சனி, 16 மார்ச், 2019

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - சோலச்சி

    
                          அன்னவாசலில் இலக்கிய கூட்டம்



             2019மார்ச் 16. புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், அன்னவாசல் கிளை கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.













    புதுக்கோட்டை மாவட்டம்  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் அன்னவாசல் கிளையின் மூன்றாவது கூட்டம் சனிக்கிழமை மாலை கோகிலா ஆங்கிலப் பள்ளியில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் கே.ஆர்.தர்மராஜன் தலைமை வகித்தார்.  கூட்டத்தில்  பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழிக்க முனைப்போடு செயல்பட்டு அவர்கள் பிடியில் சிக்கி மீண்டு வந்த தமிழக விமானி அபிநந்தன் அவர்களுக்கு பாராட்டுகளும் தீவிரவாதத்தை வளர்க்கும் நாடுகளுக்கு கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மேலும் பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையை நிகழ்த்தியவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






  மலைக்குடிப்பட்டி கவிஞர் நிரோஜா, இலுப்பூர் கவிஞர் ஜியோ ஸியூஸ் ராஜாமணி போன்றோர் கவிதை  வாசித்தனர். பத்தாம்வகுப்பு மாணவி லெட்சுமிப்ரியா உரைவீச்சு நிகழ்த்தினார். கவிஞர் புரட்சித்தமிழன் சத்தியசீலனின் "ழ'' கவிதை நூல் குறித்து இலுப்பூர் இயன்முறை மருத்துவர் கவிஞர் கோவிந்தசாமி விமர்சன உரை நிகழ்த்தினார். புரட்சித்தமிழன் சத்தியசீலன் ஏற்புரை வழங்கினார். சமூக ஆர்வலர் புதூர் அடைக்கலம் நன்றி கூறினார்.
          தமிழறிஞர் செம்பை மணவாளன், எழுத்தாளர் மூட்டாம்பட்டி ராஜூ, எம்.சி.லோகநாதன், சீ.செந்தில்குமார், நாகராஜன்,  கோகிலா பள்ளி தாளாளர் மீரான் மொய்தீன், சேக் அப்துல்லா போன்றோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிகளை எழுத்தாளர் சோலச்சி தொகுத்து வழங்கினார்.


கருத்துகள் இல்லை: