சாவே இல்ல.......!!!!!
என்னைக் காக்கப் பிறந்தவளே
உன் நோக்கம் குலைவதென்னடி
நோகி தவிக்கிறேனடி..! - உன் மனம்
போகியாவது எப்ப.......டி...???
தொட்டுத் தழுவ கேட்கல - மனம்
வெட்டுண்டு தாங்க முடியல....!!!
துட்டுக்காய் கட்டி என்னடி கண்ட
துக்கம் தொடர்வதிலா இன்பம் கொண்ட...!!!
பணம் காய்க்கும் மரமுனா நெனச்ச
பகல் வேசமாய் நடிச்ச....
என்ன நீ சாதிச்ச புரியல
புரியாத மயக்கம் உன்னுள் தெளியல....!!!!
நீயாவது மகிழு அதுவும் இல்ல
அதுக்கு தடை நானா புள்ள...!!!
உனக்குப் பிடிக்குமுனே இருந்தேன்
நான் துடிக்க யாவும் இழந்தேன்....
வருசம் கடந்து போகுதடி
வாய் ருசிக்க நிகழ்ந்தது இல்ல....
எனக்கென்ன போக்குலதான்
அடுப்பு புகையுது
வாந்தி வருதானு வசையும் பொழியுது...!!!!
காடுகரைய வித்து படிக்க வச்சேன்
உன்னில் கிடந்த நகையவுமே
நீ படிக்க வித்தேன்....
உன்னாலும் முடியுமுனு
தைரியம் சொன்னேன்
உன்னதமாய் வாழ நின்னேன்....!!!!
உறவுகளுக்காய் ஒப்பந்தமும் போட்ட
உயிர் பிறக்க பத்திரத்தில்
எழுதியும் கேட்ட ....
அன்பு மோகத்தாலே உன்னை அடைஞ்சேன்
அழகு மேனி மோகம் கொண்டும்
வேதனையில் நனஞ்சேன்....!!!
பணமே வாழ்வு எனில் உசுரு இருக்காது
குணம் இல்லேனா -ஒரு
மசுரும் தங்காது.....
புரிதல் இல்லேனா புண்ணுதானடி
புன்னகை மலர உணர்தல் வேணுன்டி....
இந்த வயசில் வாழலனா கண்மணி
இனி எப்ப வாழப் போற கவனி....
தான் என்பதையும் விட்டுவிடு
தரமான கோபத்தையே கையில் எடு.....
வீணாக உன் வாழ்வு என்னாலே
தானாக போனதுனு வாடுறேன்....
சின்ன வயசு உன்ன நானும்
கட்டிக்கிட்டேன்...! - அதில் என்
பாவத்தை தேடிக்கிட்டேன்....
பாவத்துக்கு மன்னிப்பு கிடையாது - என்
பாவமும் மண்ணில் மறையாது ......
குழந்தையான உனக்கு
குழந்தையும் தந்தேன்
குவலயம் ஏற்க
குற்றமும் செய்தேன் ...! - நீ
நெனச்ச வாழ்வு என்னில் இல்ல
அதனால வாடுறேன் மெல்ல....
விட்டுப்போன
வாழ்க்கையை வாழ்ந்து விடு
வேணும்னா என் உயிர் தவிர
எடுத்துக்கொள்ளு.....
இந்த உசுருக்கு உலகத்தில்
வேலையிருக்கு..!!? - என்
எழுத்தாலே உலகு விழிக்க
வழியும் இருக்கு.....
உண்மையான அன்புக்குத்தான்
ஏங்குறேன்
உயிர் பிரிவதற்குள் கிடைக்குமா
ஐயத்தோடு தங்குறேன்....
நீ நல்லா இரு போதும் புள்ள
என் கூட சண்டை - இனியும்
நியாயமில்ல....
மார்க்ஸ் பாரதி
சாவதும் இல்ல.....!!! - இந்த
மண்ணில் எனக்கும் சாவே இல்ல.......!!!!!
- சோலச்சி புதுக்கோட்டை
2 கருத்துகள்:
உண்மையான அன்புக்குத்தான்
ஏங்குறேன்
உயிர் பிரிவதற்குள் கிடைக்குமா
ஐயத்தோடு தங்குறேன்......,
படிக்கப் படிக்க
மனம் கனக்கிறது நண்பரே
உண்மையான அன்பு என்றுமே தோற்பதில்லை
கனமாகவே இருக்கிறது நண்பரே
கருத்துரையிடுக