வெள்ளி, 5 நவம்பர், 2021

முதுகலைத் தமிழ், பாடத்திட்டத்தில் கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும் - சோலச்சி

''அலங்காரம் அல்ல;  அங்கீகாரம்''

    

திருச்சிராப்பள்ளி இனிய நந்தவனம் வெளியீடாக 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த எனது "கருப்புச் சட்டையும் கத்திக்கம்புகளும்'' என்கிற சிறுகதை  நூல் புதுக்கோட்டை அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)  முதுகலைத் தமிழ் (M.A) பாடத்திட்டமாக வைக்கப்பட்டுள்ளது.

[நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் ராசி பன்னீர்செல்வன், கவிஞர் நா.முத்துநிலவன், இனிய நந்தவனம் சந்திரசேகரன், கவிஞர் மு.கீதா, கவிஞர் தென்றல், கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஆசிரியப்பெருமக்கள்]

  இனிய நந்தவனம் பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்ட  என்னுடைய  "கருப்புச்சட்டையும் கத்திக்கம்புகளும்" சிறுகதை நூலுக்கு நீங்கள் அளித்த அங்கீகாரம் ......


13.08.2017 சென்னை பொதிகை மின்னல் விருது மற்றும் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி.

23.12.2018 ராஜபாளையம் மணிமேகலை மன்றத்தின் சிறுகதைச் செம்மல் விருது மற்றும் ரூபாய் 5000/- (ஐந்தாயிரம்) பொற்கிழி.

17.02.2019 புதுச்சேரி தமிழ்ச் சங்கம் விருது மற்றும் ரூபாய் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி. என மூன்று விருதுகள் கிடைத்துள்ளது.

இளங்கலை முனைவர் (M.phil) பட்ட ஆய்வு செய்யப்பட்ட நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நூல் பதினொன்று சிறுகதைகளைக் கொண்டது.

  '' சமூகப் பிரச்சினைகளையும் தனிமனித உணர்வுகளையும் அது சார்ந்த குடும்பங்களின் பிரச்சினைகளையும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க வைத்திருக்கிறார்.

     அமைப்பு ரீதியான சமூகப்பார்வையை தொகுப்பு முழுவதும் பரவலாக்கியிருக்கிறார். சோலச்சியின் சமூக அக்கறை கவனத்தில் கொள்ளத்தக்கது.'' என்று கல்வெட்டு பேசுகிறது இதழின் ஆசிரியர் தோழர் எழுத்தாளர் சொர்ணபாரதி அவர்களும்

''கவிஞர் சோலச்சியின் இலக்கியப் பதிவுகள் அனைத்தும் எளிய மக்களின் எதார்த்த வாழ்வியலின் பதிவுகளாகவே இருக்கும். மிகைப்படுத்துதல் இல்லாத கதையோட்டத்தில் உண்மைச் சம்பவங்களின் புனைவாக இவர் எழுதும் ஒவ்வொரு கதையும் தனித்துவமானவை'' என்று தோழர் கவிஞர் நந்தவனம் சந்திரசேகரன் அவர்களும் நூலில் பதிவு செய்திருக்கிறார்கள்.

[இடமிருந்து கவிஞர் முத்துப்பாண்டியன் அவர்கள் மற்றும்  தேசியக்கவிஞர் புதுகைப்புதல்வன் அவர்களுடன் சோலச்சி]

புதுக்கோட்டை அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்களுக்கும் , கல்லூரியின்முதல்வர் அவர்களுக்கும், நூலை சிறப்பாக வெளியீடு செய்த தோழர் இனிய நந்தவனம் சந்திரசேகரன் அவர்களுக்கும், புதுக்கோட்டை பாண்டியன் புத்த- அகம் நிறுவனர் அய்யா கவிஞர் முத்துப்பாண்டியன் அவர்கள் மற்றும் புதுக்கோட்டை வரலாற்று பேராசிரியர் அய்யா விஸ்வநாதன் அவர்களுக்கும் இவ்வேளையில் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.

[பேராசிரியர் விஸ்வநாதன் அவர்களுடன் சோலச்சி மற்றும் என் மகன் ஆரியா]

     அன்பு பண்பு பாசம்
      நட்பின் வழியில்
            சோலச்சி

13 கருத்துகள்:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

வாழ்த்துகள் தோழா 🤝 இன்னும் பல விருதுகளுடன் இன்னும் இன்னும் புகழ் பெற்று உயர என் இனிய வாழ்த்துகள் 🎉

kannikovil raja சொன்னது…

மகிழ்ச்சி நண்பா

Unknown சொன்னது…

வாழ்க வளமுடன் உங்கள் வெற்றி பயனம் தொடரட்டும்....

புதுகைப் புதல்வன் சொன்னது…

மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள் நண்பரே.

PALAMOZHIBALAN சொன்னது…

அருமை தோழர்
பெருமையாக இருக்கிறது

PALAMOZHIBALAN சொன்னது…

மிக்க மகிழ்ச்சி தோழர்
பெருமையாக இருக்கிறது

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

மகிழ்ச்சி, வாழ்த்துகள்.

Unknown சொன்னது…

மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் மச்சான்.

Unknown சொன்னது…

🙏👌👌🌹🌹 வாழ்க வளமுடன்.நம் ஆசிரியர்கள் இவ்வாறு தமிழ் தொண்டு செய்து தமிழை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் உங்கள் பணி மேன்மேலும் வளரட்டும்.மிகவும் பெருமைககுரியதாகவும் உள்ளது.வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.💐💐💐💐

arunachalashiva சொன்னது…

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே. மேலும் பல பரிசு பெற்று வாழிய நலமுடன்

Unknown சொன்னது…

தமிழை முதல் மொழி ஆக்கி...
கவிதையை உயிர் மொழி ஆக்கி...
ஆசிரியர் கவிஞன் ஆகி...
எழுத்துக்களால் ஓங்கி அடிக்க...
கருப்பு சட்டையும் கத்தி கரும்புகளும் நூலை வெளியிட்டு...
அதனால் பல விருதுகளைப் பெற்று...
நம்மில் ஒருவராக வலம் வருகிற அண்ணன் சோலச்சி அவர்களுக்கு...
என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்...

Unknown சொன்னது…

வாழ்த்துகள் தம்பி!! இன்னும் பல்வேறு சிறப்புகளைப் பெற வாழ்த்துகிறேன்.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

மகிழ்வும் வாழ்த்துகளும் சகோ.