ஞாயிறு, 19 ஜனவரி, 2020

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சமூக நல பேரவை விழா - சோலச்சி

      

          நடிகர் திலகம் சிவாஜிகணேசன்                                          அவர்களின்    

            92ஆவது பிறந்தநாள்விழா






       நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின்  92ஆவது பிறந்தநாள்விழா 19.01.2020 ஞாயிற்றுக்கிழமை காலையில்  ஒருநாள் நிகழ்வாக புதுக்கோட்டையில் இயங்கி வரும் நடிகர்திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் கொண்டாடப்பட்டது. அதில் எனது கவிதை .....


                               சிவாஜி விருது பெறுகின்றேன்


ஆழ்ந்த உறக்கம்
நடுநிசி என எண்ணுகின்றேன்

என் தோள்பட்டையில்
யாரோ தீண்டுவதாக உணர்கிறேன்

ம் ..... தூங்கு

என் சின்னவனாக இருக்குமோ என்று
சினுங்கியபடி உறக்கத்தை தொடர்கிறேன்

மீண்டும் அதே தீண்டல்

தம்பி.........

என்கிறது கனத்த குரல் ஒன்று...

விழிகளை விரிகோணத்திற்கு
கொண்டு செல்கின்றேன்...

தலையில் கிரீடம்
இடையில் கூர்வாள்
மின்னும் பொன்னிற மேனி...

யார்...யார்.....
எனக்குள் வினாக்கள் எழுகின்றன...

கூரிய விழிகளுக்குள்
குடியிருக்கும் கண்கள்
வசீகரத்தோடு பார்க்கின்றன என்னை....

இரவினை ஒளியாக்கி
நடந்து செல்கிறேன் வாசலுக்கு....

குதிரைகள் பூட்டப்பட்ட
தேர் ஒன்று நிற்கிறது ...

தம்பி.....

மீண்டும் கம்பீரக்குரல் கேட்கிறது...

குரல் வந்த திசை நோக்கி
திரும்புகின்றேன்...

''கூடிய நட்பின் இலக்கணமே
பராசக்தியின் மைந்தனே
பாசமலரே
புதிய பறவையே
இரத்தத்திலகமே கர்ணா''
என்றழைக்கின்றேன்....

என் கைகளை இறுக பற்றி
வசீகர பார்வையால்
வாஞ்சையோடு அணைத்து
தோளில் மெல்ல தட்டிக்கொடுத்து
தேரில் அமர்ந்து செல்கிறார்
மருதநாட்டு வீரன் ஜீவகன்....

என்னை நானே
கிள்ளிப் பார்த்துக்கொள்கிறேன்
மெல்ல... மெல்ல...
சொல்லிக் கொள்கிறேன்
கனவு....கனவு...கனவு...

என் விரல்கள்
எழுதுகோல் தீண்டிட
கொட்டுகிறது கவி மழை...

விழி அழகு
விளிக்கும் சொல் அழகு
நடை அழகு
நானிலத்தில் தனியொரு அழகு....

மேடை நாடகங்களில்
நடித்தாய்
மேனியெங்கும்
உணர்ச்சிதனை வடித்தாய்....

நான்காவதாக பிறந்தாய்
நடிகனாக வளர்ந்தாய்
நடிப்பால் உயர்ந்தாய்....

குணசேகரனாக
ஓடினாய் ஓடினாய்
வாழ்க்கையின் கடைசிக்கே ஓடினாய்...

ஓடிய நீ நின்றுவிடவில்லை
பொறுத்தது போதுமென
பொங்கி எழுந்தாய்
மனோகரனாக....

கூண்டுக்கிளியாக
அடைபட்டுவிடாமல்
வீரபாண்டிய கட்டபொம்மனை
எங்கள்
விழிகளில் நிறுத்தினாய்...

உந்தன்
திருவிளையாடலில்
மயங்கியே கிடக்கின்றோம்...

எங்களை
ரசிக்க வைத்துப் பார்ப்பதில்
ராஜபார்ட் ரங்கதுரைதான்...
எனினும்
முதல் தேதியில்
அழவைத்து வேடிக்கை பார்த்தாய்...

அந்தமான் காதலிக்காக
அலைந்து திரிந்து
வசந்த மாளிகை கட்டி
சிவந்த மண்ணில்
ராஜராஜசோழனாக
எங்களுடனே இருக்கின்றாய்....

கலைத்திறனில் செல்வாக்கு பெற்றாய்
கட்சி அரசியலில்
பாடம் நிறையக் கற்றாய்....

