திங்கள், 13 ஆகஸ்ட், 2018

அழகிய சிநேகிதி - சோலச்சி

சிநேகிதியே சிநேகிதியே என்னில் நீயே பாதி
 பழகுகின்றோம் அதில் இல்லை பீதி
வானவில் ஒரு கோலமா நம் நட்புதான்
மண்ணில் ஆழமா பதிஞ்சதே
நெஞ்சம் அறிஞ்சதே
நட்புதான் காக்குமே நல்ல வார்த்தைகள் பூக்குமே....


தோசம் ஒன்று தொடர்ந்திட வேண்டும்
அதுதான் சந்தோசம்
தேகம் ஒன்று வேண்டவே வேண்டாம்
அதுதான் சந்தேகம்...



விடியும் பொழுதே நினைக்கும் மனமே உந்தன் ஞாபகம்
தேடியும் விரைவில் கிடைக்காது தென்றலென்ற இலாபம்
உடனே கிடைக்கும் உள்ளம் புடைக்கும்
சிலரின் வாழ்விலே....

நேசம் கண்ணே வேசமில்லை
அழகிய நந்தவனம்
வீசும் காற்றும் உன்னால் பேசும்
நீதான் பூவனம்..

தோழி உன்னை நாளும் காண்பேன் எழுதிய மடல்களிலே

நானும் பேசி மகிழ்வு கொள்வேன் உந்தன் மொழிகளிலே
என்னுள் உந்தன் நிழற்படம் உண்டு
நீயும் அறிவாயே.....

பேனா முனைகள் எழுதி எழுதி
உன்னை அழைக்கிறது
உன்னைப் பெற்றது பாக்கியமே
நெஞ்சம் மகிழ்கிறது

தோழமையோடு எந்தன் தோளில் தூரி ஆடுகிறாய்

அறிவின் பாதையில் அமுதம் என்னுள் சூடுகிறாய்
அழகே தோழி அன்பே தோழி
வாழிய பல்லாண்டு....
          - சோலச்சி புதுக்கோட்டை

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை நண்பரே
நட்பு போற்றுவோம்