ஞாயிறு, 24 மே, 2020

முதல் பரிசு - சோலச்சி- ஒரு பார்வை - பொன்.குமார்




உண்மையை உரக்கச் சொன்னதற்காக நெஞ்சம் நிறைந்த நன்றி தோழர் பொன்.குமார் அவர்களுக்கு, 




முதல் பரிசு - சோலச்சி - ஒரு பார்வை - பொன்.குமார்



   சின்ன சின்ன கவிதைகள் மூலம் தமிழ் இலக்கியத்திற்குள் அறிமுகமானவர் கவிஞர்சோலச்சி. சின்ன சின்ன கதைகள் அடங்கிய தொகுப்பு மூலம் சிறு கதை உலகிலும் காலடி எடுத்து வைத்துள்ளார் சோலச்சி. 

   இவரின் இயற் பெயர் தீ. திருப்பதி. ஊர் பெயருடன்
அகவை தீ. திருப்பதி என்றானார். அறிவியல் ஆசிரியையும் வறுமையைப் போக்கி வயிற்றுக்குச் சோறிட்டவருமான சோலச்சி என்பவரின் பெயரை தன் புனைப் பெயராக நன்றியுடன் வைத்துள்ளார். ஒவ்வொருவரின் புனைப் பெயருக்கும் பின்னால் ஒரு காரணம் இருக்கும். இது சற்றே வித்தியாசமானது. இத் தொகுப்பிலும் புனைப் பெயருக்கான காரணத்தைக் குறிப்பிடும் வகையில் ' வாய்ப் பார்த்தான்' கதை ஒன்றும் உள்ளது. பெண் பெயரில் எழுதும் ஆண்கள் மீது ஒரு குற்றச் சாட்டு உண்டு. இது குற்றச் சாட்டுக்கு அப்பாற்பட்டது. 


  சிறுகதைத் தொகுப்பின் பெயர் 'முதல் பரிசு'. 2002ஆம் ஆண்டில் ஒரு துணுக்கு எழுதி ' முதல் பரிசுத் தொகை ' பெற்றுள்ளார். இதுவே சோலச்சியை எழுதத் தூண்டியுள்ளது.  துணுக்கு எழுதியவர் சிறு கதை எழுதும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளார். இத்தொகுப்பில் ' ரெண்டாவது ரகம்' என்னும் கதையை எழுதியுள்ளார். எழுத்தாளன் ஒருவன் முதல் பரிசு பெற்றதானது. எழுத்தாளன் இறந்த பிறகே அவன் பரிசு பெற்ற விவரம் தெரிய வருகிறது. இது சோகமானது. ' 


   முதல் பரிசு'  கதை மூலம் சிறிய குடும்பமே சந்தோசம் தரும் என்னும் பாடத்தைக் கற்பிக்கிறது. திருமண வயது வந்து விட்டால் காதலுக்கு எவரும் தடையாக இருக்க முடியாது என்கிறது ' ஆட்டுக்கார ஆறுமுகம்'. இத்தொகுப்பை வாசித்துக் கொண்டிருந்த 04.10.2015 அன்று கேவிகே என்னும் குறுஞ்செய்தியில் சோலச்சியின் ஷார்ட் ஸ்டோாரி என்று ஆட்டுக் கார ஆறுமுகம் கதை அறிமுகப் படுத்தப் பட்டது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கு வயது 'பதினெட்டு' ஆன பிறகே திருமணம் செய்ய வேண்டும் என்று உணர்த்துகிறது  'மன்னிப்பு'. 

   குடும்ப சூழ்நிலையால் பெற்றோர் மற்றோர் செய்த தவறால் சிறு வயதிலேயே திருமணம் செய்யப்படும் ஒரு சிறுமியின் நிலையைை ' நிழல் பேசுகிறது ' என்று எழுதியுள்ளார்.


    ' பெண்மை' பெண்ணியம் தொடர்பானது. ஆண்களுக்கு அறிவுரை வழங்கும் கதை. ஒருவனுக்கு ஒருத்தியே என்னும் தத்துவத்தை உபதேசிக்கிறது. ' அப்பாவுக்கு ஒரு கடிதம்...' கதை மிக உருக்கமானது. கணவனை இழந்த பெண் மாமியார் வீட்டில் எதிர் கொள்ளும் பிரச்சனையைப் பேசுகிறது.


