செவ்வாய், 3 டிசம்பர், 2019

நானிலம் மாந்தநேய இலக்கிய மாத இதழ் வெளியீட்டு விழா





                              நானிலம்


       மாந்த நேய இலக்கிய மாத இதழ் வெளியீடு



       

               29.11.2019 வெள்ளிக்கிழமை காலை பத்து மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அண்ணாமலை திருமண மண்டபத்தில் எழுத்தாளர் வாழை.பூ. மணிமொழி அவர்களை ஆசிரியராக கொண்ட "நானிலம்" மாத இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவினை தமிழ்த்திரு.தாமோதரன் அவர்கள் வரவேற்க, எழுத்தாளர் சோலச்சி தொகுத்து வழங்க விழாவிற்கு மருத்துவ நுண்ணறிஞர் டாக்டர்.ஆ.அழகேசன் அவர்கள் தலைமை ஏற்க வணக்கத்திற்குரிய அய்யா புதுக்கோட்டை பாவாணன் அவர்களும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் வணக்கத்திற்குரிய அண்ணன் சிந்தனைச் செல்வன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

       ''நானிலம்'' மாத இதழை விழா மேடையில் சிறப்பு விருந்தினர்கள் வெளியிட நான்குநாடு அமைப்பின் பொறுப்பாளர்களான தமிழ்த்திரு.சி.கலைமணி அவர்கள்,  தமிழ்த்திரு.சி.கல்யாணசுந்தரம் அவர்கள், தமிழ்த்திரு.ஆ.பூமிராஜன் அவர்கள், தமிழ்த்திரு.எஸஹ.மகாலிங்கம் அவர்கள், தமிழ்த்திரு.சொ.சண்முகம் அவர்கள் பெற்றுக்கொண்டனர்.

        விழாவில் வழக்கறிஞர் தமிழ்த்திரு.ஆ.இளையராஜா,  ஜனசக்தி மாவட்ட பொறுப்பாளர் தமிழ்த்திரு.த.செங்கோடன் அவர்கள், தமிழ்த்திரு.சண்முகநதி வேளாண்மை பொறியியல் துறை அவர்கள், ஓய்வுபெற்ற ஆங்கில விரிவுரையாளர் தமிழ்த்திரு.சி.பாலையா அவர்கள், ஓய்வுபெற்ற கருவூலத்துறை அலுவலர் தமிழ்த்திரு.த.சிவலிங்கம் அவர்கள்,  வாராப்பூர் தலைமை ஆசிரியர் தமிழ்த்திரு.முனைவர் கருப்பையா போன்றவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.


       விழாவில் நினைவில் வாழும் சமூகப் போராளிகளான


கீழக்குறிச்சி கே.வி.சின்னையா அவர்கள்,

செவலூர் செ.ப.பெரியையா அவர்கள் , 

மேலமேலநிலை லெ.கருத்தையா அவர்கள்,

 சித்தூர் எம்.குமாரசாமி அவர்கள் ,

 சுந்தரப்பட்டி கே.ட்டி.ராமையா அவர்கள், 

கூடலூர் சி.சின்னையா அவர்கள்,

 கொன்னையூர் பழ.அழகப்பன் அவர்கள் , 

 வார்ப்பட்டு சி.பழனிச்சாமி அவர்கள்,

  கிழவயல் ஆ.கோபால் அவர்கள் , 

அறமேடு அ.பழனியப்பன் அவர்கள் , 

பூலாங்குறிச்சி சி.பிச்சன் என்கிற பரங்கிக்காய்  அவர்கள் 


                   - குடும்பத்தாருக்கு பாராட்டும் நினைவு பரிசும்

 வாழும் போராளிகளான 

மருத்துவகுடிப்பட்டி தமிழ்திரு.சொ.சிதம்பரம் அவர்கள்,

 பேயால் தமிழ்த்திரு.க.மாணிக்கம் அவர்கள்,  
பொன்னமராவதி தமிழ்த்திரு.பழ.அன்பழகன் அவர்கள், 
திருக்களம்பூர் தமிழ்த்திரு.ப.அழகேசன் அவர்கள், 
ஆரணிப்பட்டி தமிழ்த்திரு.கரு.பழனியப்பன் அவர்கள்,  
வாழைக்குறிச்சி தமிழ்த்திரு.பூ.மணிமொழி அவர்கள் 


       என அனைவருக்கும் பாராட்டும் நினைவு பரிசும் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.


       விழாவில் கோநாடு, பொன்னமராவதி நாடு, மேமுக நாடு, பூங்குன்ற நாடு அமைப்பின் பொறுப்பாளர்களும் நான்குநாட்டின் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். எழுச்சிக்கவிஞர் நெய்வேலி.வே.முருகேசன் அவர்கள் நன்றி கூறினார்.

