வெள்ளி, 20 செப்டம்பர், 2019

கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும் கருத்தளிப்பு - கவிஞர் ஜெயாசக்தி







        எனது கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும் நூல் குறித்து - கவிஞர் ஜெயா சக்தி, சென்னை



       "குருவிக்காடு "கதை வாசித்தேன் குரு. வீரமும் எழுச்சியும் புரட்சியுமாய் மனசு பதற்றத்தோடு வாசித்த போது. அந்த காக்கைகளும் கொக்குகளும் மனதை மாற்றி அடுத்த வரிகளுக்குள் பயணிக்க வைத்தது.உண்மையிலேயே அந்த அந்த வரிகளுக்குள் மூழ்க வைத்து மீள வைக்கிறது உங்களின் எழுத்தாற்றல். அசத்தல் குரு. 🤝🏻🤝🏻💐👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💐💐💐💐


  இரண்டாவது கதை "அலோ.. ஐ ச்சீ... பேசுறேன்."தலைப்பும் அலுவலகத்தின் ஆரம்பமும் ஏதோ... வேற மாதிரியோ... என்றெண்ணியதை தழைகீழாக மாற்றி வாசிப்பவரையும் குழந்தையாக மாற்றி விதம் மிக அற்புதம் குரு. "காற்றுக்கு பட படத்த காலண்டரும் கை தட்டியது "ரசனை குரு செம்ம. நானும்👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻


  "வம்சத்தை தேடி" கதையல்ல... நடந்தது  நிஜமாக இருக்குமென உள்ளுணர்வு சொல்கிறது குரு.
வலி நிறைந்த கதை! 🌼


    "கதவு"கதைக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் குரு.
       கதை 5 வாசித்தேன் குரு. இறுதியாய் கொண்டுப்போக ஒன்னுமில்லை என்று மிக ஆழமாக சொல்லி., நல்ல மனிதனின் குணத்திற்க்கு இறப்பே இல்லையென பதிய வைத்தது. மிக அருமை குரு.💐🤝🏻👍🏻


    கதை 6 "பிச்சை புகினும்" சகித்து, சலித்து,மரத்து, மறந்து,பொறுத்து.,  வாழ்பவள் பெண்ணுக்குள்ளும்.. தன்மானதிற்கு., தன் பெற்ற பொண்ணுக்கும் ஒரு  இழுக்கென்றால் நிச்சயமாக... கண்ணகி தான் அவள். அசத்தல் குரு உண்மையை சொல்லனுமென்றால் நானும் சில நேரங்களில் "அங்காயி"😎👏🏻👏🏻👏🏻🤝🏻💐💐🌹






  "அம்மா "நிச்சயமாக கதையல்ல. வாசிக்க வாசிக்க அழுகைதான் வந்தது குரு. ஏனென்றால் என்னுடைய  அப்பா அதே நிலையில் தான் இருந்தார் "சாமிக்காளை" இடத்தில் நான். சில மனிதர்கள்  ஏதோ.... வானத்தில் இருந்து குதித்ததைபோல, பேச்சும், செய்கையும், பார்க்கும் போது மனசு ரொம்ப வேதனையாய் இருக்கு குரு. எது உதவி, எது நிரந்தரம், எது நிலைக்கும், என தெரியாதைப்போல் நடிக்கும் பொய்யர்கள் குரு. அப்படி இருப்பவர்களை அசைத்து போக வைக்கும் பேரழகான அம்மா காவியம்.

   


      கதை 7 "ஊமச்சி"குடும்ப கஷ்டத்தை நம்மிடம் சொல்லாமலே...  அந்த சிறுவயதிலும் பெற்றோரை புரிந்து நடந்துக்கொண்ட கடைசி தலைமுறை நாமாக தான் இருப்போம். குழம்பில் வெட்டிப்போட்ட காய்களை கரண்டியில் எடுக்கும் போதே பங்கு வைத்து எடுத்துக்கொள்வோம்.🥰😊👌🏻👌🏻அப்படியே... கிராமிய பேச்சை யதார்த்தமாக கொண்டுபோன விதம் பேரழகு..


      கதை 8 "தட்டுவண்டியும் தங்கராசும்"கதைக்குள் கதை என்பதையே.. மறந்து போக வைத்தது குரு. ஆனால் கதை ஆரம்பத்திற்கும் முடிவிற்கும் சிறப்பாக முடுச்சு ஒன்று போட்டு விட்டீர்கள். அருமை குரு.👌🏻👌🏻👍🏻🌸


     கதை 10 "சொன்னபடி வாழு"அசத்தல் குரு தலைப்பே.. நச்.
நிறைய பேர் அப்படி வாழ்வதே.. இல்லை. வாழ்ந்தால் நல்லாருக்கும்...💐👍🏻🌸👌🏻


    கதை 11."கருப்புச்சட்டையும் கத்தி கம்புகளும்.."சாதி பார்ப்பவகளுக்கு சாட்டையடி குரு. மனுசனுக்கு.... முன்னாடி மனுசன் தான். என்பதையும்., உயிரின் மதிப்பையும்., கிராமத்தில் நடக்கும் அவலத்தையும்., நாம் வாழ்ந்த வாழ்க்கையையும்.. இனி எப்படி வாழ வேண்டுமென்ற விழிப்புணர்வும்., வழி நடத்தும் இன்னுமொரு நசீர் பாய்.. உங்கள் எழுத்துக்கள் குரு. "அந்த வானம் முழுவதுமாய் விதைவை கோலம் பூண்டிருந்தது" அருமை அருமை குரு. வேதனையின் உச்சம். "ஆள்காட்டி பறவைக்கூட வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டிருந்தது." வேதனை குரு. அற்புதமான படைப்பு  குரு இன்னும் படைத்திட மனமார்ந்த வாழத்துகள் குரு💐💐👏🏻👏🏻👏🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻


புதன், 4 செப்டம்பர், 2019

சோலச்சி என்னும் நான் ஆசிரியராக - சோலச்சி




இது விளம்பரம் அல்ல........சோலச்சி


         புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் குடுமியான்மலை ஊராட்சி மரிங்கிப்பட்டி அரசு ஆரம்பப்பள்ளியில் 2006 முதல்......


வீட்டில் படுத்துக்கொண்டு
விட்டத்தைப் பார்த்திருந்தால்
விட்டதெல்லாம் கிடைத்திடும்
என எண்ணும்
வேடிக்கை மனிதரல்ல நாம்....

தொட்டது துலங்கிட
தூங்கிடாது களம் காணும்
திட்ட மறவர்கள் நாம்....
                - சோலச்சி



    சோலச்சி 





மாணவர்கள் மனதில் பூட்டிக்கிடக்கிடக்கும் அறிவுப் புதையலை வெளிக்கொணரும் அறிவாயுதமே ஆசான் - சோலச்சி



விடுதலை நாள் விழா கொண்டாட்டம்




புதுக்கோட்டை பேராசிரியர் விஸ்வநாதன் அவர்களின் பேரன்பின் முயற்சியில் என் மாணவர்களுக்கு புத்தாடை  


மாணவர்களோடு பயிற்சியில்






நியூயார்க்கிலிருந்து வருகை தந்த சகோதரி ஜனாவுடன் மரக்கன்று நடுதல்







தோட்டக்கலைப்பண்ணையில் இலக்கிய விழா






குடுமியான்மலை தோட்டக்கலைப் பண்ணைக்கு மாணவர்களோடு களப்பயணம்   






குடுமியான்மலை களப்பயணம்





கல்விச் சுற்றுலா தரங்கம்பாடி




பள்ளிக்குச் சுற்றுச்சுவர் வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு மனு



அஞ்சல் அட்டை உறவினர்களுக்கு எழுதுதல்




பனை ஓலைப் பாய் பின்னும் பயிற்சி அளித்தல்




Indian Express நாளிதழில்




கலையும் கைவண்ணமும்



ஆத்திமாலை வார இதழில் 


பசுமை அறக்கட்டளை மூலம் மாணவர்களுக்கு இலவச குறிப்பேடு



வாரந்தோறும் வியாழக்கிழமை மாணவர்களின் அமைச்சர்கள் கூட்டம்










மாணவர் தேர்தலில் வாக்களிக்க வரிசையில் நிற்கும் மாணவர்கள்


வெற்றி பெற்ற மாணவர்கள் உறுதிமொழி 


மாணவர்களின் தேர்தல் பார்வையிடல், பத்திரிக்கையாளர்கள் மா.மு.கண்ணன் மற்றும் இலட்சுமணன்




குழந்தைகள் நல மருத்துவர் அய்யா இராமதாசு, பேராசிரியர் அய்யா விஸ்வநாதன் அவர்களுடன் மாணவர்களுக்கு இலவசமாக காலணிகள் மற்றும் புத்தகப்பை வழங்குகிறார்கள் வெளிநாடு வாழ் சகோதரி சாந்தா








மாணவர்களுக்கு எழுதுகோல்,குறிப்பேடு மற்றும் பேனா மை வழங்கி மகிழ்கிறேன்.அருகில் சித்தமருத்துவர் திருமதி.மீனா அவர்கள். 




திருப்பதியாக இருந்த என்னை எழுத்தாளர் சோலச்சியாக இந்த உலகுக்கு அடையாளப்படுத்திய என் குரு 
திருமதி சோலச்சி அவர்களுடன்



முதலுதவி செய்தல்



 



குழந்தைகள் இனிது





பள்ளியில் ஆண்டுவிழா




மாணவர்கள் கட்டிய மணல் வீடு திறப்பு விழா


மாணவர்களை புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவிற்கு அழைத்துச் செல்லுதல்



ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் (சனவரி2019) கலந்து கொண்டு மூன்று நாள் சிறைவாசம் மற்றும் பணியிடை நீக்கம் பெற்று மீண்டும் பணியில் சேர்ந்த போது





குறும்புக்கார குழந்தைகளுடன்



பள்ளிக்கு வராத மாணவர்களை வீடு தேடி சென்று அழைத்து வருதல்




மாணவர்களுக்கு குறிப்பேடுகள் வாங்கி கொடுத்து மகிழுதல்


சோலச்சி வாழும் அரண்மனை




களிமண் பொம்மைகள் செய்தல் 








மாணவர்களிடம் நடித்துக் காட்டுதல்


நாள்தோறும் மாணவர்களோடு மதிய உணவு



வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை இலக்கிய விழா




இலக்கிய இதழ்கள், பத்திரிகைகள் வாசித்தல்


களப்பயணம் குடுமியான்மலை தோட்டக்கலைப் பண்ணை 



புதிதாக தொடங்கப்பட்ட உய்யக்குடிப்பட்டி பள்ளியில் 
முதல் தேசியக்கொடியை ஏற்றுதல் மற்றும் நடனத்துடன் கற்பித்தல்





பள்ளி வளாகம் முழுவதும் மரக்கன்றுகளை நடுதல்


பள்ளியின் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தல்




மாணவர்களின் கற்றல் மீது சிறப்புக் கவனம்



என் தந்தை மற்றும் அண்ணன் கவிஞர் புதுகை தீஇர அவர்களுடன்




பள்ளிகளிடையே அறிவியல் கண்காட்சியில்




நான் எழுதிய நூல்கள்



சிறுகதைகள் நூல்


கவிதை நூல்



சிறுகதைகள் நூல்



கவிதை நூல் 


பனியில் நனைந்த காற்று
என்னுள் நுழைந்து
குளிர் போக்கிக் கொள்கிறது...
- சோலச்சி


தரங்கம்பாடி

அர்ப்பணிப்போடு பணிகள் தொடரும்
பேரன்பின் வழியில்
சோலச்சி புதுக்கோட்டை
தமிழ்நாடு
பேச:9788210863