போல்ட் ஸ்கை » தமிழ் » Insync » Pulse
சர்வாதிகாரிகள் சந்தித்த கொடூர மரண தண்டனைகளும் துரோகங்களும்!
By Aashika
Updated: Friday, March 23, 2018, 12:41 [IST]
சர்வாதிகாரிகள் சந்தித்த கொடூர மரண தண்டனை..!!- வீடியோ
சர்வாதிகாரி என்று சொன்னாலே நமக்கெல்லாம் ஹிட்லர் மட்டும் தான் நினைவுக்கு வருவார். மக்களிடையே விரோத போக்கினை கடைபிடித்து மிக கொடூரமான முறையில் நடந்த கொண்டதாக வரலாற்றினை படித்திருப்போம்.
அன்றைக்கு என்றில்லை என்றைக்குமே சர்வாதிகார போக்கு கடைபிடிப்பவர்களை மக்கள் வெறுக்கத்தான் செய்தார்கள். சில காலங்கள் அவர்களுக்கு அடிமையாக அவரது குரலுக்கு பயந்து கொண்டு அஞ்சி நடுங்குவதாய் இருந்தாலும் ஒரு கட்டத்தில் அவரையே கொல்லும் அளவிற்கு மக்களின் எழுச்சி இருந்தது. மக்களை கட்டுப்பாடுடன் வைத்திருக்கிறார், அண்டை நாடுகளிடமிருந்து பாதுகாக்கிறார் என்று எத்தனையோ காரணங்களை வரிசைபடுத்தினாலும் சர்வாதிகாரம் என்பது எல்லோராலும் வெறுக்கப்படும் ஒன்றாகவே இருக்கிறது.
ஹிட்லைத் தவிர இந்த உலகை ஆட்டிப்படைத்த, கொடூரமாக மக்களை வழிநடத்திய சில சர்வாதிகாரிகளைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம், அதோடு அவர்களுக்கு கிடைத்த மிகக்கொடூரமான மரண தண்டனைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மொஹமத் நஜிபுல்லா :
1978 காலகட்டத்தில் ஆப்கானிஸ்தானிலும் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்திருக்கிறது. சிலர் அரசாங்கத்திற்கு எதிராக புரட்சியில் இறங்கினர். புரட்சி தீவிரமாகவே அரசாங்கம் கலைக்கப்படுகிறது ராணுவ ஆட்சி வருகிறது. அப்போது ஆப்கானிஸ்தானின் சர்வாதிகாரியாக வலம் வந்தவர் மொஹமத் நஜிபுல்லா.
தொடர்ந்து தனக்கு எதிர்ப்பு வரும் என்று அறிந்தவர் 1990ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய நாடாக அறிவிக்கிறார். தொடர்ந்து இவருக்கும் தலிபான்களுக்கும் போர் வெடிக்கிறது. 1992 ஆம் ஆண்டு இவரை வீழ்த்திவிட்டு தலிபான்கள் ஆட்சியை கைபற்றுகிறார்கள்.
காரில் :
தலிபான்களுக்கும் மொஹமது நஜிபுல்லா ஆதரவாளர்களுக்கும் இடையில் கடுமையான சண்டை நடக்கிறது. தொடர்ந்து தலிபான்களின் கையே ஓங்கியிருக்கிறது. 1996 ஆம் ஆண்டு மொஹமது மறைந்திருந்த காபூலையும் கைபற்றினார்கள். மக்கள் எல்லாரும் கூடிநின்று வேடிக்கை பார்க்க அவரை அடித்து துன்புறுத்தினார்கள். காருக்கு பின்னால் கட்டி பல கிலோமீட்டர்களுக்கு இழுத்துச் சென்றார்கள்.
ரத்தமும் சதையும் பிய்த்துத் தொங்க நகரின் முக்கிய கம்பத்தில் தொங்கவிடப்பட்டிருந்தார். பொதுமக்கள் எல்லாரும் பார்க்க வேண்டும் என்று அப்படி செய்யப்பட்டிருந்தது.
நிக்கோலே சியாசேசு :
ரோமானியாவில் 1967 மற்றும் 1989 களில் அதிபராக இருந்தவர் நிக்கோலே. தீவிர ஸ்டாலின் ஆதரவாளர். தனக்கென்று உலகிலேயே மிகவும் மிருகத்தனமாக நடந்து கொள்ளும் போலீஸ் படையை வைத்திருந்தார். பிற நாடுகள் தங்களை ஆக்கிரமித்து விடாமல் தவிர்க்க பல கடுமையான சட்டங்களை கொண்டு வந்தார், வீழ்த்த முடியாத தலைவர் என்று தன்னை ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் கொண்டேயிருந்தார்.
சுட்டுக் கொலை :
வெளிநாடுகள் பலவும் தங்கள் உறவை தொடர விரும்பாததால் பொருளாதார ரீதியாக பெருத்த அடியை வாங்கியது. ஒரு கட்டத்தில் தங்கள் நாட்டின் வீழ்ச்சிக்கு காரணமே நிக்கோலே தான் என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள். புரட்சி வெடித்தது.
1980களில் மக்கள் முற்றிலுமாக அவரை வெறுக்கத் துவங்கியிருந்தார்கள். தங்கள் வாழ்ந்த இடத்தை புரட்சியாளர்கள் முற்றுகையிட்டதால் நிக்கோலேவும் அவரது மனைவியும் தப்பி புகழிடம் தேடி சென்று கொண்டிருந்தார்கள். ஆனால் வெகு விரைவாகவே இருவரும் பிடிக்கப்பட்டார்கள். பொதுமக்கள் முன்னிலையில் துப்பாகியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்கள்.
எக்ஸ்சரஸ்1 :
மன்னர்களுக்கு எல்லாம் மன்னர் என்ற அந்தஸ்த்தில் இருந்தார். பெர்ஷியா, எகிப்து உட்பட அந்த மொத்த பிரதேசத்திற்கும் அதிபதியாக இருந்தார். உலகிலேயே மிகவும் சக்திமிக்கவர், அதிகாரமிக்கவர் என்று புகழப்பட்டது. அதே நேரத்தில் சர்வாதிகாரியாகவும் இருந்தார் என்று சொல்லப்படுகிறது.
க்ரீஸ் நாட்டினரின் படையெடுப்பு காரணமாக அழிவை சந்திக்க ஆரம்பித்தது. இவருக்கு 50 வயதாகும் போது உடனிருந்த பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்படுகிறார்.
அன்வர் சடட் :
அன்வர் எகிப்தைச் சார்ந்தவர். எகிப்தில் 1952 ஆம் ஆண்டு நடந்த புரட்சியில் முக்கிய பங்காற்றியவர். எகிப்து இரண்டாக உடைந்து சூடான் தனி நாடாகிறது. அங்கிருந்து ஒரு புரட்சிப்படை உருவாகிறது. அதிகாரத்தில் யார் இருக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் மனநிலை கொண்டவர் அன்வர்.
இவர் துணை அதிபராக இருந்தார், அதிபர் இறந்த பின்பு இவரே ஆட்சி செய்யத் துவங்கினார். தன்னை எல்லாரும் பெரும் தலைவராக பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டவர் கடந்த போரில் இழந்தவற்றை எல்லாம் மீட்க இஸ்ரேலுடன் போர் துவக்கினார். அதன் பிறகு மனம் மாறி இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்திற்கு வந்தார். போர் என ஆரம்பித்து அமைதி ஒப்பந்தத்திற்கு வந்ததால் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
நாட்டிற்கு எதிராக செயல்படுகிறார் என்று சொல்லி இவர் மீது பத்வா என்ற இஸ்லாமிய சட்டம் பரிந்துரை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கூட்டத்தில் நின்று கொண்டிருந்த போது ஏகே 47 துப்பாக்கியால் துப்பாக்கி சூடு நடத்தி இவரைக் கொன்றார்கள். இதில் பதினோறு அப்பாவி மக்களும் கொல்லப்பட்டார்கள்.
பார்க் சுங் ஹீ :
நாமெல்லாம் வடகொரியாவில் தான் சர்வாதிகாரப் போக்கு இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு காலத்தில் தென்கொரியாவும் இதை விட கொடூரமான கால கட்டத்தில் இருந்திருக்கிறது. தென்கொரியாவின் அதிபர் பார்க் சுங். ஆண்கள் நீளமாக முடியை வளர்த்தார்கள் என்றெல்லாம் காரணத்தை சொல்லி ஆண்களை சிறையில் அடைத்தார்.
வீடில்லாதவர், ஏழை மக்கள் தன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அறிவித்தார். மக்களை அடிமைகளாக நடத்தினார், கடுமையாக வேலை வாங்கினார் வேலை செய்ய மறுத்தால் எந்த விசாரணையும் இல்லாமல் மரண தண்டனை விதித்தார்.
மகள் :
இவரது கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது 1979 ஆம் ஆண்டு அவரது தலைமை பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து தான் தென்கொரியாவில் ஜனநாயக ஆட்சி மலர்ந்திருக்கிறது.
2013 ஆம் ஆண்டு இவரது மகள் முதல் பெண் அதிபர் என்ற பெருமையுடன் பொறுப்பேற்றார் ஆனால் ஊழல் வழக்கில் சிக்கியவரை ஆட்சியிலிருந்து இறக்கினார்கள் மக்கள்.
மேக்ஸ்மில்லியன் ரோபெஸ்பயர் :
மன்னராட்சி முடிந்த பிறகு நடந்த பிரஞ்சு புரட்சிக்கு வித்திட்டவர் இவர். அடிமைதனத்திற்கும், மரண தண்டனைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்தார். மக்களின் ஆதரவு இவருக்கு பெருகியது மக்கள் மத்தியில் பிரபலமானதும், அதிகாரம் தன் கைக்கு கிடைத்ததும் தான் ஏற்றுக் கொண்ட கொள்கைகளையே மறந்தும் போனார் மேக்ஸ்.
கிட்டதட்ட தான் ஒரு கடவுள் என்னை வணங்க வேண்டும், நாமெல்லாம் ஒரு மதம் என்ற ரீதியில் சென்றுவிட்டார். தனி மதமும் உருவானது. தன்னை எதிர்ப்பவர்கள், கேள்வி கேட்பவர்களை எல்லாம் சுட்டு வீழ்த்தினார்.
இறுதி முடிவு :
கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் வெறுக்க ஆரம்பித்தார்கள். தன்னை வழிபட வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்து விட்டாலே தனக்கான அழிவு காலத்தை துவக்கிவிட்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் போல தன்னை சுற்றி வளைத்து விட்டார்கள் என்பதை அறிந்த மேக்ஸ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயல்கிறார். துப்பாக்கியாலும் சுடப்படுகிறார்.
சாமுவேல் டோ :
ஆளைப் பார்த்தால் இவரெல்லாமா இவ்வளவு கொடூரமான மனிதர் என்று நம்மால் கண்டே பிடிக்க முடியாது. மிகவும் சாதரணமாக இன்னும் சொல்லப்போனால் எளிமையாக பழகும் குணம் கொண்டவராகத்தான் தெரிவார். இவர் லிபியாவின் ராணுவத்தில் ஆபிசராக இருந்தவர்.
1980களில் அப்போதிருந்த அதிபரை கொலை செய்துவிட்டு ஆட்சிக்கு வருகிறார். அதன் பிறகே தனக்கென்று ஓர் அரசியல் கட்சியை ஆரம்பிக்கிறார்.