நடிப்புத்துறையின் பல்கலைக்கழகம்
நானிலம் போற்றும்
நடிகர் திலகம்...

எங்கள்
சண்முகசுந்தரமே
தில்லான மோகனம்பாளும்
உந்தன்
நாதஸ்வர இசைக்குள்....

எங்கள் கவிச்சக்கரவர்த்தியே
மனம் குளிர வைக்கும்
மிருதங்க சக்கரவர்த்தியே...

முதல் மரியாதை
எப்போதும் உனக்குத்தானே...

யார் சொன்னது....?

ஊட்டி வரைதான் உறவு என்று...!

எங்கள்
ஆறுபடையப்பனை
ஈன்ற தகப்பா...
இப்பாரெங்கும்
உந்தன் படையப்பா....!!!!
                  - சோலச்சி புதுக்கோட்டை 






சனி, 4 ஜனவரி, 2020

பால்ய நண்பர்கள் மற்றும் ஆசிரியர் அலுவலக நண்பர்களுடன் பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகு - சோலச்சி






   

      ''பால்ய நண்பர்களுடன் பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகு'' 
                                                 - சோலச்சி



மாணவர்கள் ஆசிரியர்கள் அலுவலக நண்பர்கள் சந்திப்பு விழா

         நச்சாந்துபட்டி, திருமயம், புதுக்கோட்டை மாவட்டம்









     புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் நச்சாந்துபட்டி நான் படித்த இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் 28.12.2019 சனிக்கிழமை முழுவதும் மாணவர்கள் ஆசிரியர்கள் அலுவலக நண்பர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது. 1998-2000 ஆம் ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் சுமார் நூற்றைம்பது பேர் குடும்பத்துடன் கலந்து கொண்டு  விழாவினை சிறப்பித்தோம்.







       பள்ளியின் தாளாளர் அவர்களுடன் நண்பர்கள் குழு





                     சிங்கப்பூரில் எங்களது நண்பர்கள் 



                              விழா மேடையில் நண்பர்கள்


                விழாவில் தொடக்கவுரையாற்றுகின்றேன்.
     




வரவேற்புரை நிகழ்த்துகிறார் சகோதரி கி.காய்த்திரி
      

        பள்ளியின் தாளாளர் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்குகின்றோம். உடன், நண்பர்கள் கோட்டூர் தங்கவேல் மற்றும் வேலவயல் ரமேஷ்



    நான் இப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தேன். ஐந்தாம் வகுப்பு வரை நான் பிறந்த ஊரான அகரப்பட்டியிலும் எட்டாம்வகுப்பு வரை வயலோகத்திலும் பயின்றேன். ஒன்பதாம் வகுப்பு 1996-1997 இல் இப்பள்ளியில் "F" பிரிவில் பயின்றேன். பத்தாம் வகுப்பு "C" 1997-1998. பதினோறாம் வகுப்பு 1998-1999. பன்னிரெண்டாம் வகுப்பு 1999-2000.










           விடுதியில் ஒன்றாக தங்கிப் படித்த நண்பர் கூத்தம்பட்டி இரா.பாண்டியனுடன் சோலச்சி



       பள்ளியின் தாளாளர் அவர்கள் பத்திரிகை நண்பர்களுக்கு பேட்டி அளிக்கிறார்கள்.     https://youtu.be/72p2rwPTuz0




   ஆசிரியர் பெருமக்கள் திருமதி.சோலச்சி இராமநாதன்,  திருமதி.பூங்கொடி, திருமதி.பெரியநாயகி,  திருமதி. சொர்ணம். நீண்ட நாடுகளுக்குப் பிறகு சந்தித்து அன்பினை பரிமாறிக்கொள்கிறார்கள்.


1998- 2000 இல் படித்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள்தான் இவ்விழாவினைக் கொண்டாடினோம்.
   முதன் முதலில் கி.காயத்திரி, கிட்டு என்கிற கோபாலகிருஷ்ணன் கண்ணம்மை போன்ற பதிமூன்று தோழர்களால் ஆரம்பிக்கப்பட்ட வாட்ச்அப் குழுவானது முப்பத்தொன்பது நண்பர்களாக விரிவானது. அந்த முப்பத்தொன்பது நண்பர்களில்தான் நானும் வந்து சேர்ந்தேன்.
     மகிழ்ச்சியான நிகழ்வு....





ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாய் செலவில் 1998-2000 பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களால் கட்டப்பட்ட அரங்கு முன்னால் 
         நண்பர் பரணிக்குடிப்பட்டி ரமேஷ்பாண்டி







   விழாவில் வழங்கப்பட்ட நினைவுப்பரிசு பேனாவுடன் நண்பர்கள் பொன்னனூர் வடிவேல், அரங்கினாம்பட்டி கருப்பசாமி, விராச்சிலை பழனிவேலு, முருகானந்தம் மற்றும் மல்லாங்குடி இராஜேந்திரன் 


28.07.2019 ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கிளிக்கான படங்கள்.


28.07.2019 ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கிளிக்கான படங்கள்.

 


28.07.2019 ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கிளிக்கான படங்கள்.



28.07.2019 ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கிளிக்கான படங்கள்.





28.07.2019 ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கிளிக்கான படங்கள்.


28.07.2019 ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கிளிக்கான படங்கள்.



    25.02.2018 ஞாயிற்றுக் கிழமை காலை பத்துமணி எப்போது வரும் என்று எதிர்நோக்கி காத்துக்கொண்டு இருந்தேன். 1998-2000 இல் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் நச்சாந்துபட்டி இராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம்வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தோழி கி.காய்த்திரி, தங்கவேல் மற்றும் தோழர் சுரேஸ் என்கிற காளை ஏற்பாடு செய்திருந்தனர்.


😜 


  பள்ளியின் தாளாளர் அவர்களுக்கு விழா அழைப்பிதழ் வழங்கி மகிழ்கிறோம்.




நண்பர்கள் சேக்அப்துல்லா, வேலவயல் ரமேஷ் மற்றும் காளை சுரேஷ் இவர்களுடன் சோலச்சி


      நான் பனிரெண்டாம் வகுப்பு படித்த வகுப்பறையில் முதல் பெஞ்சில் அதே இடத்தில் நண்பர் சேக்அப்துல்லாவுடன் தற்போதைய மாணவர்கள் 



   நண்பர்கள் சேக்அப்துல்லா, கி.காயத்திரி, வேலவயல் ரமேஷ்,  காளை சுரேஷ்,  சோலச்சி, அழகம்மை





     நண்பர்கள் குடும்பத்துடன் விழாவில் கலந்து கொள்கின்றனர்.  அருகில் எங்கள் விடுதி சமையலர் அண்ணன் குரும்பபட்டி திரு. சோலை அவர்கள்


       ஆசிரியர் பெருமக்கள் திருமதி.பூங்கொடி, என்னை ஆளாக்கிய குரு.சோலச்சி இராமநாதன் அவர்கள், நண்பர் ஜெயந்தனுடன் சோலச்சி



      என்னை ஆளாக்கிய குரு சோலச்சி அவர்களுக்கு விழா அழைப்பிதழ் வழங்கி மகிழ்கிறோம்.  அருகில் என் ஆசிரியரின் கணவர் திரு. இராமநாதன் அவர்கள்,  உடன் நண்பர் காளை சுரேஷ். குறிப்பு: நண்பர் சுரேஷை காளை என்று அனைவரும் செல்லமாக அழைப்பதுண்டு.  காளை என்றால்தான் நண்பர்கள் பலருக்கும் தெரியும்.  விழா சிறக்க முழு உடல் உழைப்பையும் வழங்கியவன். இடம்: காரைக்குடி 

       ஆசிரியர் திருமதி பூங்கொடி அவர்களுக்கு விழா அழைப்பிதழை வழங்கி மகிழ்கிறோம்.  (நான் உங்களுக்கு சொல்லித்தரவே இல்லையப்பா. நீங்கள் படிக்க வரும்போது நான் வேறொரு பள்ளிக்குச் சென்றுவிட்டேனே என்றவரிடம் பள்ளிக்கும் உங்களுக்கும் எங்களுக்குமான நட்பினை மேம்படுத்திக்கொள்ள வர வேண்டும்.  நீங்களும் இங்கு பணியாற்றிய ஆசிரியர் என்பதை தற்போது உள்ள ஆசிரியர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என அழைத்தபோது மறுக்காமல் பேரானந்தம் கொண்டு விழாவில் கலந்து கொண்டார்கள். இடம் : காரைக்குடி 





    திருமதி. பெரியநாயகி உடற்கல்வி ஆசிரியர் அவர்களுக்கு விழா அழைப்பிதழ் வழங்கி மகிழ்கிறோம். உடன் நண்பர் காளை சுரேஷ் இடம்: திருமயம்



    வணிகவியல் ஆசிரியர் திருமதி.கமலம் அவர்களுடன் நண்பர் வேலவயல் ரமேஷ், சோலச்சி



விடுதியில் தங்கியிருந்தபோது எங்களுக்கு வேண்டும் உதவிகள் செய்துதந்த விடுதி காப்பாளர் திரு.மணிவேல் அவர்களுக்கு விழா அழைப்பிதழ் வழங்கி மகிழ்கிறோம்.






