////......பத்து மாசம் சுமந்ததுமே......////
பத்துமாசம் சுமந்ததுமே தப்புதான் - நம்
பாவங்களை ஒழிப்துமே எப்பதான்
கண்ணைக்கட்டி காத்துலதான் பறக்கிறோம்
கண்டபடி வாழ்க்கையத்தான் கெடுக்கிறோம்
இது நன்றி கெட்ட உலகமடா
தெருநாய்களாக தெரியுதடா.....
கண்டதையும் சாலையில் போட்டு எரிக்கிறோம்
கண் எரிச்சல் முகத்தை மூடி தவிக்கிறோம்
மார்கழி கடைசியிலே போகி என்பதோ
மனதில் மாசுகளை எரித்து விடுவது...
மண்ணில் புகைவதுமே நாளும் தொடருது
மனுசன் ஊழலுமே நல்லா வளருது....
சுயநலமே கோலோச்சி நிற்குது - அதை
தோற்கடிக்க சோலச்சி பாட்டு அழைக்குது
விரோத செயல்களைத்தான் வேரறுக்க வேணுமடா
துரோகம் செய்வோரெல்லாம் தெரு நாய்கள் தானடா...
கண்ணை மூடி காதைப் பொத்தி நடப்பதால்
குற்றங்கள் எல்லை மீறுதடா....
வெள்ளை வேட்டி சட்டையைப்போல்
மனசு இருக்கனும் வேகம் கொண்டு
நியாயம் கேட்க உள்ளம் பறக்கனும்
பிறர் குடியை கெடுப்பதிலே உந்தன் மகிழ்ச்சியா....
நீ மட்டும் வாழ்ந்தால் இங்கே நிலையும் வேறடா
முடிவில் கொண்டு போவது எனனனு கூறடா......!!!
- சோலச்சி புதுக்கோட்டை
4 கருத்துகள்:
அருமை கவிஞரே சமூகத்துக்கு சரியான சவுக்கடி இருப்பினும் யாருக்கும் வலிப்பதில்லையே... இதுதான் சாபக்கேடு.
அருமையான வரிகள்...
நண்பர் கில்லர்ஜி சொன்னது போல
யாருக்கும் வலிப்பதில்லை...
களம் காண்போம் தோழர்
களம் காண்போம் தோழர்
கருத்துரையிடுக