மனசார வாழ்த்துறேன்....
கவிஞர் வைகறை குடும்பத்திற்கு நிதியுதவி
23.02.2017 இன்று தீரர் சத்தியமூர்த்தி மணிமண்டபம் அவரது வாரிசுகள் முன்னிலையில் திறப்புவிழா
"நெல்லுக்கு இரைத்த நீர் வாய்க்கால் வழியோடி......" என்கிறது பழம்பெரும் பாடல் ஒன்று. அந்தப் பாடலுக்கு முழுவதும் பொருத்தமானவர் திருமயத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும் அழகுத்தேவர் அறக்கட்டளையின் நிறுவனர் அண்ணன் சக்திவேல் அவர்கள்.
ஆம் தோழர்களே...
அரசு செய்யவேண்டிய பணியை அல்லது குறிப்பிட்ட கட்சி செய்ய வேண்டிய பணியை தனிமனிதனாக செய்து நிகழ்த்தி வரலாற்று சாதனை படைத்திருக்கிறார். தீரர் சத்தியமூர்த்தி அவர்களுக்கு மணிமண்டபம் திருமயத்தில் கட்டி எழுப்பியுள்ளார்கள். இனி திருமயத்திற்கு சுற்றுலா செல்பவர்கள் கோட்டையை மட்டுமல்ல தீரர் சத்தியமூர்த்தி அவர்களின் மணிமண்டபத்தையும் தவறாமல் காண்பார்கள்.
திறப்புவிழா இன்றைய நாளில் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த பத்து குழந்தைகளுக்கு காதணிவிழா
என் அருமை மைத்துனர் கவிஞர் வைகறை குடும்பத்திற்கு ரூபாய் பத்தாயிரம் நிதி உதவியும்
மற்றும் மதியம் ஐந்தாயிரம் நபருக்கு குறையாமல் அறுசுவை அன்னதானம், இரவு பாட்டு மன்றம் என்று நிகழ்வுகள் ஏராளம். தமிழகத்தின் பிரபலமான கட்சித் தலைவர்கள் மற்றும் முன்னாள் இந்நாள் அமைச்சர்கள் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டர். மணிமண்டபம் கட்ட இருபத்தைந்து இலட்சத்திற்கு மேல் மற்றும் திறப்புவிழா செலவு ஐந்து இலட்சத்திற்கும் மேல் அனைத்தும் தனிமனிதரான அண்ணன் சக்திவேல் அவர்கள்தான்.
கோடிகோடியாய் மூட்டைகட்டி மூவாயிரம் தலைமுறைக்கும் சொத்து சேர்த்து வைக்கும் இந்த மண்ணில்தான் இவர் போன்ற நல்லவர்களும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
இவ்வளவு தாராள மனம் கொண்ட அண்ணன் சக்திவேல் அவர்கள் பணத்தில் கோடீஸ்வரர் கிடையாது. திருமயத்திலும் சிங்கப்பூரிலும் ஓட்டல் தொழில் நடத்தி வருகிறார். தனது தொழில் மூலம் ஈட்டும் வருவாய் அனைத்தையும் தான தர்மங்களுக்கே செலவிடுகிறார்.
வருடந்தோறும் மாணவர்களின் கல்விக்கும் இலக்கியத்திற்கும் முண்டாசு கவிஞர் பாரதியார் பிறந்தநாளில் திருமயத்தில் மிகப்பெரிய விழா எடுத்து தங்கநாணயங்களையும் பணமுடிப்பையும் கல்வி உதவித்தொகையும் நோட்டு புத்தகங்கள் மற்றும் எண்ணற்ற பரிசுப்பொருள்களையும், பங்கு பெறும் அனைத்து மாணவர்களுக்கும் பரிசுப் பொருள்களையும் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணன் சக்திவேல் அவர்களுடன் எனக்கு நட்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் பட்டிமன்ற பேச்சாளர் அண்ணன் கோ.வள்ளியப்பன் அவர்கள்தான்.
வள்ளல் குணம் கொண்ட அண்ணன் சக்திவேல் அவர்களின் பேரும் நல்ல குணமும் மண்ணில் நீங்காது நிலைத்திருக்கும் என்று மனசார வாழ்த்தி மகிழ்கின்றேன்.
3 கருத்துகள்:
எனது வாழ்த்துக்களையும் இண்த்துக் கொள்ளுங்கள் நண்பரே
நிச்சயமாக நண்பரே
கருத்துரையிடுக