அம்மாடி இது என்ன நாடு
இது யாருக்கு இப்ப தாய்த்திருநாடு.....(2)
கிழக்குப் பக்கம் வங்கக் கடலு
அந்தமான் நிகோபர் அதன் உடலு
தெற்குப் பக்கம் இந்தியப் பெருங்கடலு
அதில் இல்லையே சொந்தமா திடலு
தமிழர்களை குட்டிநாடு அடிச்சு விரட்டுது
அவங்களோடதான் இந்த நாடு கொஞ்சி மகிழுது.....
மேற்கு பக்கம் அரபிக் கடலு
இருக்கு ஒன்றிரண்டு தீவுத் திடலு
மூனு பக்கம் சேர்ந்திருக்கு நீரு
நாலாபக்கமும் சாதியம்தான் பாரு
ஒற்றுமைங்கிற சொல்லில் உண்மை இல்லேங்க
இஸ்லாம ஓரங்கட்ட சதியும் நடக்குது....
ஆணி வேரு பூமிய சுத்துது
கிளைகள் யாவும் ஏதேதோ கத்துது
ஒரே நாடா இருக்க ஆசைதானே
ஒரே மொழி இது சாத்தியமா
உடம்பில் ஓடும் இரத்தமெல்லாம் சிவப்பு தானங்க
உயர்வு என்ன தாழ்வு என்ன உணர வேணுங்க....
யார்யாரோ இங்கு பொழப்பு நடத்துறான்
பூர்வ குடிய கொன்னு புதைக்கிறான்
ஒடுக்கப்பட்டவர் முன்னேறக் கூடாதா
ஓஞ்சாதிக்கு மட்டும் ஒருலிட்டர் கூட ஓடுதா
ஆணவமும் சாதியமும் நாட்ட ஆளுது
அத அடிச்சு ஒடுக்க பெருங்கூட்டம் இதோ வருகுது.....
- கவிமதி சோலச்சி புதுக்கோட்டை
பேச : 9788210863
3 கருத்துகள்:
சாதியப் பிடியில் சிக்குண்டு நம் நாடு கிடப்பது வேதனைதான் நண்பரே
கவிதை அருமை
படித்தவர், படிக்காதவர் என்ற பாகுபாடின்றி இந்த சாதி என்பதானது நம்மை மோசமான நிலைக்கு இட்டுச்செல்கிறது.
அருமை நண்பரே
கருத்துரையிடுக