வியாழன், 14 செப்டம்பர், 2017

அயோத்திதாச பண்டிதர் - சோலச்சி

        அயோத்திதாச பண்டிதர்.....

                        பாடல்

அடக்கு முறையை உடைத்திடடா
ஆணவக் கொலைகள் தடுத்திடடா
தாழ்த்தப்பட்டவர் என்று சொன்னால்
எரிதழலாய் பொங்கி எழுந்திடடா........

ஆயிரம் விளக்கில் உதித்தவரு
அஞ்சாது நிமிர்ந்து வென்றவரு
நீயும் நானும் தலைநிமிர - அன்றே
வேங்கையாய் வீறிட்டு எழுந்தவரு
இவர் சித்த மருத்துவர் சமூகப்போராளி
அயோத்திதாச பண்டிதர் - நம் தாத்தா
அயோத்திதாச பண்டிதர்....

நீலகிரியிலும் வாழ்ந்தவரு
நீங்காது துயர் கொண்டு கொதித்தவரு
மலைவாழ் மக்களை ஒன்றிணைத்து
அத்வைதானந்த சபையை நிறுவினாரு
அத்தனை மதத்தையும்  அடியோடு வெறுத்தவர்
பௌத்த மதமே சிறப்பென்றார் - நம் தாத்தா
அயோத்திதாச பண்டிதர்.....

ஆதியில் மனிதரில் சாதியில்லை
இடையில் ஆரியர் வந்ததால் யாவும் தொல்லை
நசுக்கப்பட்டு கிடப்பது பட்டியல் இனமடா
சாதிய இந்துக்களே அவாளின் அடியாளா
சத்தியமா  உம் தலையில் வெறும் மண்ணா
திருப்பி அடிக்க திமறி எழுந்தா நாடு தாங்காது
தகாத புத்தியை தகர்த்து எரிந்து
கரம்கொடு பூசல் தங்காது......

     - சோலச்சி புதுக்கோட்டை
      பேச : 9788210863

2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வணங்குதலுக்கு உரிய மாமனிதர்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

பௌத்த ஆய்வு தொடர்பாக நூல்களைப் படிக்க ஆரம்பித்தபோது இவரைப் பற்றி அறியும் வாய்ப்பு கிடைத்தது. கவிதை அருமை.