திங்கள், 1 ஏப்ரல், 2019

2018 புதுக்கோட்டை கஜா புயல்



2018இல் ஏற்பட்ட கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதில் எங்கள் வீடு உட்பட எங்கள் பகுதியும் [புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம், புல்வயல் ஊராட்சி குமரமலை அருகில் திருவள்ளுவர் நகர் ] பெரிதும் பாதிக்கப்பட்டது. எங்கள் பகுதிக்கு நண்பர்கள் பலரும் பொருளுதவி செய்து எங்களுக்கு துணை நின்றார்கள் . நானும் புதுக்கோட்டை நண்பர்களோடு சேர்ந்து கஜாபுயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பொருட்களை நண்பர்கள் மூலம் சேகரித்து நிவாரணம் வழங்கி துணை நின்றோம்.....
நட்பின் வழியில்
சோலச்சி








என் வீட்டில் நூல்களை பாய்கொண்டு மூடியும் நிறைய நூல்கள் நனைந்து சேதமாகிவிட்டன்.















எங்கள் வீட்டுத்தோட்டத்தில் காய்த்த மாங்காய்கள்








மேல இருப்பது எங்கள் வீட்டின் சேதமடைந்த பகுதிகள் 












என் மூத்த மகன் ஆரியா பேரழிவினைக் கண்டு கதறுகிறான்...









எங்கள் வீட்டின் சேதப்பகுதிகளை சீரமைக்கிறோம்.....





புயல் ஏற்பட்ட உடனே ஓடிவந்து விளக்கேற்ற மண்ணெண்ணெய் மற்றும் மெழுகுதிரியை கொண்டு வந்து கொடுத்த கவிஞர் அரிமளம் பவல்ராஜ் அவர்களின் நிவாரண பொருட்கள் ...



அக்கா காரைக்குடி தென்றல் அவர்கள் அவரின் கணவரோடு சேர்ந்து எங்கள் பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்கள் கொடுத்தும் உணவும் வழங்கினார். சோத்துப் பொட்டலத்தைக் கொடுத்ததும் குழந்தை ஒன்று வேகவேகமாக பசியாறுகிறது.





புதுக்கோட்டை நண்பர்களோடு நண்பர்களின் உதவியோடு பெற்ற நிவாரண பொருளை இலுப்பூர் அருகே கட்டக்குடியில் வழங்குகின்றேன்.



வயலோகம் அருகே அகரப்பட்டியில் நிவாரணம் உதவிகள்.



                   திருவள்ளுவர் நகர் எங்கள் குடியிருப்பு பகுதி


எங்கள் குடியிருப்பு பகுதிக்கு பருப்புகளை வழங்குகிறார் ஆசிரியர் ஆ.செபாஸ்டின் குழந்தைராஜ் என்ற ராசையா







புதுக்கோட்டை நண்பர்களுடன்.....
















2000 ம் ஆண்டில் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் நான் படித்தபோது என்னுடன் படித்த நண்பர்களான உதயகுமார், சென்னப்பன், ரவிச்சந்திரன் மூவரும் அகரப்பட்டி மற்றும் திருவள்ளுவர் நகர் பகுதிகளுக்கு நிவாரணம் வழங்குகின்றனர்.



கவிஞர் புரட்சித்தமிழன் சத்தியசீலன் வழங்கிய நிவாரண பொருட்கள் 
 கவிஞர் சுகன்யாஞானசூரி வழங்கிய நிவாரண பொருட்கள் 





அய்யா கவிஞர் நா.முத்துநிலவன், அய்யா மருத்துவர் ராமதாசு, அய்யா ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, தமிழ்ச்செம்மல் கவிஞர் தங்கம் மூர்த்தி,  கவிஞர் மகா சுந்தர், பேராசிரியர் விஸ்வநாதன், கவிஞர் மு.கீதா, எழுத்தாளர் மாலதி, தம்பி செரால்டு, தம்பி கவிஞர் மலையப்பன், விதைக்கலாம் நண்பர்கள், அருமை மாப்பிள்ளை யூசுப்,  மாதர்சங்க தோழர்கள் என மிகப்பெரிய குழுவோடு சேர்ந்து நானும் நிவாரண பணிகளில் ஈடுபட்டேன். நிவாரண பொருட்களை வழங்கும் பணிகள் அய்யா மருத்துவர் ராமதாசு அவர்களின் மருத்துவமனையில் தான் நடைபெற்றது . தோழர் கவிஞர் சுகன்யாஞானசூரி, கவிஞர் புரட்சித்தமிழன் சத்தியசீலன், அரிமளம் கவிஞர் பவல்ராஜ்,  எழுத்தாளர் மாலதி அவர்கள் நேரடியாக எங்கள் பகுதிக்கு வந்து சொந்த செலவில் நிவாரணம் வழங்கினார்கள் . கவிஞர் புதுக்கோட்டை ஜலீல் ஆசிரியர் என்வீட்டு கூரையை மூட பிளக்கஸ் கொண்டு வந்து உடனடியாக கொடுத்து பேருதவி செய்தார்.  மனித நேயம் தொடர்ந்து மலரட்டும். இயற்கை சீற்றத்திலிருந்து மீள செயற்கை வெற்று ஆடம்பரங்களை களைவோம். இயற்கையை காப்பதன் மூலம் நாம் வாழ்கிறோம்.
நட்பின் வழியில்
சோலச்சி புதுக்கோட்டை