காதலன் :
எங்கடா இன்னும் அவள காணல
அவளுக்கு மட்டுமா பொழுது விடியல
அவதான்டா என்னோட சம்சாரம்
அவ இல்லாம என்னுள் பாயுது மின்சாரம் ....
அவளுக்கு மட்டுமா பொழுது விடியல
அவதான்டா என்னோட சம்சாரம்
அவ இல்லாம என்னுள் பாயுது மின்சாரம் ....
நண்பன் :
கவலைப்படாதே நண்பா
பொழுது விடியுது
காதலுக்கு அறிகுறியா கதவு திறக்குது
சேவல் கூவுது அதோட
பெட்டை சேரப் போகுது...
பொழுது விடியுது
காதலுக்கு அறிகுறியா கதவு திறக்குது
சேவல் கூவுது அதோட
பெட்டை சேரப் போகுது...
காதலன் :
இண்டர்நெட்டில் நாளுபூரா
மூழ்கி இருக்குறா
இந்தியாவ விட்டு அவ
எங்கோ பறக்குறா....
அவ மனசு திறக்கத்தானே
முயற்சி பண்ணுறேன்
மனக்கதவ மூடி போறதால
மனசு உடைஞ்சு போகுறேன்....
மூழ்கி இருக்குறா
இந்தியாவ விட்டு அவ
எங்கோ பறக்குறா....
அவ மனசு திறக்கத்தானே
முயற்சி பண்ணுறேன்
மனக்கதவ மூடி போறதால
மனசு உடைஞ்சு போகுறேன்....
நண்பன் :
பொண்ணுகனா இப்படித்தான்
போகப் போக தெரிஞ்சுக்க
சொன்னவுடன் ஏத்துக்க காதல் என்ன
தீக்குச்சியா புருஞ்சுக்க....
போகப் போக தெரிஞ்சுக்க
சொன்னவுடன் ஏத்துக்க காதல் என்ன
தீக்குச்சியா புருஞ்சுக்க....
நண்பன் :
காதல் வந்தா எரிமலையும்
குளிர்காய இடம் கொடுக்கும்டா
கை கூடவில்லையினா
கடுகும் மலையா தெரியும்டா....
குளிர்காய இடம் கொடுக்கும்டா
கை கூடவில்லையினா
கடுகும் மலையா தெரியும்டா....
காதலன் :
படுக்கையறையில் விளக்கணச்சு
முழிச்சு இருக்குறேன்
பகல்பொழுத பக்கத்தில் வச்சு
பார்த்து ரசிக்கிறேன்....
மின்னல் போல சில நேரம்
வந்து போகுறா
என் மேனிகுளிர வாய் திறந்து
சொல்ல மறுக்குறா....
முழிச்சு இருக்குறேன்
பகல்பொழுத பக்கத்தில் வச்சு
பார்த்து ரசிக்கிறேன்....
மின்னல் போல சில நேரம்
வந்து போகுறா
என் மேனிகுளிர வாய் திறந்து
சொல்ல மறுக்குறா....
காதலன் :
வாட்ச்அப் பேஸ்புக்கில்
கணக்கு தொடங்கினேன்
டுவிட்டர் மூலம் கூட
தூது விட்டேன்...
காதல் வானில் பறந்து போக
கனவும் கண்டேன்
அவ மூச்சு என்னில் படாமலே
முகத்த மூடி போகுறா....
கணக்கு தொடங்கினேன்
டுவிட்டர் மூலம் கூட
தூது விட்டேன்...
காதல் வானில் பறந்து போக
கனவும் கண்டேன்
அவ மூச்சு என்னில் படாமலே
முகத்த மூடி போகுறா....
நண்பன் :
வானத்துல வானவில்லா நோட்டமிடுவா
உன் வாசலுல சீக்கிரமா கோலம் போடுவா
அவ பேசாம போவதிலும்
காதல் இருக்குது
உன்ன சுத்தவிட்டு ரசிக்கிறாடா
எதுக்கு உனக்கு மூச்சு வாங்குது....
உன் வாசலுல சீக்கிரமா கோலம் போடுவா
அவ பேசாம போவதிலும்
காதல் இருக்குது
உன்ன சுத்தவிட்டு ரசிக்கிறாடா
எதுக்கு உனக்கு மூச்சு வாங்குது....
- சோலச்சி புதுக்கோட்டை
பேச : 9788210863
பேச : 9788210863
2 கருத்துகள்:
அருமை நண்பரே
அருமை
சீக்கிரமாக நீங்கள் சினிமாவில் பாடல் எழுதுவீர்கள்
கருத்துரையிடுக