புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் சோலச்சியின் "ஆப்பையால ஒரு அடி" கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று 04.10.2025 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் செங்காந்தள் சோழன் பதிப்பகமும் இணைந்து விழாவை நடத்தியது.
எழுத்தாளர் அண்டனூர் சுரா தலைமையில் தோழர் கவிஞர் ஒட்டடை பாலச்சந்திரன் அவர்களின் ஒருங்கிணைப்பில் தோழரின் வரவேற்புரையுடன் நடைபெற்ற இவ்விழாவில் போற்றுதலுக்குரிய ஐயா மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்கள் கவிதை நூலை வெளியிட புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம் தலைவர் தமிழ்ச்செம்மல் கவிஞர் தங்கம் மூர்த்தி பெற்றுக் கொண்டார்கள். வட்டார கல்வி அலுவலர் அண்ணன் மகேஸ்வரன் அவர்கள், பேராசிரியர் விஸ்வநாதன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். எழுத்தாளர்கள் மாமா மணிமொழி, உலகக் கவிஞர் அண்ணன் பீர்முகமது, கவிஞர் மு.கீதா, மரபு கவிஞர் மாலதி, கவிஞர் சூரியகாந்தி, கவிஞர் மரிய எட்வின், கவிஞர் அழ கணேசன், தேசியக் கவிஞர் புதுகை புதல்வன், திரைப்பட இணை இயக்குனர் அண்ணன் முகேஷ் என ஏராளமான எழுத்து ஆளுமைகளும் இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். செங்காந்தள் பதிப்பகம் நிறுவனர் அருமை தம்பி முனைவர் ஏசுராசா நன்றி கூறினார்.
![]() |
செங்காந்தள் சோழன் பதிப்பகம் இணையர் பவுலி-ஏசுராசா |
ஆளுமைகள் இருவரின் திருகரங்களால் நூலை வெளியிட்டது என் வாழ்வில் கிடைத்த வரமாக கருதி மகிழ்கின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக