ஞாயிறு, 30 அக்டோபர், 2016

திருவில்லிபுத்தூரில் ...

நெஞ்சம் நிறைந்த நன்றி ....

30.10.2016 அன்று,  தமிழக அரசு சின்னம் கொண்ட கோபுரம் மற்றும் பால்கோவாவிற்கு புகழ் பெற்ற நகரமான திருவில்லிபுத்தூர் நகரில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் ஏற்பாடு செய்திருந்த மாதம் ஒரு எழுத்தாளர் சந்திப்பு நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டேன். எனது "காட்டு நெறிஞ்சி " கவிதை நூல் குறித்து தோழர் வழக்கறிஞர் கவிஞர் அன்னக்கொடி மிக நுட்பமான விமர்சனத்தை வழங்கினார். தோழர் ரமேஷ் வர இயலாததால் அவர் எழுதிக்கொடுத்த விமர்சனத்தை மன்ற செயலாளர்  தோழர் முத்துகுமார் வாசித்தார். என்னுடன் வந்திருந்த தம்பி கவிஞர்  மா.கை. நாகநாதன் அவரது  கவிதை வாசித்தார். இலக்கிய நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. திருவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு மட்டுமல்ல இலக்கியத்திலும் சிறந்து விளங்குகிறது என்று கூறி எனது ஏற்புரையை நிறைவு செய்தேன். இந்த வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த இலக்கிய மன்ற தலைவர் தோழர் கோதைமணியன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி.  தோழர் கவிஞர் இனியநந்தவனம் சந்திரசேகரன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி.

வியாழன், 20 அக்டோபர், 2016

திங்கள், 17 அக்டோபர், 2016

இனியநந்தவனம் இதழில் ....

நீண்ட இடைவெளிக்குப்பிறகு.....

என்னை வளர்த்துக்கொண்டு இருக்கிற மாத இதழ்களில் ஒன்றான "இனிய நந்தவனம் " மாத இதழில் இம்மாத வெளியான எனது கவிதை ..

என் அருமைக்கவிஞர் இனிய நந்தவனம் சந்திரசேகரன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி .....

வியாழன், 6 அக்டோபர், 2016

மரக்கன்றுகளை நடு......

நேற்று தோட்டக்கலைப் பண்ணைக்கு களப்பயணம் சென்று வாங்கி வந்த மரக்கன்றுகள் இன்று பள்ளி வளாகத்தில் நடப்பட்டது .....

தோட்டக்கலைப்பண்ணை........

இன்று காலை எம்பள்ளியிலிருந்து களப்பயணமாக குடுமியான்மலை தோட்டக்கலைப் பண்ணைக்குச் சென்றோம். களப்பயணத்தை தலைமை ஆசிரியர் தமிழ்த்திரு. எஸ்.நாகலெட்சுமி அவர்கள் தொடங்கி வைக்க, எனது தலைமையில் மாணவர்களுடன் இலந்தை மரக் காடு வழியாக பயணித்தோம்.  தண்டை மரம், சப்போட்டா தோப்பு, மா வகைகள், பலதரப்பட்ட மர வகைகள், விதை உற்பத்தி,  பதியம் போடுதல், ஒட்டு வகை உற்பத்தி , மூலிகைப் பண்ணை, மூங்கில் பண்ணை, காய்கறித் தோட்டம் என பலவாறு    தோட்டக்கலைப் பண்ணையை சுற்றிப் பார்த்தோம். அங்கு பணியாற்றும் தோட்டக்கலை அலுவலர் தோழர் ராஜசேகர் அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.  மாணவர்கள் அவ்வப்போது குறிப்பெடுத்துக் கொண்டனர். பலன் தரும் மரக்கன்றுகளை பெற்றுக்கொண்டு இனிதே விடைபெற்றோம். மரக்கன்றுகளை பள்ளியில் நட்டு மேலும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப் போகிறோம்.

நீங்களும் ஒருமுறை குடுமியான்மலை  தோட்டக்கலைப் பண்ணைக்கு வந்து செல்லுங்களே......

ஞாயிறு, 2 அக்டோபர், 2016

மனோரா... - சோலச்சி

இன்று தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டிணம் ஊராட்சி "மனோரா " வில்.....

வங்கக்கடலின் எழில்மிகு தோற்றம். வரலாற்று சிறப்பு மிக்க மனோரா வானது எட்டடுக்கு கோட்டையாகும். கோட்டையை சுற்றி மிகப்பெரிய அகழி. தற்போது கோட்டை பழுதடைந்த நிலையில் இரண்டு அடுக்கு வரை மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வந்தபோது கடற்கரையில் குதிரை சவாரி மாலை நேரத்தில் வறுத்த மீன் புகழ் பெற்றது.  தற்போது  கடற்கரை சாக்கடையாக உள்ளது.  கடற்கரைக்கு யாரும் செல்ல முடியாத அவலநிலை. வெறிச்சோடி கிடக்கிறது.
கழிப்பிட வசதிகள் பராமரிப்பு இன்றி தேடாநாதியாக இருக்கிறது.  சுற்றுலா பயணிகள் வந்தாலும் உடனே கிளம்பிவிடும் நிலை. பரந்து விரிந்த ஆலமரம் பறவைகளுக்கு மட்டுமல்ல சின்னக் குழந்தைகளுக்கும் விளையாட்டு மைதானமாக விளங்குகிறது. சிறுவர் பூங்கா பக்கம் யாரும் செல்வதில்லை. காரணம் பராமரிப்பு இல்லாமல் இருப்பதுதான்.  கடற்கரையில் ஆட்டம் போடும் ஆவலோடு வந்த எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

   அரசு கவனம் செலுத்தி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பு.....

   "மனோரா " பார்க்க வேண்டிய இடம்....