     விடுதியில் தங்கியிருந்தபோது பணியாற்றிய சமையலர் அண்ணன் கடம்பராயன்பட்டி திரு. சின்னையா அவர்களுக்கு விழா அழைப்பிதழ் வழங்கி மகிழ்கிறோம்.


பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றிய அண்ணன் பிள்ளையப்பட்டி திரு. செல்லன் அவர்களுக்கு விழா அழைப்பிதழ் வழங்கி மகிழ்கிறோம்.


 விடுதியில் தங்கியிருந்த போது பணியாற்றிய சமைலர் அண்ணன் குரும்பபட்டி திரு.சோலை அவர்களுக்கு விழா அழைப்பிதழ் வழங்கி மகிழ்கிறோம். உடன் நண்பர்கள் காளை சுரேஷ், சேக்அப்துல்லா, சோலச்சி, வேலவயல் ரமேஷ்.


       ஆசிரியர் திரு.விஜயகுமார் அவர்களுக்கு விழா அழைப்பிதழ் வழங்கி மகிழ்கிறோம்.


     ஆசிரியர் திரு.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு விழா அழைப்பிதழ் வழங்கி மகிழ்கிறோம்.



  பத்தொன்பது ஆண்டுகளுக்கு பிறகு எல்லோரையும் சந்திக்கப் போகிறோம் என்ற பேரானந்தம்.  எல்லோரையும் அடையாளம் காண முடியுமா. என்னை ஞாபகம் வைத்து கண்டு பிடிப்பார்களா. என்ற எண்ணம் என்னுள் அதிகமாகவே இருந்தது. சரியான நேரத்திற்கு நச்சாந்துபட்டி பெருமாள் கோயில் மண்டபத்திற்கு நானும் நண்பன் விராச்சிலை வ.கருப்பையாவும் சென்றோம். ஒவ்வொரு தோழர்களாய் வர ஆரம்பித்தனர். பத்தாம் வகுப்பில் மொத்தம் நான்கு பிரிவுகள்.  எப்படி பார்த்தாலும் நூற்று அறுபது பேருக்கு குறையாது. ஆனால் வந்ததோ முப்பது பேர்தான். தகவல் தொடர்பு இல்லாததுதான் காரணம்.















விழா செய்தி நியூஸ் ஜெ தொலைக்காட்சியில்

https://youtu.be/Uk0afRzhAUc
















  யார்யார் எங்கு இருக்கிறார்கள் என்ற விபரம் தெரியாததே இதற்கு காரணம். வந்திருந்த தோழர்களோடு அதே பழைய பேச்சு அதே நட்புடன் பேசியது  அளவற்ற மகிழ்ச்சி.  பழைய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டோம். படிக்கும் போது கூட நாங்கள் மாணவிகளிடம் அவ்வளவாக பேசியது கிடையாது. காரணம் பள்ளியின் கட்டுப்பாடு அப்படி இருந்தது.  ஆனால் தற்போது அந்த கட்டுப்பாடுகள் இல்லாமல் எல்லோரும் குடும்பம் பிள்ளைகள் என்று ஆனதால் பக்குவப்பட்ட பேச்சு மெய்சிலிர்க்க வைத்தது.






