ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

அழகே..... அஞ்சலை- சோலச்சி

அழகே.... அஞ்சலை...
இந்தக் கதை நீ கேளே.....

வெட்டி வீழ்த்திவிட்டு
அழிந்துவிட்டதென சொல்கிறார்...

தானே காலில் குத்திக்கொண்டு
குத்திவிட்டதென்கிறார்.....

சும்மா கிடந்த பாம்பு தேளின்
சுதந்திரத்தைப் பறித்துவிட்டு
கடித்துவிட்டதென கதறுகிறார்.....

கோடித் துணியின்றி
கோடி மக்கள் தவிக்கயிலே
தன் கூட்டம் சிறக்க குவிக்கிறார்.....

பேரழகே..... அஞ்சலை
பெருமுதலைகள் வயிற்றுக்குள்
இப்பெருநிலம் போனதா தெரியல...

விஞ்ஞானத்தை விண்ணுக்குத்தான்
செலுத்துறான்...

மலையை குடைகிறான்
மண்ணை கடைகிறான்....

காணாமல் போன விமானத்தைக்
கண்டுப்பிடிக்க துப்பில்லை...

கரண்சியை மாத்தியும்
கள்ளப்பணத்திற்கு துப்பே இல்லை....

எதற்காக
பீரங்கி தாக்கி செத்தான் நம் பாட்டன்
இதற்கா
விடுதலை கேட்டான்....

வான சூரியனும்
வலுவிழந்து போகுதடா....

ஞான சூரியனோ
நலிவடைந்து சாகுதடா...

           - சோலச்சி

கருத்துகள் இல்லை: