இன்று, புரட்சியாளர் அறிவின் இலக்கணம் மேதகு அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு
சமூகப்போராளி எழுத்தாளர் அய்யா ராசி.பன்னீர் செல்வம் அவர்கள்
தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்த பொழுது.....
(இடம் :புதுக்கோட்டை நீதிமன்றம் வளாகம்)
"பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாதிக்கப்பட்ட மக்களிலிருந்து தனிமனிதராய் போராடி உலக நாடுகளின் ஒப்பற்ற தலைவராக விளங்கிக்கொண்டு இருக்கின்ற புரட்சியாளர் அம்பேத்கார் அவர்களை சாதிய முத்திரை குத்தி ஒதுக்குவதும் அரசியல் ஆதாயத்திற்காக கட்சியின் சுவரொட்டியில் எங்கோ ஒரு மூலையில் அவரது படத்தை ஒட்டுவதும் இந்திய தேசத்தின் இழிநிலையை அப்பட்டமாக காட்டுகிறது. புரட்சியாளர் அம்பேத்கார் அவர்களை இந்த தேசம் கொண்டாட வேண்டும். தேசத்தின் வெகுமானமாய் கிடைக்கப்பெற்றவரை அவமானப்படுத்தும் அவலநிலையை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும். தலித்துகள் தொடர்ந்து தாக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
மதங்களைக் கடந்து மனிதம் வளர்ப்போம்..!!!
சாதிகளைக் கடந்து சமத்துவமாய் சங்கமிப்போம்..!!!
- நட்பின் வழியில்
எந்நாளும்
சோலச்சி புதுக்கோட்டை
1 கருத்து:
நல்வாழ்த்துகள்...
கருத்துரையிடுக