திங்கள், 26 ஆகஸ்ட், 2019

கரங்கள் உயரட்டும் - சோலச்சி


கரங்கள் உயரட்டும் - சோலச்சி


இன்னுமா சாதி
இருக்குனு கேட்குறான்
இந்தியாவில்தானா இவனும்
இருக்கிறான்...

பொல்லாத நாட்டில்
வாழத்தான் முடியல...
பொங்கி எழுடா
பொழுது விடியல....
             
தீண்டாமை காணாமை
நடவாமை கல்லாமை
திருவிதாங்கூரில் நடந்த கொடுமை
மறக்க முடியுமா....

சோறு சாப்பிட போறேனு சொன்னதுக்கு
கட்டி ஒதச்சு அடிச்ச கொடுமை
நினைவில் நீங்குமா....

கஞ்சிக்கு குடிக்கப் போறேனு சொல்லு
கைகட்டி தனியே
தூரமா நில்லு....

கட்டிக்க உனக்கு துணி ஒரு கேடா
ஒட்டிய வயிறுதான்
உனக்கு எப்பவும் போடா....

இன்னும் இன்னும் கொடுமை .....

எல்லா பக்கமும் இப்பவும் நடக்குது
கண்ணு காத மூடிதான்
உலகம் கெடக்குது.....

அந்தக்காலம் இந்தக்காலம்
இனி எந்தக்காலம் வந்தாலும்
மனித பிறவி மேலானது
ஒதுக்க முடியுமா....

விலங்கோடு விலங்கு
காதல் பண்ணுது - மனுசன்
மனித காதலை கொன்று குவிப்பதை
ஏத்துக்க முடியுமா.....

இளவரசன் காதலோ தண்டவாளத்துல
உடுமலை சங்கரோ
நகரத்தின் நடுவுல.....

ஒட்டுமொத்தமா இந்துனு சொல்லுறான்
உள்ளுக்குள்ளதான்
தலித்துகள கொல்லுறான்....

இன்னும் நீளனுமா மரணம்.....









தலைநிமிரச் செய்தவர்களின்
சிலையை துண்டிக்க
துடிக்குது பெருங்கூட்டம்...


அடங்கியே இருப்பது கொடுமை
அகிலத்தை ஆளனும் அறிவுத்திறமை..... 

கண்ண மூடிக் கிடப்பது பாவம்
கரகங்கள் உயர்த்தி
பொங்கனும் கோபம்....

                  -சோலச்சி



1 கருத்து:

டாக்டர். அ. பழமொழிபாலன் சொன்னது…

அருமை தோழர்
ஒட்டு மொத்த தலித்துகளின்
உணர்ச்சி பிழம்பு
கட்டுவித்த அண்ணல்களுக்காக
நீங்கள் எடுத்த சிலம்பு - பழமொழிபாலன்