பரிசுக்காய்ப் பாட்டெழுதி
பார் ஏய்க்கக் கூட்டு சேர்த்து
வீணாய் நிலம் சுமக்க
பைந்தமிழே உனைத் தொட்டேன்
என நினைத்தாயோ....!
பார் ஏய்க்கக் கூட்டு சேர்த்து
வீணாய் நிலம் சுமக்க
பைந்தமிழே உனைத் தொட்டேன்
என நினைத்தாயோ....!
நாடி நரம்புகளில் குடியேற்றி
இரத்த நாளங்களாக்கி - தமிழே
தொழுது பாடுகின்றேன்...! - இந்த
வித்தை மறப்பேனோ..?
செத்து போவேனே...!
இரத்த நாளங்களாக்கி - தமிழே
தொழுது பாடுகின்றேன்...! - இந்த
வித்தை மறப்பேனோ..?
செத்து போவேனே...!
ஆயிரமாயிரமாய் கவிதை
அள்ளித் தருபவளே..!
அறுவை மறந்தேன்
தமிழ்ச் சுவை உணர்ந்தேன்...!
அள்ளித் தருபவளே..!
அறுவை மறந்தேன்
தமிழ்ச் சுவை உணர்ந்தேன்...!
உன்னில் கலந்தேனே
உள்ளம் மலர்ந்தேனே...!
உள்ளம் மலர்ந்தேனே...!
உந்தன் திறத்தாலே
அள்ளித் தந்த வரத்தாலே....
சாகாவரம் பெற்றான் சோலச்சி
சரித்திரத்தில் நிலைப்பான் கோலோச்சி.....!!!
சரித்திரத்தில் நிலைப்பான் கோலோச்சி.....!!!
- சோலச்சி புதுக்கோட்டை
4 கருத்துகள்:
உண்மை, சாகாவரமே.
சாகாவரம் பெற்று
சரித்திரத்தில் நிலைக்க
நண்பர் சோலச்சிக்கு வாழ்த்துக்கள்
உன் வெற்றிக்கான இலக்கு சரித்தரமாய் மாறட்டும் கவிஞரே
மகிழ்ச்சி
கருத்துரையிடுக