தாய்ப்பாசம்
விறகு வெட்டிக்கொண்டிருக்கும்
வேலாயி
லாவகமாய் வெட்டுகிறாள்
அந்தக் கருவையை....
ஒவ்வொரு வெட்டு
விழும்போதும்
பளிச்சிடுகிறது அந்த அரிவாள் ....
ஊணான் கொடி கட்டுக்குள்
கட்டுப்படுகிறது
அவளாளேயே உருவாக்கப்பட்ட
அந்த ஒத்தையடிப்பாதை
காத்திருக்கிறது
அவளின் வருகைக்காக ...
உச்சி வெயிலில்
விறகுக் கட்டு சுமந்து
நடையைக் கூட்டுகிறாள்
தன் ஐந்து வயதுக் குழந்தையுடன்....
கவட்டை விரித்து
காத்திருந்த
ஆனான் நெருஞ்சி முள் ஒன்று
அவள் இடது கால் பெருவிரலை
முத்தமிட்டு
சிவப்பாகிக் கொண்டது ...
கட்டையும் விடாமல் - குழந்தை
கைப்பிடியையும் விடாமல்
பெருமூச்சு விடுகிறாள்
பிடுங்கி எறிந்து....
என்னாவது
என் பிள்ளையை
முத்தமிட்டிருந்தால்.....
முடுக்கு கருப்பனை வேண்டிக் கொண்டு
உச்சந்தலையில் முத்தமிட்டு
ஆனான் நெருஞ்சியை
அர்ச்சனை செய்துகொண்டே
போகிறாள் அவள்.....!!!
- சோலச்சி புதுக்கோட்டை
பேச : 9788210863
-''விரிசல்'' கவிதை நூலில் இடம்பெற்றுள்ளது.
2 கருத்துகள்:
கிராமத்து தாய்ப்பாசம் கவிதை அருமை இன்னும் உன் கவிதை மழை பொழியட்டும் அக்கவிதை மழையில் எம்மனம் நனையட்டும்
அருமை வாழ்த்துகள் பா
கருத்துரையிடுக