவங்கியிருந்தார்.*

*ஒரு நாள் அவரிடம் மேனேஜர் ’சார் நாமதான் நண்பர்களாகிட்டோம்ல இப்பவாவது சொல்லுங்க,எதுக்கு தினமும் ஆயிரம் ரூபாய் பேங்ல போடுறீங்க. அப்படி என்ன வருமானம் வரும்படி தொழில் செய்யுறீங்க ‘ என்று கேட்டார்.*

*’சார், நான் வேலையெல்லாம் பாக்கலை தொழிலிலும் செய்யலை, நான் தினமும் பந்தயம் கட்டுவேன் அதுல எப்படியும் ஜெயிச்சுருவேன், அந்த காசுதான் சார் அது என்றார்*

*மேனேஜருக்கு நம்பமுடியவில்லை , அது எப்படி தினமும் ஒருத்தன் பந்தயத்தில ஜெயிக்க முடியும் , இந்தாளு பொய் சொல்லுறான் என்று எண்ணிக்கொண்டார். அவரின் முகமாற்றத்தை கண்ட அவன் ‘சார் இதுக்குதான் நான் யாரிடமும் இந்த பந்தய மேட்டரை சொல்வதில்லை என்றான்.*

*அப்படியும் சந்தேகமாய் பார்த்த மேனேஜரிடம் ” சரி சார், நாம ரெண்டு பேருமே இப்ப ஒரு பந்தயம் போடுவோம், நான் ஜெயிக்கலைன்னா பாருங்க என்றான்,*

*டென்சாகிய மேனேஜரும் சரிய்யா பந்தயத்துக்கு ரெடி என்னய்யா பந்தயம்னாரு.*

*’சார், சரியா நாளைக்கு காலையில 10.15க்கு உங்க பட்டெக்ஸ் (இடுப்புக்கு கீழ் அல்லது அமருமிடம்) பச்சைக்கலரா மாறிடும், ரெண்டாயிரம் ரூபாய் பந்தயம் ‘ என்றான்.*

*யோவ் என்னய்யா சொல்ற, எதாவது நடக்குற கதைய சொல்லு என்று மேனேஜர் சொல்ல..*

*பந்தயத்துக்கு வர்றீங்களா இல்லையான்னு கட் அண்ட் ரைட்டா சொல்லுங்க சார்னு கேட்டான்.*

*சரின்னு ஒத்துகிட்டார்.*

*காலையில வருவேன் உங்க பட்டெக்ஸ் பச்சை பசேல்ன்னு மாறியிருக்கும் ரெண்டாயிரம் ரூவாயை எடுத்து வையுங்க என்றபடி சென்றுவிட்டான்.*

*மேனஜர்க்கு எப்படி இவ்வளவு தைரியமா பந்தயம் கட்டுறான் என்று ஆச்சர்யம். அவன் போனவுடன் முதல் வேலையாக பாத்ரூம் சென்று தனது பேண்ட்டை அவிழ்த்து கண்ணாடியில் பின்புறத்தை பார்த்தார், அது வழக்கம் போல் கண்ணங்கரேல் என்று என்றுதான் இருந்தது.*

*இருந்தாலும் அவருக்கு இருப்பு கொள்ளவில்லை , அரைமணிக்கொரு முறை பேண்ட்டை அவிழ்த்து பார்க்கவும் போடுவதுமாய் இருந்தார்.*

*விடிந்தது... முதல் வேலையாக அதை போய் பார்த்தார், இப்பவும் அப்படியே கருப்பாகவே இருந்தது. நம்ம பட்டெக்ஸாவது பச்சை கலராகிறதாவது என்று அவரே சமாதானம் சொல்லிக்கொண்டே குளித்து அலுவலகம் கிளம்பினார். எங்கே பஸ்ஸில் உட்கார்தால் எதும் செட்டப் செய்து நிறம் மாற செய்து விடுவார்களோ என்று எண்ணி நடந்தே போனார்.*

*பத்து மணி அலுவலகத்துக்கு 9 க்கே வந்துவிட்டாலும் 10 நிமிடத்துக்கு ஒரு முறை போய் போய் பார்த்து உறுதி செய்தபடியே இருந்தார். இன்னைக்கு அவனை ஜெயிச்சு ரெண்டாயிரம் ரூபாயை வாங்கிறனும் என்று ஆவலோடு காந்திருந்தார்.*

*சொல்லி வைத்தாற்போல் சரியாக 10.15 அவன் அந்த அறைக்குள் நுழையவே வேகமாய் சீட்டிலிருந்து எழுந்து தனது பேண்ட்டை கழட்டி திரும்பி நின்று “ இந்தா பார்த்துக்கோ “ அப்படியே கருப்பாதான் இருக்கு என்று பின்பக்கத்தை காட்டினார்.*

*அவன் உடனே அருகிலிருந்தவனிடம்*
*” என்னமோ பேங்க் ஆபிசர், பெரிய மனுசன், அப்படியெல்லாம் செய்யமாட்டருன்னு இந்தாளை நம்பி பந்தயம் கட்டினே,*
*இப்ப என்ன சொல்லுறே, எடு மூவாயிரத்தை “ என்றான் அவன்.*

*அப்போதுதான் கவனித்தார் பந்தயக்காரனுடன் வேறு ஒருவனும் வந்திருந்தான்.அவனும் மேனேஜரை முறைத்தபடி மூன்று "ஆயிரம் ரூபாய்" தாள்களை எடுத்து நீட்டினான்.*

*அதை வாங்கிய பந்தயக்காரன் இரண்டாயிரம் ரூபாய்களை மேனேஜரிடம் நீட்டி*

*“ உங்கிட்ட கட்டின பந்தயத்தில நான் தோத்துட்டேன், ஆனா இவன் கிட்ட கட்டின பந்தயத்தில ஜெயிச்சுட்டேன், ஆயிரம் ரூபாய் லாபம் என்று வழக்கமாய் பணம் கட்டும் கவுண்ட்டருக்கு போய்விட்டான்.*

*அவனுடன் பந்தயம் கட்டி மூவாயிரம் ரூபாய் தோற்றவனிடத்தில் நீ எதற்கு அவனிடம் பந்தயம் கட்டினாய் என்று மேனஜேர் கேட்க*
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢
*வந்தவன் கடுப்பாகி அவரிடம்*
*“போய்யா நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ?*

*என்னைய பார்த்தவுடனே பேண்டை கழட்டி பின்னாடி காமிப்பாருன்னு உன்னைய சொன்னான், ச்சேசே அப்படியெல்லாம் இருக்காதுன்னு உன்னிய நம்பி பந்தயம் கட்டினா இங்க நீ ரெண்டாயிரம் ரூபாய்க்கு இவ்வளவு கேவலமான வேலை செய்யுற த்தூ என்று துப்பிவிட்டு போனான்.*
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

*இதனால் அறியப்படுவதும் நீதி என்னவெனில்....*

அவன் அவன்       வேலையை             அவன் அவன் பார்க்கனும், அடுத்தவன்           வேலையிலே                 தலையிட க்கூடாது...
😆😆😆😆😆😆😆

சனி, 25 ஜூன், 2016

காட்டு நெறிஞ்சி திறனாய்வு கூட்டம்

இன்று கந்தர்வகோட்டையில் நடைபெற்ற கலை இலக்கிய பெருமன்ற கூட்டத்தில் எனது "காட்டு நெறிஞ்சி " நூல் குறித்த திறனாய்வும் நடைபெற்றது. திறனாய்வு செய்து பேசிய கவிஞர் இராசேந்திரன் அவர்களுக்கும் கவிஞர் கோபி ஆறுமுகம் அவர்களுக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த சிறுகதை எழுத்தாளர் அண்டனூர் சுரா அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி.

கச்சத்தீவு

கச்சத்தீவு - (பகிர்வு செய்தி)

கச்ச தீவு
இந்தியாவிற்கும் இலங்கைக்கும்
இடையே உள்ள பாக்ஜலசந்தி மற்றும்
மன்னார் வளைகுடா பகுதியில்
சின்னஞ்சிறு தீவுகளாக மொத்தம் 21
தீவுகள் உள்ளது.... அதில்
ஒன்றுதான் இந்த கச்சத்தீவு.
இன்றைக்கு பெரிய அளவில்
பரபரப்பாக பேசப்பட்டுகொண்ட
ிருக்கும் இந்த தீவு பரப்பளவு என்று
பார்த்தோமானால்
மிகச்சிறியதுதான். இதன் மொத்த
பரப்பளவு 297 ஏக்கர்தான் என்றால்
பார்த்துக்கொள்ளுங்கள். மூர்த்தி
சிறிதானாலும் கீர்த்தி பெரியது –
என்பதுபோல் 1 மைல் நீளமும் 1000
அடி அகலமும் கொண்ட இந்ததீவை
சுற்றியுள்ள இயற்கை வளங்கள்
மற்றும் அள்ளஅள்ள குறையாத
அட்சயபாத்திர ‘மீன் வளப்
பகுதியாகவும்’ இருப்பதால்தான்
இந்த தீவு இத்தனை முக்கியத்துவம்
பெறுகிறது.
1954-ம் ஆண்டு வரை இலங்கை நாட்டு
சர்வதேச வரைபடத்தில்
இடம்பெற்றிருக்காத இந்த கச்சதீவு,
அதற்க்கு முன் பல நூறு
ஆண்டுகாலமாய் ராமநாதபுர
சேதுபதி மன்னர்களின் ஆட்சிக்கு
உட்பட்டுத்தான் இருந்துவந்தது.
அதாவது தமிழகத்திற்க்கே
சொந்தமானதாக இருந்தது.
சுதந்திரத்திற்கு பிறகு, 1947-ல்
இந்திய அரசு கொண்டுவந்த
ஜமீன்தார் ஒழிப்பு மற்றும் நில
உச்சவரம்பு சட்டத்தின் மூலம் கச்சதீவு
இந்திய அரசுக்கு சொந்தமானது.
எல்லாவற்றிற்கும் ஒரு
பெயர்க்காரணம் இருக்கும்
அதுபோலவே இந்த கச்சத்தீவிற்கும்
“கச்சத்தீவு” என்று பெயர் வந்ததிற்கு
ஒரு காரணம் உண்டு. இந்த தீவில்
குடிக்க கிடைக்கும் தண்ணீர்
கசப்பாக இருப்பதால்தான்
இத்தீவிற்கு இப்பெயர் வந்தது
என்கிறது வரலாறு. ‘கச்ச’ என்றால்
சிங்கள மொழியில் ‘கசப்பான’ என்று
அர்த்தம். இதன் காரணமாகே இத்தீவு
‘கச்சதீவு’ என்று பெயர்பெற்றது.
இங்கு கிடைக்கும் தண்ணீர் கசப்பாக
இருப்பதற்கு காரணம் இங்கே
விளையும் பல்வேறு மூலிகைகள்,
பச்சிலைகள், மற்றும் சாய
வேர்கள்தான். இங்கு கிடைக்கும்
மூலிகைகள் பல்வேறு
நோய்களுக்கான நிவாரணி
என்பதால் இதன் முக்கியத்துவத்த
ை உணர்ந்த இராமநாதபுர சேதுபதி
மன்னர்கள் அவற்றை சித்த
மருத்தவர்களுக்கு 1840-ம் ஆண்டு
முதலே குத்தகைக்கு விட்டு
வந்துள்ளனர்.
கச்சம் என்றால் தமிழில் ஆமை என
பெயர் ஆமைகள் தங்கும் தீவு இது
சில 100 ஆண்டுகளுக்கு
முன்புவரை இந்தியர்கள் நடந்தே
இலங்கை சென்றிருக்கிறார்கள்
என்று நம்மிடையே நம்பகத்தகுந்த
பல்வேறு வரலாற்று சான்றுகள்
கொட்டிக்கிடக்கின்றன. இது தவிர
பல நூறு ஆண்டுகளாக இந்திய-
இலங்கை மீனவர்கள் இணக்கமாகவே
மீன்பிடி தொழிலை செய்து
வந்துள்ளனர். இரு நாட்டு
மீனவர்களும் இந்த தீவை ஓய்வு
எடுப்பதிற்கும், மீன் வலைகளை
உலர்த்துவதுக்கும் பயன்படுத்தி
வந்திருக்கிறார்கள்.
கச்சத் தீவின் பரப்பளவு 285 ஏக்கர்கள் 20
சென்ட் ஆகும். கச்சத் தீவு
தமிழகத்தின் ராமேஸ்வரத்திலிர
ுந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ளது.
