19.03.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை ஆவடி ଞதிண் ஊர்தி மற்றும் இயக்கித் தொழிலகத்தின் முத்தமிழ் மன்றத்தில் எழில் இலக்கிய பேரவையின் உலக மகளிர் தினம் மற்றும் நூல் வெளியீட்டு விழாவில் தோழர் கவிஞர் பொன்.கலைச்செல்வி தலைமையில் கவிதை வாசித்தபோது....
நிகழ்ச்சியில் தோழர் கவிஞர் ஈரோடு தமிழன்பன், பாவேந்தர் பாரதிதாசனின் மகள்வழி பேர்த்தி தோழர் கவிஞர் மணிமேகலை குப்புசாமி, தோழர் கவிஞர் அமுதா பாலகிருஷ்ணன், தோழர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
தோழர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி மற்றும் தோழர் கவிஞர் மணிமேகலை குப்புசாமி இவர்களின் நூல் வெளியீட்டு விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் நல்லதொரு வாய்ப்பினை வழங்கிய போற்றுதலுக்குரிய புலவர் எழில் சோம.பொன்னுசாமி அவர்களுக்கும் கவிஞர் களக்காடு முனுசாமி, கவிஞர் பொன்.இனியன் மற்றும் கவிஞர் தங்க ஆரோக்கியதாசன் உள்ளிட்ட தோழர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நட்பின் வழியில்
சோலச்சி புதுக்கோட்டை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக