13.08.2017 அன்று பொதிகை மின்னல் மாத இதழின் விருது வழங்கும் விழா சென்னை கன்னிமரா நூலகம் எதிரில் இக்சா மையத்தில் நடைபெற்றது. ஏழு பிரிவுகளில் இருபத்து ஒன்று நூல்களுக்கு விருதும் ரூபாய் மூவாயிரம் பொற்கிழியும் ஐந்து பத்திரிக்கைகளுக்கு ரூபாய் இரண்டாயிரம் பொற்கிழியும் விருதும் வழங்கப்பட்டது. எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் உள்பட சமகால எழுத்தாளர்கள் கவிஞர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் எனது "கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும் " சிறுகதை நூலுக்கு விருதும் பொற்கிழியும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த பொதிகை மின்னல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் அவர்களுக்கும் நூலினை சிறப்பாக அச்சிட்டு வெளியீடு செய்த நண்பர் இனிய நந்தவனம் சந்திரசேகரன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி.
2 கருத்துகள்:
மனம் மகிழ்ந்தேன்
வாழ்த்துக்கள் நண்பரே
மகிழ்ச்சி நண்பரே
கருத்துரையிடுக