அதாவது, சென்னை
சென்ட்ரலுக்கும், தாம்பரத்துக்கும்
உள்ள தூரத்தை விட குறைவானது.
கடலோர எல்லை, நாட்டிக்கல் மைல்
(NAUTICAL MILES) அளவு கொண்டு
சர்வதேச அரங்கில் கணக்கிடப்படுகிற
து. அதன்படி கச்சத் தீவு
ராமேஸ்வரத்திலிருந்து 12
நாட்டிக்கல் மைல் அளவுக்கும்
குறைவான தூரத்தில்
அமைந்துள்ளது.
1480 ம் ஆண்டில் ஏற்ப்பட்ட கடல்
கொந்தளிப்பால் பெரும் புயல்
ஏற்ப்பட்டு வங்கக் கடலில் ராமேஸ்வரம்
தீவும் அதை சுற்றி 11 தீவுகளும்
உண்டாயின.
ராமேஸ்வரம்
குந்துகால்
புனவாசல்
முயல் தீவு
பூமரிசான் தீவு
முல்லைத் தீவு
மணல் தீவு
வாலித் தீவு (கச்சத் தீவு)
அப்பா தீவு
நல்ல தண்ணீர் தீவு
உப்பு தண்ணீர் தீவு
குடுசடி தீவு
கோடிக்கணக்கான இந்து மதத்தினர்
நம்பும் ராமாயண இதிகாசத்தில்
ஸ்ரீராமரும், வாலியும் போரிட்ட
தீவுதான் கச்சத் தீவு என்ற
நம்பிக்கையும் நிலவுகிறது.
23.07.1974-ல் நடைபெற்ற
நாடாளுமன்ற விவாதத்தில்,
அப்போதைய குவாலியரின்
நாடாளுமன்ற உறுப்பினராக
இருந்த பிற்கால பிரதமர் அடல்
பிகாரி வாஜ்பாய் கச்சத் தீவை,
‘வாலி தீவு’ என கூறியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட அரசு
வரலாற்று குறிப்பு 11891ம் பக்கம்
14ல் இதற்கான ஆதாரம் உள்ளது. 1480
ம் ஆண்டு தோன்றிய இத் தீவுகள்
யாவும் ராமநாதபுரம் சேதுபதி
மன்னர்களுக்கு சொந்தமாக
இருந்தன.
1905ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம்
தொண்டியை சேர்ந்த சீனி கருப்பன்
படையாச்சி என்ற மீனவர் புனித
அந்தோனியார் கோயிலைக்
கட்டினார். ஒவ்வொரு ஆண்டும்
மார்ச் 4ம் நாள் திருவிழா நடக்கும்.
இதில் தமிழர்கள் யாருடைய
அனுமதியும் பெறாமல் செல்லாம்.
இலங்கை பக்தர்கள் இலங்கை அரசின்
அனுமதி பெற்று தான்
வரவேண்டும்.
1947 ம் ஆண்டு ஜமீன்தாரி ஒழிப்பு
சட்டம் கொண்டு வரும் வரையில்
கச்சதீவு சேதுபதி மன்னர்களின்
ஆட்சியில் இருந்தது.
இதற்கு 1822 ம் ஆண்டிலிருந்து
நிறைய சான்றுகள் உண்டு.
கிழக்கிந்திய கம்பெனி 1822ல்
இஸ்திமிரர் சனட் என்ற ஒப்பந்தத்தில்
ராமநாதபுரம் ராஜாவிடமிருந்து
கச்சத்தீவை பயன்படுத்தி கொள்ளும்
உரிமை பெற்றது. 69 கடற்கரை
ஊர்களும் 8 தீவுகளும்
சேதுபதிக்கு உரியது. இந்த 8
தீவுகளில் ஒன்று தான் கச்சத்தீவு.
கிழக்கிந்திய கம்பனி இவை
யாவற்றையும் பயன்படுத்தி கொள்ள
ராஜாவிடம் இருந்து இசைவு
பெற்று இருந்தது.
இங்கிலாந்து பேரரசி
விக்டோரியாவின் காலத்தில்
இலங்கை பற்றி வெளியிடப்பட்ட
பொது அறிவிப்பில் இலங்கையின்
எல்லையை பற்றி குறிப்பிடும்
போது கச்சத்தீவை குறிக்காமலும்,
ராமநாதபுரம் அரசை பற்றி
குறிப்பிடுகையில் கச்சத்தீவு
அவருக்கு உரியதென்றும்
குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை
முந்நாளைய இலங்கை அமைச்சரவை
செயலாளர் பி. ஈ. பியரிஸ்
உறுதிபடுத்தி உள்ளார்.
