நெகிழ்ச்சியான நிகழ்வு
காலம் தாழ்த்திய பதிவுதான் என்றாலும் காலத்துக்கும் ஏற்ற பதிவு.
2022 மே மாதத்தின் முதல் வாரத்தில் ஓர் அலைபேசி அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசியவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். இவர் எதற்காக என்னிடம் பேசுகின்றார் என்ற நினைப்போடு பேச்சைத் தொடர்ந்தேன்.
2022 மே மாதம் முதல் வாரத்தில் சிதம்பரம் நாடாளுமன்றம் உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் சிவகங்கையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் புதுக்கோட்டை சிப்காட் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர்களால் வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பின்போது அதே பகுதியான ஊரப்பட்டியைச் சேர்ந்த தோழர் பாக்யராஜ் அவர்கள் எனது ''விரிசல்'' என்கிற கவிதை நூலினை எழுச்சித்தமிழர் அவர்களிடம் வழங்கியுள்ளார். நூலினை ஆவலோடு பார்த்துவிட்டு, இந்நூல் சோலச்சியின் நூலாச்சே. நான் வாசித்திருக்கின்றேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று கூறிக்கொண்டே அருகில் இருந்த விசிக வின் மண்டல அமைப்புச் செயலாளர் அண்ணன் பெரம்பலூர் இரா. கிட்டு அவர்களிடம் கொடுத்து , இதை வாசித்துவிட்டு எழுத்தாளரிடம் பேசுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
மண்டல அமைப்புச் செயலாளர் அண்ணன் பெரம்பலூர் இரா.கிட்டு அவர்களும் நூலினை முழுவதுமாக வாசித்துவிட்டு ,ஏற்கனவே முதல்பத்தியில் சொன்னது போல் அலைபேசியில் தொடர்பு கொண்டு சில கவிதைகள் குறித்து சிலாகித்துப் பேசினார். பேசியதோடு நிறுத்திக்கொள்ளாமல் "சோலச்சி... எத்தன நூல் எழுதிருக்கீங்களோ அதுல மொத்தமா நூறு பிரதி கொடுங்க'' என்றார்.
நூறா...என்று சற்றே புரியாமல் தயக்கம் கொள்ள, உரிய விலை கொடுத்து வாங்கிக்கிறேன் என்று சொல்லி நூறு பிரதிகளையும் உரிய விலை கொடுத்து பெற்றுக்கொண்டதில் கூடுதல் மகிழ்ச்சி.
தான் மட்டும் வளராமல் தன்னோடு இருப்பவர்களையும் அறிவார்ந்தவர்களாக ஆக்குவதிலும் , நான் இந்த நூலை வாசித்திருக்கின்றேன் நீங்களும் வாசியுங்கள் என்று சொல்லி படைப்பாளர்களை உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கும் பேராற்றல் படைத்த எழுச்சித்தமிழர் அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் ஆளுமையைக் கண்டு வியக்கின்றேன். பெருமை கொள்கிறேன்.
எழுச்சித்தமிழர் அண்ணன் முனைவர் தொல்.திருமா அவர்களுக்கும் மண்டல அமைப்புச் செயலாளர் அண்ணன் பெரம்பலூர் இரா.கிட்டு அவர்களுக்கும் நூறு பிரதிகளையும் பெறுவதற்கான பணிகளை செய்த தோழர் பெரம்பலூர் நீதி பூங்கா அவர்களுக்கும் எனது நூலை தலைவர் அவர்களிடம் கொண்டு சேர்த்த தோழர் ஊரப்பட்டி பாக்யாராஜ் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.
தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி.
அமைப்பாய் திரள்வோம்
பேரன்பின் வழியில்
சோலச்சி அகரப்பட்டி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக