அம்மாடி உன் நெனப்பு
அடங்கலடி இன்னும் தவிப்பு
சும்மாடி நான் மொறச்சேன்
சுத்தி வருது உன் சிரிப்பு - இப்ப
தாவணிய தான் மறந்து
சேலையத்தான் சொருவிக்கிட்ட
அடங்கலடி இன்னும் தவிப்பு
சும்மாடி நான் மொறச்சேன்
சுத்தி வருது உன் சிரிப்பு - இப்ப
தாவணிய தான் மறந்து
சேலையத்தான் சொருவிக்கிட்ட
ஆத்தாடி கெரங்கி போறேன்
அழகு கொலுசோரம் இறங்கி வாரேன்......!
அழகு கொலுசோரம் இறங்கி வாரேன்......!
கண்ணாடி உன் உடம்பு
கண்டபடி மினுக்குதடி
என்னடி நீயும் செஞ்ச
எம்மனசு தவிக்குடி - இப்ப
ஊரோரம் ஆத்தங்கரை
வறண்டு போயி கெடக்குதடி
கண்டபடி மினுக்குதடி
என்னடி நீயும் செஞ்ச
எம்மனசு தவிக்குடி - இப்ப
ஊரோரம் ஆத்தங்கரை
வறண்டு போயி கெடக்குதடி
வேகமாக ஓடிவாடி நீயும் - நீ
வந்தா தானே அதுல தண்ணி பாயும்.......!
வந்தா தானே அதுல தண்ணி பாயும்.......!
விஞ்ஞான உலகமிங்கே
விறுவிறுனு போகுதடி
வீதியில வந்து பாரு
விதவிதமா தெரியுதடி - இன்னும்
அந்தக்கால நெனப்புலதான்
இங்கே நீயும் சுத்திவார
விறுவிறுனு போகுதடி
வீதியில வந்து பாரு
விதவிதமா தெரியுதடி - இன்னும்
அந்தக்கால நெனப்புலதான்
இங்கே நீயும் சுத்திவார
உன் முத்து விழிகள் எனக்காக திறக்கட்டும்
சித்தன்னவாசல் ஓவியம்போல நம்காதல் சிறக்கட்டும்......!
சித்தன்னவாசல் ஓவியம்போல நம்காதல் சிறக்கட்டும்......!
_ சோலச்சி புதுக்கோட்டை
பேச :9788210863
பேச :9788210863
4 கருத்துகள்:
முத்து விழிகள் தங்களுக்காகத் திறக்கட்டும்
அருமை நண்பரே
நன்றி
Arumai anna
சித்தன்னவாசல் ஓவியம்போல...நல்ல ரசனை..
மகிழ்ச்சியும் நன்றியும் நண்பரே
கருத்துரையிடுக