அறந்தாங்கி போர்ட் சிட்டி ரோட்டரி கிளப் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு நிகழ்வு மற்றும் நட்புகள் சந்திக்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன். மனசுக்கு நிறைவாக இருந்தது. அறந்தாங்கியில் சுகாதாரத்துறையில் பணியாற்றி வரும் தோழர் மருதமுத்து அவர்கள் தான் கடந்து வந்த பாதைகள் பற்றி மிக உருக்கமாக பேசிய விதம் நெஞ்சை நெகிழ வைத்துவிட்டது. இன்றைய உறவுகளின் நிலை, இயற்கையின் கொடை மற்றும் வாழ்வியலில் கவிதைகள் குறித்த பாதிப்பு மற்றும் ரோட்டரி கிளப்பின் சமூகப் பயன்பாடு பற்றி பேசினேன். நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்த தோழர் மருத்துவர் தெட்சிணாமூர்த்தி, அருமை மாப்பிள்ளை செல்லத்துரை மற்றும் ரோட்டரி கிளப் தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி
2 கருத்துகள்:
மகிழ்ந்தேன்
வாழ்த்துக்கள் நண்பரே
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் நண்பரே
கருத்துரையிடுக