     பள்ளியின் தாளாளர் அவர்கள்





















   மதியம் சைவம் மற்றும் அசைவ உணவு ஏற்பாடு செய்யப்பட்டு சாப்பிட்ட பிறகு மீண்டும் பேசி மகிழ்ந்து விடைபெற்றோம்.
  ஏதோ இன்று புதிதாய் பிறந்தது போல் இருக்கிறது. அந்த சந்திப்பில்தான் தம்மோடு படித்த அனைத்து நண்பர்களையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய மாணவர்கள் ஆசிரியர்கள் சந்திப்பு விழாவினை நடத்த திட்டமிட்டோம். அதன் தொடர்ச்சியாக அவ்வப்போது கூடினோம். நண்பர்கள் அனைவரும் தங்களால் இயன்ற நிதியை அளித்தார்கள். அதன்படியே 29.12.2019 ஞாயிற்றுக்கிழமை பள்ளியில் சந்திப்பு விழா நடத்துவது என முடிவு செய்து அழைப்பிதழ் தயார் செய்தோம். வேலவயல் ரமேஷ், காய்த்திரி, கண்ணம்மை, தங்கவேல், காளை சுரேஷ், பிலாக்குடிப்பட்டி கண்ணன், பேரரசன், சீத்தாலெட்சுமி, வனிதா, ஜூலி, லோகேஸ்வரி, காத்தாயி, பத்மாவதி, கேசவன், ஞானேஸ்வரன், வீரராகவன், பொன்னையா, சுரேஸ்பாண்டி, அழகம்மை, சேந்தமங்கலம் முருகேசன், ஶீதர், நல்லிப்பட்டி குமார், குலமங்கலம் சமபந்தன், குலமங்கலம் கலா, மாமரத்துப்பட்டி ஜான்சிராணி, குளத்துப்பட்டி பெரியசாமி, நல்லாம்பட்டி பழனி, தெற்குதாளம்பட்டி கருப்பையா,  சேக்அப்துல்லா, ஜெயந்தன், பாண்டிசெல்வம், லெப்ட் சரவணன், பழ.சுப்ரமணியன், விஜி, விஜயா, உமாராணி, நித்யகல்யாணி, சங்கீதா, சுப்புலெட்சுமி, நல்லம்மாள், விராச்சிலை முருகன்,சிங்கப்பூரில் பணிபுரியும் நண்பர்கள் சுந்தரவடிவேல், கூத்தம்பட்டி பாண்டியன்,  மல்லாங்குடி இராசேந்திரன், பொன்னனூர் வடிவேல், நாகரெத்தினம், ரமேஷ்பாண்டி, அறங்கினாம்பட்டி கருப்பசாமி, மெய்யப்பன், முருகானந்தம்,  விராச்சிலை பழனிவேல்,  ரெங்கசாமி இன்னும் நண்பர்கள் பட்டியல் நீளும்.......... (நண்பர்கள் பலரின்  பெயர் பதியாததற்கு மன்னிக்கவும்) நண்பர்கள்  பலரும் சேர்ந்து விழாவினை திட்டமிட்டு செயல்வடிவம் கொடுத்தோம்.








































   தமிழக அரசியலின் உள்ளாட்சி தேர்தல் தேதி 27.12.2019 மற்றும் 30.12.2019 என அறிவிக்கப்பட்டதால் தற்போது பணிபுரியும் ஆசிரியர்கள் பலரும் தேர்தல் பணிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியதால், 28.12.2019 சனிக்கிழமை விழாவினை மாற்றி வைத்தோம்.





























  எங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்கள் மற்றும் தற்போது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அலுவலக நண்பர்கள், மாணவர் விடுதி பணியாளர்கள்  என அனைவரையும் அழைக்க திட்டமிட்டு பள்ளியின் தாளாளரை நண்பர்கள் பலரும் சேர்ந்து தாம்பூலம் தட்டில் பழங்கள் வைத்து அழைப்பிதழை வழங்கினோம். அதன் தொடர்ச்சியாக பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியர் திரு.தங்கமணி அவர்கள் உட்பட முந்நாள் இந்நாள் என அனைத்து ஆசிரியர் பெருமக்கள் மற்றும் அலுவலக நண்பர்கள் என அனைவருக்கும்  அழைப்பிதழ் வழங்கினோம்.









     பள்ளிக்கூடத்திற்கு ஒரு இலட்சத்து எண்பதாயிரம் (1,80,000/-)மதிப்பில் கலையரங்கம் முன்னால் மிகப்பெரிய சீட் கொட்டகை அமைத்துக் கொடுத்தோம்.


     28.12.2019 அன்று காலை எட்டு மணிக்குத்தான் நான் பள்ளிக்கு வந்தேன். முதல்நாள் தேர்தல் பணியில் மணப்பாறை அருகே கவரப்பட்டியில் இருந்தேன். 27.12.2019 வெள்ளிக்கிழமை நண்பர்கள் காலை சுரேஷ்  , மேலவயல் ரமேஷ்,  கேசவன்,  சேக்அப்துல்லா, சுந்தரவடிவேல், கண்ணம்மை, ராஜா என நண்பர்கள் பலரும் சேர்ந்து விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.  காய்கறிகள் வாங்குவது, விழா மேடை அமைப்பது என நண்பர்கள் முழுவீச்சில் செய்திருந்தனர்.  நண்பர் காளை சுரேஷின் உடல் உழைப்பு அளப்பரியது. விழாவுக்கான நினைவுப் பரிசுகளை தேடித்தேடி தேர்வுசெய்ததில் சென்னை வரை சென்று வந்த பெருமை வேலவயல் ரமேஷையே சேரும். நினைவு பரிசுக்காக கண்ணம்மை, காயத்திரி,அழகம்மையும் மிகவும் சிரத்தை எடுத்து செயல்பட்ட விதம் சாலச்சிறந்தது.












  பத்தாம் வகுப்பு பயின்ற வகுப்பறை. நண்பர்களுடன் ஞானேஸ்வரன், சோலச்சி, கண்ணன்,  பொன்னையா, சுப்பிரமணி, கிட்டு.













   நிகழ்ச்சியில் காயத்திரி வரேற்புரை வழங்க நான்(சோலச்சி) தொடக்கவுரையாற்ற தாளாளர் அவர்கள் தலைமை உரை நிகழ்த்த ஆசிரியர் பெருமக்கள் வாழ்த்துரை வழங்க வேலவயல் ரமேஷ் நன்றியுரை நிகழ்த்த மதியம் அறுசுவை உணவுடன் நண்பர்கள் குழு படம் எடுக்க நிகழ்ச்சி நிறைவு பெற்றது.  நிறைவாக எங்கள் நண்பர்கள் நால்வருக்கு ரூபாய் பத்தாயிரம் நிதி வழங்கினோம்.


  
நிறைவான விழா மனதுக்குப் பிடித்தமான விழாவாக அமைந்தது. நண்பர்கள் பலரின் பெயர்கள் தெரியவில்லை.  ஆனாலும் முகம் கொடுத்து மலர்ச்சியுடன் பேசிக் கொண்டோம். ஆசிரியர் பெருமக்களுக்கு நாங்கள் உணவு பரிமாறினோம். நண்பர்கள் தங்களுக்கு உணவோடு பேரன்பையும் பரிமாறிக்கொண்டோம்.


      முந்நாள் இந்நாள் என ஆசிரியர் அலுவலக பெருமக்கள் எண்பது பேருக்கு மேல் வருகை புரிந்திருந்தனர். விருத்தாசலத்திலிருந்து தோழர் ராஜ்மோகன் அவர்கள் புத்தக கடை விரித்திருந்தார்.




     விருத்தாசலத்திலிருந்து வந்திருந்த தோழர் ராஜ்மோகனுடன்

      நண்பர்கள் பலரும் தொழிலதிபர்களாக , ஆசிரியர்களாக, காவல்துறையில்,  பொறியாளர்களாக, எழுத்தாளர்களாக என பலரும் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள். நண்பர்கள் யாவரும் நண்பர்களாகவே இருக்கின்றோம். இந்த பூமி உள்ளவரை எங்கள் பேரன்பு நிலைத்திருக்கும். 






           சிங்கப்பூரில் பணியாற்றும் நண்பர்கள்


    ''இப்பள்ளி வளாகமானது நண்பர்களின் பேரன்பால் நிறைந்து காணப்பட்டது.''


   சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு சரித்திரத்தில் நிலைத்திருப்பது நட்பு மட்டுமே.


   உலக சரித்திர பொன்னேட்டில் 28.12.2019 இல் நடைபெற்ற எங்கள் சங்கமவிழா பொறிக்கப்பட்டுள்ளது.






      உண்ணும் உணவில்
      கலப்படம் உண்டு....
       சுவாசிக்கும் காற்றில்
        கலப்படம் உண்டு....
         எங்கள் நட்பில்
           ஒருபோதும் கலப்படம் இல்லை .......

   
இதுபோன்ற விழாக்களை ஒவ்வொருவரும் முன்னெடுத்துச் செல்வதன் மூலம் சாதிகளற்ற சமுத்துவமான புரட்சிகரமான தேசத்தை உருவாக்க முடியும். அடுத்த தலைமுறையினருக்கு வாழ்வியலின் நெறிதனை வகுத்துக் கொடுத்து வழி நடக்கச் செய்வோம். தேசம் காப்போம்.
      

                                    பேரன்பின் வழியில்
                                 சோலச்சி புதுக்கோட்டை 

                                      பேச: 9788210863