  பேத்திக்கு எப்பாடு பட்டாவது பாவாடை சட்டையை வாங்கித் தர போராடும் ஒரு பாட்டியைப் பற்றியது' சாமக் கோழி '.
சினிமா ஆசையில் சீரழிந்து போகும் ஓர் இளைஞனைய் பற்றிய கதையாக ' அவனும் ஆசையும்'பதிவாகி உள்ளது. இதற்கு மாறாக உள்ளது ' என்னவளே நீயிருக்க'.


   இளைஞர்கள் பால் வினையால் பாதிக்கப் படுவதுடன் சிறுமிகளையும் பாதிக்கச் செய்வதைப் பற்றி கூறுகிறது" நஞ்சு போன பிஞ்சு". மகன் கெடுத்தாலும் வேலைக் கார பெண்ணை மருமகளாக ஏற்றுக்கொள்ளும் மாமியாரின் பாத்திரம் சிறப்பு.
தாயின் கோரிக்கையை மகன் செவி மடுக்காததால் அவள் இறந்து விடக் காரணமாக  இருந்ததை எண்ணி வருந்தும் மகனைக் காட்டுகிறது 'உச்சிப் பொழுதில் அவள்'.


  தொகுப்பில் எதிர் பாராத ஒரு கதை 'எதிர் பாராத யுத்தம்'. இராணுவ வீரன் ஒரு யுத்தத்தில்  இறந்து விட்டதாக அவனைக் காதலித்த பெண்ணுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்யப் படுகிறது. ஆனால் இராணுவ வீரன் சாக வில்லை. அவளோ அவன்  நினைவில் தற்கொலைச்செய்து கொள்கிறாள். காதலின் வலிமையைக் காட்டுகிறது.


   ' ஆட்டுக்கறி ' சாப்பிடும் ஆசையில் கணவன் வாங்கி வர இருவரும் சாப்பிடும் முன் நாய் சாப்பிட்டு விடுகிறது. ஆசை நிராசையாய்ப் போனது அனுதாபப் பட வைக்கிறது.


  விடா முயற்சியும் சகிப்புத் தன்மைமயும் வெற்றிப் பெற வேண்டும் என்னும் எண்ணமும் இருந்தால் சாத்தியப் படும் என்கிறது ' பட்ட மரம்'.  'விடியல்' கதைத் தீண்டாமையைப் பேசுகிறது. சமத்துவத்திற்கு சமர் புரிய தயாராகி விட்டனர் என்கின்றனர். ஆனாலும் அது ஒரு கனவாகவே உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.' தீஞ்ச பனியாரம்' கதை தீண்டாமை இன்னும் தொடர்வதையே காட்டுகிறது. தாழ்த்தப்பட்டவர்கள் தன் நிலையை உணராமலே உள்ளனர் என்கிறார். 'பெரிய மனசு' ம் இவ்வாறே உள்ளது. 

  'சாம்பல்' சற்று கடுமையாகவும் கொடுமையாகவும் உள்ளது. உயர் சாதி பெண் தாழ்த்தப் பட்டவனைக் காதலித்தாள் என்பதற்காக இருவரையும் உயிருடன் இருக்கும் போதே அடித்து உதைத்து எரித்து சாம்பலாக்கி விடுகின்றனர் சாதி வெறியர்கள். சாம்பலாக்கப் பட்டாலும் இன்னும் சாதி வெறி பல ஊர்களில் அணையாமல் எரிந்து கொண்டுதான் உள்ளது என்கிறார். ஆனால்' பிச்சாயி மகன்' சாதி ஒழியும் என்று நம்பிக்கை ஊட்டியுள்ளா். புதிய தலை முறையினரிடையே ஒரு மாற்றம் தெரிகிறது என்று நம்பிக்கை ஒளி பாய்ச்சியுள்ளார்.


   நாட்டில் 'வினாக் குறி 'யாக பல பிரச்சனைகள் உள்ளன. அவற்றில் ஒன்று சிறுவர்கள் பணிக்கு அமர்த்தக் கூடாது என்பதாகும். குழந்தைத் தொழில் தொடர்வதை 'வினாக்குறி 'யில் தெரிவித்தள்ளார்.


   கோவில் உண்டியலில் காசு போடுவதை விட கையேந்துபவருக்கு காசு போடுவதே 'புண்ணியம்' என்கிறது ஒரு சிறுத்த கதை.
தமிழ் மொழியின் படைப்புகளை பிற மொழியில் மொழி பெயர்க்க வேண்டும் என்பதைக் கூறும் கதையாக உள்ளது' வாய்ப் பார்த்தான் ', இதில் இ்ன்னொரு விசயமும் உண்டு. புனைப் பெயர் எவ்வாறு வைத்துக் கொள்ளப் படுகிறது என்பதையும் சொல்கிறது.


