செவ்வாய், 4 மார்ச், 2025

அன்பை அறுவடை செய் - சோலச்சி

 

02.03.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி. 

புதுக்கோட்டையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - அம்பிகா கல்வி அறக்கட்டளை மற்றும் உலகத்தமிழ்க் கவிஞர்கள் கலை இலக்கியச் சங்கம் இணைந்து   422-வது இளந்தென்றல் கவியரங்கத்தை மிகச் சிறப்பாக நடத்தினோம். 50 கவிஞர்கள் "அன்பை அறுவடை செய்" என்கிற தலைப்பில் கவிதை வாசித்தார்கள். அனைவருக்கும் பாராட்டு சான்றிதழும் பொன்னாடையும் அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. 



நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்வை மிகச் சிறப்பாக சத்தியமாக்கிய தோழர்கள் அனைவருக்கும் பேரன்பின் நன்றிகள். 

செம்மொழிப் போராளி கவிஞர் க.ச.கலையரசன் அவர்களுடன்

செம்மொழிப் போராளி கவிஞர் க.ச.கலையரசன் சென்னை அவர்களுக்கும், மகளிரின் பாதுகாப்பு அரணாகவும் ஒடுக்கப்பட்டு கிடக்கின்ற குழந்தைகளின் வாழ்வுக்கு உற்ற துணையாக நிற்கும் அம்பிகா கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் தமிழ் திரு. சந்திரா ரவீந்திரன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கின்றோம்.

தமிழ்த்திரு.சந்திரா ரவீந்திரன் அவர்களுக்கு
சிறப்பு செய்யப்படுகிறது

இந்நிகழ்வு மூலம் புதுக்கோட்டையில் இளம் கவிஞர்களை கண்டடைந்து இருக்கின்றோம். குறிப்பாக பெண்கள் தன்முனைப்பாக கலந்து கொண்டு அன்பை அறுவடை செய்த விதம் மிகவும் பாராட்டுக்குரியது. புதுக்கோட்டை மாநகர் எப்போதும் இலக்கிய கோட்டைதான்.




புதுக்கோட்டை பேருந்து நிலையம் பின்புறம் உள்ள  அறிவியல் இயக்க அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு  அம்பிகா கல்வி அறக்கட்டளை நிறுவனர் தலைவர் சந்திரா ரவீந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வரவேற்புரையும் தொகுப்புரையும் வழங்கினேன். தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய இந்நிகழ்விற்கு  கலை இலக்கிய சங்கத்தின் மாவட்ட தலைவர் கவிஞர்.வீ.க.பொன்னையா தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் தோழர் பாலச்சந்திரன் மற்றும்  தேசியக்கவிஞர் புதுகைப் புதல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 





























தோழர் பாலச்சந்திரன் அவர்களுக்கு சிறப்பு செய்யப்படுகிறது.

உலகத் தமிழ்க் கவிஞர்கள் கலை இலக்கியச் சங்கத்தின் தலைவர் செம்மொழிப் போராளி கவிஞர். க.ச.கலையரசன் அவர்கள் 12000 கவிதைகள் இடம்பெறும்  உலக சாதனை தொகுப்பை பற்றி விளக்க உரை ஆற்றினார். என்னை முதன் முதலில் கவியரங்கத்தில் மேடை ஏற்றி பேச வைத்தவர் செம்மொழிப் போராளி கவிஞர் க.ச.கலையரசன் அவர்கள் ஆவார். 1998 இல் சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மே மாதம் பத்தாம் வகுப்பு விடுமுறை நேரத்தில் உணவகம் ஒன்றில் வேலை பார்க்கின்ற பொழுது இவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் பணியாற்றிக் கொண்டிருக்கும் உணவகத்தின் எதிரே நடந்த திறந்தவெளி பொதுக்கூட்டத்தில் என்னைப் பேச வைத்தார்கள். கவிஞர் என்கின்ற அடைமொழியுடன் என் பெயர் முதன் முதலில் அழைப்பிதழில் அச்சில் வந்தது. என்னுடைய பேச்சை நான் பணியாற்றிக் கொண்டிருந்த உணவாகத்தின் முதலாளி உட்பட அனைவரும் கேட்டு ரசித்து பாராட்டிய நிகழ்வு பசுமையாய் இப்போதும் இருக்கின்றது. இந்தத் தகவலை வரவேற்புரையில் பதிவு செய்தேன்.