1947 டிசம்பர் திங்களில் சண்முக
ராஜேந்திர சேதுபதியிடமிருந்து
வீ. பொன்னுசாமி பிள்ளை, கே.எஸ்.
மொகம்மது மீர்சா மரைக்காயர்
ஆகிய இருவரும் கச்சத்தீவை
குத்தகைக்கு எடுத்துள்ளனர்.
இலங்கையின் பழைய வரலாற்று
அவணங்களிலோ, நூல்களிலோ
எதிலும் கச்சத் தீவு பற்றிய எந்த
விவரமும் இல்லை. இதுவரையில்
கச்சத் தீவில் எங்களுக்கு உரிமை
உண்டு என்பதற்கான ஆதாரங்களை
இலங்கை அரசாங்கம் வெளியிடவும்
இல்லை.
டச்சுக்காரர்கள், போர்சுகீசியர்கள்
என்று யார் தயாரித்த இலங்கை
தேசப்படங்களிலும் கச்சத்தீவு
இல்லை. 17 ம் நூற்றாண்டில் பர்நோப்
எனும் வரலாற்று ஆய்வாளர்
இலங்கைக்கு வந்தார் அவர் இலங்கை
தேசப்படம் ஒன்றை உருவாக்கினார்.
அதிலும் கச்சத்தீவு இல்லை.
1857 – 61 ம் ஆண்டுகளில் இலங்கை
தேசப்படங்களை வெளியிட்ட
ஜே.ஆரோஷ்மிக் மற்றும் டெண்னன்ட்
ஆகியோரும் இலங்கை
தேசப்படத்தில் கச்சத்தீவை சேர்த்து
வெளியிடவில்லை.
1920 ம் ஆண்டில் கச்சத் தீவு
எங்களுக்குத் தான் சொந்தம் என்று
இலங்கை அரசு கூற ஆரம்பித்தது.
இந்தியா 1956ம் ஆண்டிற்குப்
பின்னால் தன்னுடைய கடல் எல்லை
கோட்டை 3 கடல் மைல்களில் இருந்து
6 கடல்மைல்களாக விரிவுப்படுத்தி
யது. அத்துடன் மீன்பிடிக்கும்
உரிமையை 100 கடல் மைல்கள்
தூரத்திற்கு விரிவுபடுத்தியது.
கச்சத்தீவை கைப்பற்ற இந்தியா
எடுக்கும் முயற்சி என்று இதனை
இலங்கை அரசு கருதி போட்டியாக
1970ல் அதே போன்ற ஒரு
அறிவிப்பை இலங்கை
வெளியிட்டது.
1973ம் ஆண்டு அன்றைய பிரதமரான
இந்திராகாந்தி இலங்கை சென்றார்.
1974ம் ஆண்டு இலங்கை அதிபர்
சிறிமாவோ பண்டார நாயகே
இந்தியா வந்தார். இந்திராவும்,
சிறிமாவோவும் நடத்திய பேச்சு
வார்த்தையில் தமிழகத்தை
கேட்காமலே கச்சத்தீவு கை
மாறியது.
28.06.1974-ல் கச்சத் தீவை இந்தியா
இலங்கைக்கு தாரை வார்த்து, அந்த
ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும்
இலங்கை பிரதமர்கள்
கையெழுத்திட்டனர். ஆனாலும்,
‘தமிழக மீனவர்கள் கச்சத் தீவை ஒட்டி
மீன் பிடித்துக் கொள்ளலாம். மீன்
பிடிக்கும் வலைகளை கச்சத் தீவில்
உலர வைக்கலாம், ஒய்வு
எடுத்துக்கொள்ளலாம். இது தவிர,
கச்சத்தீவில் உள்ள புனித
அந்தோணியார் ஆலய ஆண்டு
திருவிழாவில் கலந்து
கொள்ளலாம் எனும் உரிமை
தமிழகத்திற்கு உள்ளது’
என்றெல்லாம் விளக்கமளித்து,
அப்போது தமிழக மக்களை
சமாதானப்படுத்தியது அப்போதைய
மத்திய காங்கிரஸ் அரசு.
1974ம் ஆண்டு ஆகஸ்ட் 21லிருந்து
இன்றுவரை நாம் தீர்மானம்
நிறைவேற்றி கொண்டே
இருக்கிறோம்.சீன ராணுவம் கச்சத்
தீவை தனது தளமாக பயன்படுத்த
இலங்கை அனுமதித்துள்ளது என
செய்திகள் வருகின்றன. அதன்படி
பார்த்தால் கச்சத் தீவை நாம்
மீட்காவிட்டால் எதிர்காலத்தில்
இந்தியாவிற்கு - குறிப்பாக
தமிழகத்திற்கு பெரும்
அச்சுறுத்தலாக கச்சத்தீவு இருக்கப்
போகிறது