    'கீரி மலை'' ஒரு நல்ல கதை. மலைகள் குவாரியாக்க அழிக்கப் பட்டு வருவதை விவரித்துள்ளது. மக்கள் ரசிக்கவும் மலை தேவை என்கிறது.


  பக்கத்து வீட்டு ஆயாவிற்கு வேண்டா வெறுப்பாக உதவி செய்ய சென்றவன் அவளின் அன்பில் நெகிழ்ந்து விடுகிறான். உண்மையிலேயே அவளை ஆயாவாக பார்க்கத் தொடங்குகிறான். 'புதிதாய் மலர்ந்தான்' என்னும் கதை மூலம் வாசிப்பவரையும் புதிதாக மலரச் செய்துள்ளார்.


   உண்மையாகவும் நேர்மையாகவும் உழைப்பவர்களை வறுமை விடாது என்று ' வரக் காப்பி' கதை மூலம் உணர்த்தியுள்ளார். இதன் மொழி வித்தியாசமாக உள்ளது. தந்தையின் உழைப்பைச் சுரண்டி வாழும் ஒரு மகனை ' திருந்திய உள்ளம் ' கதையின் மூலம்
அடையாளம் காட்டியுள்ளார். தந்தையை எமாற்றிய மகனை ஒரு பெண் எமாற்றி திருந்தச் செய்து விடுகிறாள்.


     'முதல் பரிசு ' என்னும் தொகுப்பு மூலம் ஒரு சிறுகதையாளராக பரிணாமம் பெற்றுள்ளதற்காக கவிமதி சோலச்சிக்கு பாராட்டுக்கள். சிறு கதைகளும் உண்டு. சிறுத்த கதைகளும் உண்டு. சமூக பிரச்சனைகளை பேசும் கதைகளும் உண்டு. சாதாரண கதைகளும்
உண்டு. கதைகளின் எண்ணிக்கையைக் குறைத்து கனமான கதைகளை மட்டும் தொகுத்திருந்தால் முதல் பரிசு பெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். சோலச்சி அனைத்துத் தர மக்களையும் கதைகளில் உலாவ விட்டுள்ளார். ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்
சோலச்சியை நிறுத்தி பாரர்க்க முடியவில்லை. எதார்த்த வலைக்குள்ளளேயே எல்லா கதைகளும் சிக்கியுள்ளன. அனைத்து கதைகளையும் ஆசிரியரே கூறுவதாக எழுதப்பட்டுள்ளது. வடிவத்தில் மாற்றம் இல்லாததால் வாசிப்பில் சலிப்பு எற்படுவதை உணர முடிகிறது. 

பொன்.குமார்


   ஒவ்வொரு சிறு கதையின் முடிவிலும் அக் கதையின் போக்கை பிரதிபலிக்கும் வகையில் அதன் இறுதி அமைத்திருப்பது சிறப்பு. கவிமதி சோலச்சியின் முயற்சி வரவேற்பிற்குரியது. தொடர்ந்து முயன்று ' முதல் பரிசு' பெற வாழ்த்துக்கள்.

வெளியீடு
இனிய நந்தவனம் திருச்சி 620 003

பொன், குமார்
9003344742


       நூலாசிரியர்  சோலச்சி : 9788210863

புதன், 15 ஏப்ரல், 2020

என்னுயிரே ஆருயிரே - சோலச்சி


        ஆறுகடந்து கோட்டை.....


என்னுயிரே ஆருயிரே
உன்னைத்தான் நானும் இங்கே
மானே.!  தான் இழந்து வாடுறேனே
தன்னந்தனியே உன்னை சுமந்து
நானும் ஏதேதோ பாடுறேனே
அந்த காலங்கள் இன்று வருமா
மானே சோகங்கள் தான் தீருமா.....



அந்தக் கண்மாய் நடுவினிலே
நீர் கொட்டைதான் முளைச்சிருக்கு
நீயும் நானும் தாவணியில்
அயிரை மீனும்தான் பிடிச்சு வந்தோம்  - அன்று
அயிரை குழம்பாச்சு இன்று
என் கண்கள் குளமாச்சு....


பஸ் ஸ்டாண்டில் பைக்கினிலே
நான் உனக்காக காத்திருக்க
பை தூக்கி நடந்து வந்த நானும்
பலாச்சுளை வாங்கி தந்தேன் - அன்று
பாலாச்சுளை இனிப்பாச்சு இன்று
பாதையெல்லாம் முள்ளாச்சு.....


