16.11.2018 அன்று கஜா புயல் தாக்கியதில் எங்கள் வீட்டு மரங்கள் வேரோடு சாய்ந்த கிடந்த காட்சியைப் பார்த்து நான்காம் வகுப்பு படிக்கும் என் மூத்த மகன் ஆரியா கண்ணீர் விட்டு கதறினான். அவன் அந்த மரங்களுக்கு செல்லப் பெயர்கள் வைத்து கொஞ்சி மகிழ்ந்து வந்தான். சோட்டாபீன், ஜாக்கிஜான், விஜய்சேதுபதி, என்று மரங்களுக்கு பல பெயர்கள் வைத்திருந்தான். மா, பலா, வாழை, கொய்யா, கறிவேப்பிலை, தேக்கு, நெல்லிக்காய் போன்ற மரங்கள் அவன் கண்முன்னால் விழுந்து முறிந்து சாய்ந்து கிடந்த காட்சியின் உணர்வுகளை இன்றைய 29.11.2018 இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளிவந்துள்ளது.
செய்தியை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர் குழுவிற்கும் தோழர் எழில் அரசன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி.
நட்பின் வழியில்
சோலச்சி
சுழன்று அடிக்கும் காற்றாய் இருக்கிறது என் எழுத்து. எனக்குள் பிறக்கும் என் எழுத்துகள் நிமிர்ந்தே நிற்கும். தவறுகள் செய்தால் உன் உச்சந்தலையில் அமர்ந்து ஓங்கிக் கொட்டும்..! - சோலச்சி
வியாழன், 29 நவம்பர், 2018
இண்டியன் எக்ஸ்பிரஸில் என் மகன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
மனம் நெகிழ்கிறது...
தங்கள் அன்பு மகனின் உணர்வு கண்டு மனம் மகிழ்கிறது நண்பரே
கருத்துரையிடுக