பிடிக்கவில்லை :
லிபியாவில் அமெரிக்க வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஆட்சியில் இருப்பதை சாமுவேல் எதிர்த்தார். இந்து லிபிய மக்களுக்கான நாடு அவர்கள் மட்டுமே இங்கே வசிக்க வேண்டும் என்ற கொள்கையை கொண்டிருந்தார் அதனால் ஏகப்பட்ட உயிரிழப்புகள், மக்கள் மத்தியில் புரட்சி வெடித்தது. ஒரே வருடத்தில் புரட்சியாளர்கள் சாமுவேலை கைது செய்தனர். தொடர்ந்து பல மணி நேரங்கள் சித்ரவதை செய்யப்பட்டார் அவரது காதுகள், கை மற்றும் கால்விரல்கள் தனித்தனியாக துண்டிக்கப்பட்டது. இறுதியாக தலையையும் துண்டித்து படுகொலை செய்தார்கள்.
ஐயன் அண்டோனிசு :
ஹிட்லரின் கூட்டாளி இவர். ரோமானியாவில் சர்வதிகாரியாக இருந்தவர். 1940களில் நாஜிப்படைகளுடன் சேர்ந்து மக்களை துன்புறுத்தினார். தனது கூட்டாளிகளுடன் தொடர்ந்து நட்புறவை பேணுவதாய் நினைத்து நாட்டிற்கு பெரும் அழிவுகளை ஏற்படுத்தினார்.
சோவியத் யூனியன் படையினர், ரோமானியாவின் கம்யூனிஸ்ட் படையினர் இவரை வீழ்த்த நினைத்தார்கள். இறுதியாக எதிர் தரப்பினரிடம் சிக்கி குடும்பத்துடன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பெனிடோ முசோலினி :
இத்தாலியைச் சேர்ந்தவர் முசோலினி. கார்டூன், ஃபேண்டஸி கதைகளை அதிகம் விரும்பும் மனம் கொண்ட இவரும் ஓர் சர்வாதிகாரி !. தன்னுடைய செல்லப்பிராணியாக ராஸ் என்ற சிங்கத்தை வளர்த்தார். அவரது கொடுமைகளை தாங்காது மக்கள் மத்தியில் புரட்சி வெடித்தது மக்களே முசோலினி மற்றும் உடனிருந்த அதிகாரிகளை கைது செய்து மக்கள் கூடும் இடத்தில் தொங்க விட்டார்கள். கற்கலால் அடித்தே அவரைக் கொன்றார்கள்.
இப்படியான மரணம் தனக்கு நிகழக்கூடாது என்பதாலேயே ஹிட்லர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
டொமிடியன் :
ரோமின் பதினோராவது அரசர் டொமிடியன் . தந்தையின் வழி நான் இருக்க மாட்டேன், புதிய வழியில் நான் செல்லப்போகிறேன் இங்கே என்னை விட வலிமையான அரசன் யாருமே இருக்க முடியாது என்று சொல்லி மக்களிடையே தான் என்றுமே வீழ்த்த முடியாத ஓர் தலைவனாக இருக்க விரும்பினான். என்றுமே வீழ்த்தப்படக்கூடாது என்ற எண்ணமே சர்வாதிகாரியாக செயல்பட வைத்தது. இறுதியாக இவரது கூட்டாளிகளே இவரை கைது செய்து சிறைபடுத்தினர். இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் உடலில் ஏழு முறை கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
English Summary
Brutal Death Of Dictators
LIFESTYLE
BEGINS HERE
JOIN US
SUBSCRIBE TO OUR DAILY NEWSLETTER
© 2018 Greynium Information Technologies Pvt. Ltd.
This website uses cookies to ensure you get the best experience on our website. . Learn more
1 கருத்து:
வரலாற்றின் பக்கங்களில் இரத்தக்கறையை ஏற்படுத்தியவர்கள்
கருத்துரையிடுக