 
      நிகழ்ச்சியினை ஆசிரியர்குழு வாழை அண்ணா பெ.ராசு, பேராசிரியர் செல்வராசு,கு.வெள்ளைச்சாமி,  ரெ.தமிழமுதன், லெ.செல்வநாயகம் பிள்ளை,  அ.ராஜன், ஆ.பூமிராஜன், அ.முருகன்,  வெ.சுரேஷ், வைகை மு.ஆ.தங்கராசன், சி.பூ.முடியரசன், ந.பாலசுப்ரமணியன் ஒருங்கமைத்தனர்.


குறிப்பு : நிழற்படம் உதவி வாசுகி ஒளிப்பட நிலையம் செங்குட்டுவன்





                                  "நானிலம்"இதழ் குழுவினர்



 
      ஆசிரியர் குழுவினர் இதழாசிரியர் வாழை பூ.மணிமொழி அவர்களை வரவேற்கின்றனர்.




    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தமிழ்த்திரு.சிந்தனைச்செல்வன் அவர்கள்







            விழா அரங்கின் முன் வரிசையில் சிறப்பு விருந்தினர்கள்


         
                            தமிழ்த்திரு.பி.தாமோதரன் அவர்கள் 
                                    வரவேற்புரை நிகழ்த்துகிறார்.




தலைமை உரை நிகழ்த்துகிறார் மருத்துவ நுண்ணறிஞர் 
தமிழ்த்திரு.ஆ.அழகேசன் M.S.,MCH.,FAIS.,FICS அவர்கள் 




''நானிலம்'' மாந்த நேய இலக்கிய மாத இதழ் வெளியிடப்படுகிறது.



பொதுச்செயலாளர் அவர்களுடன் சோலச்சி





                பொதுச்செயலாளர் அவர்களுக்கு நினைவு பரிசு       
                                          வழங்கப்படுகிறது.






''நானிலம்'' மாத இதழின் முகப்புப்படம்





             விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தமிழ்த்திரு.சிந்தனைச்செல்வன் அவர்கள் உரை நிகழ்த்துகிறார்.




         மருத்துவர் தமிழ்த்திரு.பழ.மகாலிங்கம் MBBS அவர்கள் 
                                நினைவு பரிசு வழங்குகிறார்.




              குழு புகைப்படம் பொதுச்செயலாளரின் இடதுவலதாக 
                                        சோலச்சி மற்றும் தாமோதரன் 




                                            சிறப்பு விருந்தினர் 
         தமிழ்த்திரு.புதுக்கோட்டை பாவாணன்அவர்கள்
                                   உரை நிகழ்த்துகிறார்.





இதழாசிரியர் வாழை பூ.மணிமொழி, சோலச்சி, பொதுச்செயலாளர், மருத்துவ நுண்ணறிஞர் மற்றும் ஜனசக்தி மாவட்ட பொறுப்பாளர்




                  மருத்துவ நுண்ணறிஞர் ஆ.அழகேசன் அவர்கள் 
                                             உரை நிகழ்த்துகிறார்





                         எழுச்சிக்கவிஞர் நெய்வேலி.வே.முருகேசன் 
                                                             மற்றும் 
                ஆசிரியர் லெ.செல்வநாயகம் இவர்களுடன் சோலச்சி



                 விழாவில் கலந்துகொண்ட சான்றோர் பெருமக்கள் 




                                             விழாவின் தொடக்கத்தில் 
        வயலின் இசைக்கச்சேரி நிகழ்த்துகிறார் தோழர் மாரிமுத்து






                          இதழாசிரியர் வாழை.பூ.மணிமொழி அவர்கள்
                                              சிறப்பு செய்யப்படுகிறார்.




                       ஜனசக்தி இதழின் மாவட்ட பொறுப்பாளர்
         தோழர் த.செங்கோடன் அவர்கள் உரை நிகழ்த்துகிறார்.







பொதுச்செயலாளர் அவர்களுடன்  தமிழ்த்திரு.தாமோதரன் அவர்கள்





பொதுச்செயலாளருடன் தமிழ்த்திரு.தாமோதரன் அவர்கள், தமிழ்த்திரு முனைவர்.கருப்பையா அவர்கள்,  தமிழ்த்திரு.மணிமுத்து அவர்கள்,  தமிழ்த்திரு.செங்குட்டுவன் அவர்கள், தமிழ்த்திரு.கல்யாணசுந்தரம் அவர்கள்


பொதுச்செயலாளருடன் ஆசிரியர்குழு தமிழ்த்திரு ந.பாலசுப்ரமணியன் அவர்கள் 


பேரன்பின் வழியில்
சோலச்சி