திங்கள், 1 ஏப்ரல், 2024

மதம்பிடிச்ச யானை - சோலச்சி

 


மக்களாட்சி நாட்டில் மதம் மூக்கை நுழைக்கிது

மக்கிடாமல் ஊழல் ரொம்ப மலிஞ்சு கெடக்குது

ஆணும் பெண்ணும் சமம் என்று ஏட்டில் இருக்குது

பெண் உயர்பொறுப்பில் இருந்தாலும் சாதி ஒதுக்கி வைக்கிது...


தேசப்பக்தி என்று சொல்லி தேடி வருகிறான்

தெருத்தெருவா சாமி பெயரைச் சொல்லி வம்பும் இழுக்குறான்

ஆண்டபோது என்ன செய்தான் சொல்லமுடியல

அதிகாரத்திமிரால் அடைக்குறானே எதிர்கட்சிய ஜெயிலுல...


உயரமாக சிலையும் வச்சான் கோடிக்கணக்குல

உலகில் இல்லாத சாமிக்குத்தான் ஏக்கர் கணக்குல

மாட்டுக்கறி தின்னதுக்கு ஆளக்கொன்னவன்

மணிப்பூர சீரழிச்சு நாட்டக்கெடுத்தவன்....


பொதுச் சொத்து எல்லாத்தையும் வித்து தொலச்சுட்டான்

புதுசுபுதுசா கடனைமட்டும் வாங்கி குவிச்சுட்டான்

எதுத்து நிக்கிற ஆளுக மேல ரெய்டு நடக்குது

பணம் கொடுத்து பகை பெருக்கி ஆட்சி பிடிக்குது...


இருந்த வளத்தையெல்லாம் அழிச்சிட்டாங்க உனக்குத் தெரியுமா

இனி உன்னையும் என்னையும் அழிச்சிருவான் உண்மைதானம்மா

தீயில் அவள் இறங்கியதை ஏற்க முடியுமா..?

தீயில் அவனும் இறங்கிருந்தால் புராணக்கதையே வேறம்மா...


புராணங்களில் புளுகு மூட்டை நெறஞ்சு கிடக்குது

அந்த பொய்யும் பொறட்டும் இருப்பதாலே தேசம் இருண்டு கிடக்குது

மதம் பிடிச்ச யானையைத்தான் கட்டி வைக்கனும்

மானங்கெட்ட மனுசங்கள எட்டி உதைக்கனும்....!

           - சோலச்சி


கருத்துகள் இல்லை: