நூல் வெளியீட்டு விழா |
உலகத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியையும் மகிழ்ச்சியும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
என்னுடைய முதல் படைப்பான "முதல் பரிசு" என்கிற சிறுகதை நூல் வெளியீட்டு விழா இதே நாளில் 19.07.2015 அன்று புதுக்கோட்டை நகர்மன்றத்தில் சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் மற்றும் அறங்காவலர் ஆன்மீக ரத்னா தமிழ்த்திரு டாக்டர் அ.ரவிச்சந்திரன் அவர்களும் புதுக்கோட்டையின் மணி மகுடம் தமிழ் செம்மல் கவிஞர் தமிழ்த்திரு தங்கமூர்த்தி அவர்களும், என்னை அறிவார்ந்த சமூகத்திற்கு அழைத்து வந்து வழிகாட்டிய வாழ்வில் ஒளி ஏற்றிய என்னுடைய ஆசிரியர் தமிழ்த்திரு.சோலச்சி ராமநாதன் அவர்களும் கலந்து கொண்டு நூலினை வெளியீடு செய்தனர்.
இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவு பெற்று ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது எனது முதல் பரிசு சிறுகதை நூல்.
கவிஞர் வைகறை அவர்களுடன் சோலச்சி |
என்னுடைய எழுத்து பணிக்கு எப்போதும் துணை நிற்கும் தோழர்களுக்கும் முதல் நூலினை வெளியீடு செய்வதற்கு அரணாக இருந்த என் அருமை மைத்துனர் என்றென்றும் நினைவில் வாழும் கவிஞர் வைகறை அவர்களுக்கும் நூல் வெளியீடுகள் கவிஞரே என்று உரிமையோடு வலியுறுத்திக் கொண்டிருந்த அன்பு நண்பர் இனிய நந்தவனம் சந்திரசேகரன் அவர்களுக்கும் நூல் வெளியீட்டு நாளில் என் அழைப்பினை ஏற்று திரளாக கலந்து கொண்ட என் உயிருக்கு நிகரான தமிழ்ச்சொந்தங்கள் மற்றும் தோழமைகள் அனைவருக்கும் இந்நேரத்தில் பேரன்பு கலந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
நூல் வெளியீட்டு அழைப்பிதழ் |
நூல் வெளியீட்டு அழைப்பிதழ் |
அன்பு பண்பு பாசம்
நட்பின் வழியில் எந்நாளும்
சோலச்சி
19.07.2023
பேச: 9788210863
3 கருத்துகள்:
வாழ்த்துகள்...
வாழ்த்துகள்
மகிழ்ச்சி, வாழ்த்துகள். உங்கள் எழுத்துப்பணி தொடரட்டும்.
கருத்துரையிடுக