எனக்கென்ன.... எனக்கென்ன.....
தூங்கி கெடக்குடா தேசம்
தூக்கி நிறுத்துடா
நலிஞ்சு போச்சுடா நாடு
நாசமாச்சுடா.....
எனக்கென்ன எனக்கென்ன
என்றிருந்தால்
எல்லாம் இழப்பாய் சம்மதமா....
உனக்குள்ளும் இருக்கு
உறங்காமல் எழுப்பு ஆவேசமா.....
சகிப்புத்தன்மையும் இல்லாமல் போச்சு
சாதிச் சண்டையும் குறையல....
திங்கிற உணவுல தீட்டா - என்
தேசம் என்னடா கள்ள நோட்டா....!
மாட்டுக்கறி தின்னா பொறுக்கல
மனுசன வெட்டி சாய்க்கிறான் தெருவுல...
ஆதிக்க இனமே ஆணவம் எதுக்கு
அன்போடு வாழ பூமி இருக்கு....!
காசுக்கு மதிப்பும் இல்லாமல் போச்சு
கள்ள பதுக்கல்காரன் இன்னும் சிக்கல....
வெறும் பணத்த அவனுக சுருட்டல - பெரும்
நகையா சொத்தா பதுக்கிட்டான்...!
அரசியல் சட்டம் பூட்டியே இருக்கு
அன்னாடம் காச்சி தெருவுல கெடக்கு....
ஆட்சியாளரே அடித்தட்டு வாழ்க்கை ஒளிரல
அனைவரும் வாழ வழியா தெரியல.......!!!!
- சோலச்சி புதுக்கோட்டை
பேச :9788210863
3 கருத்துகள்:
உண்மைதான் நண்பரே
தேசத்தில் உள்ளோர் தூங்கித்தான் போய்விட்டார்கள்
யதார்த்தம். கூறிய விதம் அருமை.
வாழ வழி தெரியல - எதார்த்தமான வரிகள்.
கருத்துரையிடுக