பக்குவமாய் மனசு....
எதற்கோ
பயந்து ஓடுவதாகவே
உணர்ந்தேன்
இதுநாள் வரை.....!
ஓடி ஓடி மறைந்தபோதும்
துரத்தி அடிக்கிறாய்
உன் துப்பட்டாவால்
அந்த மேகத்தை....!
நீ
ஓய்வு எடுப்பதன்
உச்சநிலைதானோ
அமாவாசை.....!
வெல்வதும்
பின்வாங்குவதுமான
நிலையில்
தொடர்ந்தபடி.....!
மகிழ்ச்சியின் உச்சத்தில்
முழு நிலவாய்....
தேய்ந்து
மறைந்தபோதும்
பணியைத் தொடர்ந்தபடி
நீ.....!
மகிழ்ச்சியின் உச்சத்தில்
மகிழ்வதும்...
தொய்வின் நிலையில்
தொலைந்து
போவதுமாய் நான்.....
எனக்குள்ளும்
இருக்கிறது
உணரத் தொடங்குகின்றேன்....
பக்குவமான
என் மனதை
ரசித்தபடி.....!
- சோலச்சி
காட்டு நெறிஞ்சி கவிதை நூலிலிருந்து .....
2 கருத்துகள்:
ரசியுங்கள் நண்பரே
oivin uchanilai ammavasai
magilchiyin uchathil mulunilavu
arumai
கருத்துரையிடுக