23.12.2018 ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணியளவில் இராஜபாளையம் மணிமேகலை மன்றத்தின் அறுபதாம் ஆண்டு விழாவில் எனது சிறுகதை நூலான " கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும்" நூலுக்கு ரூபாய் 5000/- (ஐயாயிரம்) பொற்கிழியும் "சிறுகதைச் செம்மல்" விருதும் மன்றத்தின் தலைவர் அய்யா கொ.மா.கோதண்டம் அவர்கள் ஈரோடு எழுத்தாளர் ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் முன்னிலையில் வழங்கி கௌரவபடுத்தினார்கள். அருகில் என் ப்ரியத்திற்குரிய வழக்கறிஞர் கவிஞர் அண்ணன் அன்னக்கொடி அவர்கள். இந்நூலுக்கான இரண்டாவது விருது இது. முதல் விருது 2017 இல் சென்னை பொதிகை மின்னல் மாத இதழின் சிறந்த சிறுகதை நூலுக்கான விருதும் ரூபாய் 3000/- ( மூவாயிரம்) கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நூலினை தேர்வு செய்த தோழர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி
நட்பின் வழியில்
சோலச்சி புதுக்கோட்டை
1 கருத்து:
மகிழ்வான செய்தி வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக