செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

1998 இல் பத்தாம்வகுப்பு - சோலச்சி

மகிழ்ச்சியான நிகழ்வு....

    25.02.2018 ஞாயிற்றுக் கிழமை காலை பத்துமணி எப்போது வரும் என்று எதிர்நோக்கி காத்துக்கொண்டு இருந்தேன். 1998 இல் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் நச்சாந்துபட்டி இராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம்வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தோழி கி.காய்த்திரி மற்றும் தோழர் சுரேஸ் ஏற்பாடு செய்திருந்தனர்.

  இருபது ஆண்டுகளுக்கு பிறகு எல்லோரையும் சந்திக்கப் போகிறோம் என்ற பேரானந்தம்.  எல்லோரையும் அடையாளம் காண முடியுமா... என்னை ஞாபகம் வைத்து கண்டு பிடிப்பார்களா... என்ற எண்ணம் என்னுள் அதிகமாகவே இருந்தது. சரியான நேரத்திற்கு நச்சாந்துபட்டி பெருமாள் கோயில் மண்டபத்திற்கு நானும் நண்பன் வ.கருப்பையாவும் சென்றோம். ஒவ்வொரு தோழர்களாய் வர ஆரம்பித்தனர். பத்தாம் வகுப்பில் மொத்தம் நான்கு பிரிவுகள்.  எப்படி பார்த்தாலும் நூற்று அறுபது பேருக்கு குறையாது. ஆனால் வந்ததோ முப்பது பேர்தான். தகவல் தொடர்பு இல்லாததுதான் காரணம்.

  யார்யார் எங்கு இருக்கிறார்கள் என்ற விபரம் தெரியாததே இதற்கு காரணம். வந்திருந்த தோழர்களோடு அதே பழைய பேச்சு அதே நட்புடன் பேசியது  அளவற்ற மகிழ்ச்சி.  பழைய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டோம். படிக்கும் போது கூட நாங்கள் மாணவிகளிடம் அவ்வளவாக பேசியது கிடையாது. காரணம் பள்ளியின் கட்டுப்பாடு அப்படி இருந்தது.  ஆனால் தற்போது அந்த கட்டுப்பாடுகள் இல்லாமல் எல்லோரும் குடும்பம் பிள்ளைகள் என்று ஆனதால் பக்குவப்பட்ட பேச்சு மெய்சிலிர்க்க வைத்தது. விரைவில் எல்லோரையும் ஒருங்கிணைக்கும் நிகழ்வும் நடைபெறும்.

   மதியம் சைவம் மற்றும் அசைவ உணவு ஏற்பாடு செய்யப்பட்டு சாப்பிட்ட பிறகு மீண்டும் பேசி மகிழ்ந்து விடைபெற்றோம்.

  ஏதோ இன்று புதிதாய் பிறந்தது போல் இருக்கிறது.....

     

2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஆகா, வாழ்வில் மறக்க இயலா சந்திப்பு
இது போன்ற சந்திப்புகள் தொடர வேண்டும்
வாழ்த்துகள் நண்பரே

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

பாராட்டப்படவேண்டிய முயற்சி. வாழ்த்துகள்.