பாடல்
குழி விழுந்த சாலையைப் போல
குலுங்கி குலுங்கி சிரிக்கிற
இடி விழுந்த மரத்தைப் போல
என்னை ஏன்டி ஆக்குற.....
குலுங்கி குலுங்கி சிரிக்கிற
இடி விழுந்த மரத்தைப் போல
என்னை ஏன்டி ஆக்குற.....
அர்த்த ராத்திரி நேரத்துல
அடிச்சு என்ன எழுப்புற
அத்த மக உன் நெனப்ப
ஆயுசு பூரா கூட்டுற......
அடிச்சு என்ன எழுப்புற
அத்த மக உன் நெனப்ப
ஆயுசு பூரா கூட்டுற......
என்னை வாழ வச்சவளே
ஏன்டி ஒதுங்கி போகுற
என் மனசு பூரா நீதானே
அத சொன்னா எதுக்கு மறுக்குற
காலம் பார்த்து பழகல
ஏனோ காதலிக்க தெரியல - நான்
எப்படிச் சொல்லுவேன்
யார்கிட்ட எடுத்துச் சொல்லுவேன்
தனியா தனியா புலம்பி வாடுறேன்......
ஏன்டி ஒதுங்கி போகுற
என் மனசு பூரா நீதானே
அத சொன்னா எதுக்கு மறுக்குற
காலம் பார்த்து பழகல
ஏனோ காதலிக்க தெரியல - நான்
எப்படிச் சொல்லுவேன்
யார்கிட்ட எடுத்துச் சொல்லுவேன்
தனியா தனியா புலம்பி வாடுறேன்......
அப்படி அழகா சீவ சொன்னவளே
இப்படி மொறச்சுப் போகுற
என்னுள் கலப்பு இல்ல புள்ள
அத ஏனோ நீயும் நம்பல
காயம்பட்டு தவிக்கிறேன்
மருந்தாக உன்னை நெனைக்கிறேன் - இனி
எதையும் எப்போ வெல்லுவேன்
துணையா துணையா உன்னைத் தேடுறேன்......
இப்படி மொறச்சுப் போகுற
என்னுள் கலப்பு இல்ல புள்ள
அத ஏனோ நீயும் நம்பல
காயம்பட்டு தவிக்கிறேன்
மருந்தாக உன்னை நெனைக்கிறேன் - இனி
எதையும் எப்போ வெல்லுவேன்
துணையா துணையா உன்னைத் தேடுறேன்......
வானில் நீந்தும் வெண்ணிலவே
உன்னை ஒதுக்க முடியுமா
என்னுள் நீந்தும் பெண்ணிலவே
உன்னை மறந்து உசுரு நிலைக்குமா
காலம் பூரா நீதானே
என்னைக் கண்டுக்கடி பொன்மானே - நான்
உன்னுள் வாழனும்
இல்ல உன் கூர்விழிகள் குத்தி சாகனும்
தினம் தினம் நெனச்சு ஏங்குறேன்........
உன்னை ஒதுக்க முடியுமா
என்னுள் நீந்தும் பெண்ணிலவே
உன்னை மறந்து உசுரு நிலைக்குமா
காலம் பூரா நீதானே
என்னைக் கண்டுக்கடி பொன்மானே - நான்
உன்னுள் வாழனும்
இல்ல உன் கூர்விழிகள் குத்தி சாகனும்
தினம் தினம் நெனச்சு ஏங்குறேன்........
- கவிமதி சோலச்சி புதுக்கோட்டை
பேச :9788210863
பேச :9788210863
10 கருத்துகள்:
அருமை நண்பரே
தங்களின் ஏக்கம் விரைவில் நீங்கட்டும்
ரசித்தேன், கூர்விழிகளை சற்றே அதிகமாக.
Super sir very nice
அருமை..
மிக்க மகிழ்ச்சி நண்பரே
மிக்க மகிழ்ச்சிங்க அய்யா
மிக்க நன்றி
மிக்க நன்றி தோழர்
மச்சி செம
வாழ்த்துகிறேன் ......
கருத்துரையிடுக