வெள்ளி, 13 ஜனவரி, 2017

பொங்காதிரு......!!! - சோலச்சி

   பொங்காதிரு.......!!!


நெல்லை விளைவித்த
வயல்காடு
சாவையும்
சாவியையும்
அறுவடை செய்தபடி ....!

கழனியில்
கால் வைக்காதவர்கள்
கொண்டாடி மகிழ்கின்றனர்
பொங்கி ...!

எல்லோருக்கும்
சோறு போட்டவன்
கண்கள் நீரின்றி
அழுகின்றன
வீங்கி ..!

பாழடைந்த
பங்களாவைப் போல்
குடல் வெடித்து
கிடக்கிறது
வயல்காடு...!

எங்கோ
ஓர் விவசாயி
விளைவித்த
கரும்புக்கும் அரிசிக்கும்
முண்டியடிக்கிறது
ரேசன் கடை கூட்டம்....!

இலவச கரும்பும்
உப்பு கரிக்கிறது
வரிசையில் நின்ற
விவசாயிக்கு....!

இப்போதெல்லாம்
சாதிய அரசியலைவிட
விவசாய சாவு
அரசியலே
பிரபலமாகிறது....!

சோறு வேணுமாம்
உழவர்
உசுரும் மசுரும்
வெறும் தூசாம்....!

முட்டை அரிசி
தின்பவர்கள்
கூமுட்டைகளாகின்றனர்...!

உழவர்
ஏர் கலப்பை தூக்கி
ஆள்வோர்
நெத்தியில்
அடிக்கும் நாள்
எந்நாளோ.........?...!

பொங்கலே
பொங்காதிரு...
உழவர்
பொங்கி எழட்டும்......!!!

      - சோலச்சி புதுக்கோட்டை

  


5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நெத்தியில் அடிக்கும் நாள் விரைவில் வர வேண்டுகிறேன்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

உழவர் பொங்கி எழட்டும்....

விரைவில் நல்லது நடக்கட்டும்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

அபயாஅருணா சொன்னது…

இந்நிலை விரைவில் மாற இறைவனை வேண்டுகிறேன்

eelabharathi சொன்னது…

தமிழர்திருநாள் வாழ்த்துக்கள்
தமிழன் தமிழர்பூமிமை ஆளும்வரை
விடியாது தமிழனின் இன்னல்