புதன், 20 செப்டம்பர், 2017

எட்டி எட்டி மாங்காய......... - சோலச்சி

                பாடல்  

எட்டி எட்டி மாங்காய பறிக்கிற
எத்தன மாசமுனு கேட்டா ஏன்டி மொறைக்கிற
மாராப்பு முள்ளுலதான் மாட்டுது
மடிப்பு சேலை ஆசையத்தான் கூட்டுது.....

நீளமான கூந்தலுக்கு என்னடி போட்ட
வாசம் ஆள தூக்குதடி நித்தமும் காட்டே
நம்ம ஊரு தார்ச்சாலை நாலுமாசம் கூட தங்கல
உன் கண்ணுல மை பூசி வருசமாச்சே
நிறம் இன்னும் நீங்கல
உனக்காக நானும்தானே பாட்டு பாடுறேன்
அதில் உள்ளூரு அரசியல சேத்து பாடுறேன்.....

நம்மோலட காசுலதான் பொது கட்டடம் கட்டுறான்
அவங்க அப்பன் ஆத்தா காசுபோல அவன் பேர ஒட்டுறான்
சுட்டிக்காட்ட நானிருக்கேன் சின்னப்புள்ள
தட்டிக் கேட்க ஆளு சேர்ப்போம் வாடி புள்ள
இப்ப உன் நெத்தியில குங்குமத்தை வைக்கிறேன்
சீக்கிரம் கிழிஞ்சுபோன அரசியல தைக்கிறேன்.......

மறைமுகமா விவசாயத்தை அழிக்கத் துடிக்கிறான்
மண்ணைத் தோண்டி நம்மலத்தான் போட்டு புதைக்கிறான்
மரம் மலை பொந்துகளில் தேனைக் காணோம்
இயற்கையான வாழ்க்கையத்தான் மறந்து போனோம்
அடுத்தவன எப்போதும் கெடுக்க எண்ணாதே
அநியாயம் கண்டால் எனக்கென்னனு ஒதுங்கி போகாதே......
             - சோலச்சி புதுக்கோட்டை
              பேச : 9788210863

2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

உண்மை நண்பரே
இதற்குத்தானே ரௌத்திரம் பழகு என்றார்
நம்முண்டாசுக் கவிஞர்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

நமக்கு நாமே குழி தோண்டிக்கொள்கிறோம். வேதனையே.