தமிழர் எழுச்சிக்குரல் சூலை - 2017 இதழில் தடையை உடைத்து தமிழை உயர்த்து என்கிற கவிதை வெளியாகியுள்ளது. இந்தக் கவிதை தமிழக கவிஞர் கலை இலக்கியச் சங்கமும் தஞ்சாவூர் பாரத் கல்விக் குழுமமும் சென்ற மாதம் பாரத் கல்லூரியில் இணைந்து நடத்திய கவியரங்கில் நான் வாசித்தது...
அந்த விழாவுக்கு வந்திருந்த தமிழர் எழுச்சிக்குரல் மாத இதழின் ஆசிரியர் தமிழ்த்திரு பத்மநாபன் அவர்கள் என் கவிதையை வெகுவாகப் பாராட்டி கவிதையை என்னிடம் பெற்றுக் கொண்டார்கள். தற்போது சூலை இதழில் வெளியாயுள்ளது. ஆசிரியர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக