புதன், 21 நவம்பர், 2018

காஜா புயல் உதவிக்கரம் வேண்டி - சோலச்சி

காஜாபுயல் நிவாரணம் வேண்டி - சோலச்சி


        உதவிக்கரம் வேண்டி....


       வணக்கம் தோழர்களே....

    காஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் முப்பது ஆண்டுகள் பின்னுக்கு சென்றுவிட்டது. மிகப்பெரிய பொருளாதார சேதம் அடைந்துள்ளது.  மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளை இழந்த மக்கள் மண்டங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான சாலைகள் போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக இருக்கிறது.  மின்சார ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றிக் கொண்டு இருக்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் முழுமையாக மின்சார வசதி பெற எப்படியும் இரண்டு மாதங்கள் ஆகிவிடும். மக்கள் குடிநீர், உணவு, உடைகள் இன்றி தவித்து வருகின்றனர். பல ஊர்கள் தீவு போல் காட்சி அளிக்கின்றன. நண்பர்களாகிய உங்கள் மூலம் திரட்டப்பட்ட நிவாரண பொருட்களை நேற்று முதல் 20.11.2018 செவ்வாய் கிழமை ) மழையோடு மழையாக மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வினியோகம் செய்து வருகின்றோம். வெளிமாவட்ட நண்பர்கள் நிறைய பேர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். உங்களிடம் உதவிகளை எதிர்பார்த்து காத்து இருக்கின்றோம்.  உங்களின் மேலான மனிதநேயமிக்க உதவிகளை பொருளாக கொடுத்து உதவினால் புதுக்கோட்டை எப்போதும் அந்த மறக்காது.

அரிசி,
சமையல் பொருட்கள், 
தார்பாய்,
பாய்,
மெழுகுவர்த்தி,
தீப்பெட்டி,
  கொசுவர்த்தி,
கைலி ( லுங்கி)  ,
நைட்டிகள், 
பிஸ்கட், 
பிரட், 
நாப்கின், 
போர்வை....

போன்ற அடிப்படை பொருட்களை கொடுத்து உதவ வேண்டுகின்றோம். சொந்த நாட்டில் அகதிகளைப் போல் உங்கள் ஆதரவை எதிர்பார்த்து காத்து இருக்கும் எங்களுக்கு உதவுங்கள் நண்பர்களே...
உதவிகளை எதிர்பார்த்து
   சோலச்சி

தொடர்புக்கு....

கவிஞர் நா.முத்துநிலவன் 9443193293

கவிஞர் மு.கீதா 9659247363

கவிஞர் மலையப்பன் 7639972504

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

கஜா பல இலட்ச மக்களின் வாழ்க்கையை புரட்டித்தான் போட்டுவிட்டது நண்பரே
தங்களின் முயற்சி போற்றுதலுக்கு உரியது