புதன், 22 ஜூன், 2016

15.08.2015 நாகுடி கவியரங்கில்...

எழுச்சிக்கவிஞர் மு.கீதா
கவிஞர் புதுகைப்புதல்வன்
கவிஞர் அப்துல்ஜலீல்
கவிஞர் அருண்மொழி

சந்தித்த வேளையில்..... அண்ணன் திருமா...

காஞ்சாத்து மலை - சோலச்சி

நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ...
      
          புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி யிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பூலாங்குறிச்சி என்னும் ஊர். இந்த ஊரில் தான் பிரமிக்கத்தக்க
            "காஞ்சாத்து மலை ".

     மலைகளின் அழகை ரசிக்க புதுக்கோட்டை யில் உள்ளவர்களே ஏற்காடு,  உதகமண்டலம்,  கொடைக்கானல் செல்கிறோம். அங்கு வெறும் மலைகளை மட்டும்தான் கண்டு ரசிக்க முடியும். இந்த காஞ்சாத்து மலை யில் கப்பல் போன்ற மலைகளும் ரயிலைப் போன்ற மலைகளும் அதிகமாக உள்ளன.  அடர்ந்த மலைக்காடுகள் சூழந்துள்ளன. ஓர் மலையின் உச்சியில் முருகன் கோயிலும் உள்ளது. இந்தக் காட்டில் காட்டு மாடுகள் அதிகமாக வாழ்ந்தன. தற்போது  கயவர்களால் வேட்டையாடியது போக எஞ்சிய காட்டு மாடுகள் சொற்ப எண்ணிக்கையில் வாழ்கின்றன. நரிகளும் முயல்களும் அதிகமாக வாழ்கின்றன. அரியவகை பழங்களான பாஞ்சாம் பழம், களாக்காய், தொரட்டிப்பழம் இங்கு அதிகம்.

     அருகில் இருக்கும் நமக்கு அதன் அழகான இயற்கையை ரசிக்க தெரியவில்லை.  ஒருமுறையாவது சென்று ரசியுங்கள் .... பின் குறிப்பு ... அங்கு நம்மை வழிநடத்த யாரும் இருக்க மாட்டார்கள். பாதுகாப்பு நம்மைச் சார்ந்தது.....
       நட்பின் வழியில்
        சோலச்சி புதுக்கோட்டை