சிறப்பு அழைப்பாளர்களான உலகத் தமிழ் கவிஞர்கள் கலை இலக்கிய சங்கத்தின் கவிஞர் எடையூர் நாகராசன் , கொள்கைப்பரப்பு இணைச் செயலாளர். முனைவர். இரா.தங்கமணி ஆகியோர் உலக சாதனை கவிதை தொகுப்பு குறித்தும் தமிழ் கவிதைகள் குறித்தும் உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து 

"அன்பை அறுவடை செய்" என்கின்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்தில் 50 கவிஞர்கள் 24 வரிகளை இலக்காகக் கொண்டு கவிதை வாசித்த விதம் மிகச் சிறப்பாக அமைந்தது. பார்வையாளர்கள் அனைவரும் ஆவலுடன் அரங்கத்திலேயே கூடியிருக்கும் சூழலை உருவாகியது. கவிஞர்களின் ஒவ்வொரு வரியும் கைத்தட்டல்களை வாங்கியது பாராட்டுக்குரியது. நிகழ்ச்சியின் பார்வையாளர்களாக வருகை புரிந்த கவிஞர்.மாரிமதி , கவிஞர் மணிவண்ணன் போன்றோரும் தன்முனைப்போடு உடனடியாக கவிதை எழுதி அசத்தினார்கள். கவிஞர் மு .கீதா, உலக கவிஞர் பீர்முகமது, கவிஞர் நெகாசினி, கவிஞர் செங்கை தீபிகா, கவிஞர் மாங்குடி சிவகுமார், கவிஞர் சிக்கந்தர், முனைவர் மதியழகன், பேராசிரியர் சிவ கவி காளிதாஸ், கவிஞர் கண்ணதாசன், கவிஞர் சின்ன கனகு, கவிஞர் சிவகுமார், கவிஞர் பெருமாள்பட்டி அடைக்கலம், கவிஞர் சத்திய பாமா, கவிஞர் ஜெயராணி, கவிஞர் சங்கமித்ரா,கவிஞர் வள்ளியம்மை சுப்பிரமணி, கவிஞர் இந்துமதி, மரபுகவிஞர் கா.மாலதி, ஒளிரும் வளர்மதி இதழின் ஆசிரியர் கவிஞர் ப.வெங்கடேசன், நானிலம் இதழின் ஆசிரியர் எழுத்தாளர் மணிமொழி, மூத்த விமர்சகர் சுதந்திர ராசன் என் கலந்துகண்ட ஆளுமைகளின் பட்டியல் நீளும்.



நிகழ்ச்சியின் முன்னதாக புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் செயலாளர் தமிழ்த்திரு. தமிழ்ச்செம்மல் சம்பத்குமார் அவர்களின் மறைவிற்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. 



கவிஞர்கள் பலரின் கவிதைகளில் சமூகம் சார்ந்த நிறைய கருப்பொருள்கள் இருந்ததை நம்மால் உணர முடிந்தது. சந்திரா ரவீந்திரன் அவர்களின் தலைமையுரையும் அவர்களின் அன்பை அறுவடை செய் என்கின்ற கவிதையும் கனகச்சிதமாக இருந்தது. பங்கேற்ற தோழமைகள் அனைவருக்கும் அன்பு நிறைந்த நன்றியை தெரிவித்து மகிழ்கின்றோம்.

பேரன்பின் வழியில் 

சோலச்சி 


உலக சாதனை கவிதைகள் குறித்த தொடர்புக்கு: 95515 47027

செம்மொழிப் போராளி 

கவிஞர் க.ச.கலையரசன்




கருத்துகள் இல்லை: