29.04.2022 வெள்ளிக்கிழமை காலையில் புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) இலக்கிய மன்றக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டேன்.
கல்லூரி வாசலில் ஐவகை நிலங்கள் குறித்த பேரழகு மிகுந்த கோலங்களை மாணவிகள் வரைந்திருந்தனர். ஒவ்வொரு கோலமும் நம்மை அந்த நிலங்களின் வாழ்வியலுக்குள் அழைத்துச் சென்று வியப்பில் ஆழ்த்தின. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பினை தமிழ்த்துறை நிர்வாகம் செய்திருந்தது.
புதுக்கோட்டையின் பெருமைகளையும் கல்லூரியின் செயல்பாடுகளையும் தலைமை உரையில் மிக நேர்த்தியாக பேசிய கல்லூரியின் முதல்வர் அவர்கள் ஓய்வறியா உழைப்பாளியாக இருக்கிறார். கல்லூரியின் முதல்வர் தமிழ்த்திரு. முனைவர் புவனேஸ்வரி அவர்கள் கல்லூரிக்கு கிடைத்த வரம் என்றே உரக்கச் சொல்வேன். தமிழ்த்துறை பேராசிரியர் தமிழ்த்திரு.சாந்தி அவர்கள் உள்ளிட்ட பேராசிரியர்களின் தன்னிகரற்ற செயல்பாடுகளை எண்ணி மனசார பாராட்டி மகிழ்கின்றேன்.
எழுத்தாளர் எஸ்.ராமன் அவர்களின் குடும்பம் எனும் கோலம் சிறுகதை
கிரிஜா இராமச்சந்திரன் அவர்களின் அம்மா வாங்க காசிக்குப் போகலாம் சிறுகதை (மேற்சொன்ன இருவரும் புதுச்சேரி விடியல் இலக்கிய இதழ் படைப்பாளர்கள்)
எழுத்தாளர் இண்டமுள்ளு அரசன் அவர்களின் கெடாவெட்டி குருசாமி சிறுகதை
- என மூன்று சிறுகதைகளை மையமாக வைத்து நான் பேசிய உரை பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகின்றேன்.
கல்லூரி நிர்வாகத்திற்கும் எங்கள் பேராசிரியர் விஸ்வநாதன் அய்யா அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.
பேரன்பின் வழியில்
சோலச்சி
அகரப்பட்டி
1 கருத்து:
வாழ்த்துகள்...
கருத்துரையிடுக