பரபரப்பாய் சாலையிலே
யாரும் பாராமல் பயணிக்க
என் மார்போடு கட்டியணைச்ச
கோடை மார்கழி ஆனதென்ன - அன்று
சூரியன் குளிர்ந்ததடி மானே
உன் நினைவு வாட்டுதடி.....


ஆறு கடந்து கோட்டை போனோம்
அழகே அதை ரசிக்க
மலை மீது ஏறிப்போயி அங்கே
மாறிமாறி கொஞ்சிக்கிட்டோம் - இன்றும்
கோட்டை என்னை தழுவுதடி நாளும்
என் உசுரு நழுவுதடி.....


அந்த சாலையோரம் இளநீரு
வாங்கித் தர நீ ருசிச்ச
உதட்டில் தேன் வழிய நான் ருசிச்சேன்
விழியோடு ஒத்தடம்தான் மானே
வேண்டும்படி கொடுத்துக்கிட்டோம்
அந்த காலங்கள் என்று வருமோ
இழந்த இன்பங்கள் தான் தருமோ......

                     - சோலச்சி புதுக்கோட்டை
                        பேச : 9788210863



சனி, 11 ஏப்ரல், 2020

நந்தவனமும் சோலச்சியும்




நந்தவனத்தோடு சோலச்சி.......



   தனது மிதிவண்டியில் இளைஞர் ஒருவர் பயணித்துக் கொண்டிருக்கிறார். உச்சி வெயில், நெற்றியிலிருந்து குற்றால அருவியாக கொட்டிக்கொண்டிருக்கிறது வியர்வை. அப்போது அந்த இளைஞரின் அலைபேசிக்கு ஓர் அழைப்பு வருகிறது.  வாகனத்தை ஓர் ஓரமாய் நிறுத்தியபடி இணைப்பைத் தொடர்கிறார்.


   வணக்கம்...

   வணக்கம் ...

யார் பேசுவது...

எல்லாம் உங்களுக்கு வேண்டியவர்தான்...

ஏற்கனவே பழக்கப்பட்ட குரலாக இருக்கிறதே....

குரல் பழக்கப்பட்டது அல்ல. ஆனால் எழுத்துகள் பழக்கப்பட்டது. நான் திருச்சியிலிருந்து பேசுகிறேன்.


                 நந்தவனம் சந்திரசேகரன் அவர்களுடன் சோலச்சி

திருச்சியிலிருந்து என்றால் எழுத்தாளர் கிரிஜாமணாளன், எழுத்தாளர் சரஸ்வதி பஞ்சு இவர்களிடம் குரல்வழியாகவும் பழக்கப்பட்டிருக்கின்றேன். நந்தவனம் இதழோடு தொடர்பு உண்டு. ஆனால் நந்தவனம் இதழ்...எழுத்துகளோடு மட்டும் பழக்கம்.

ஆமாம் நண்பரே, நான் நந்தவனம் சந்திரசேகரன் பேசுகின்றேன்.

மகிழ்ச்சி நண்பரே.... என்ற இளைஞரின் முகத்தில் பெரும் மகிழ்ச்சி பொங்குகின்றது.

மிதிவண்டியில் சென்ற இளைஞர் உங்கள்  சோலச்சிதான்.

வருடம் 2005  சனவரி மாதம்.

ஒருமணிநேரம் தொடர்ந்த அலைபேசி உரையாடலில் தற்கால இலக்கியம் தொடங்கி சங்க இலக்கியம் , தற்கால அரசியல் என நிறைய பேசினோம்.  

இரண்டாயிரம் ஆண்டில் நந்தவனம் இதழை வாசிக்க ஆரம்பித்து 2005 ஆம் ஆண்டில் உரையாடுகின்றோம். ஆசிரியர் பணி நியமனம் பெற்றபிறகே அலைபேசி வாங்கினேன் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவரை கடிதப் போக்குவரத்துதான்.

நிறைவாக நண்பர் நந்தவனம் சந்திரசேகர் பேசும்பொழுது இப்படியே எழுதிக்கொண்டே சென்றால் நூல் எப்போதுதான் வெளியிடுவது எனக் கேட்டார். 

வெளியிடும் எண்ணம் இருக்கிறது.  பணம் பெரும் சவலாக இருக்கின்றதே என்றேன்.

 பணத்தை விடுங்க. படைப்புகளை கொடுங்கள் நூலாக்குவோம். 

ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் ஒரு நூலாவது எழுதி விட வேண்டும் என்றார்.



     நண்பர் நந்தவனம் சந்திரசேகரின் அந்த உந்துதல்தான் அலைபேசி உரையாடல் தொடங்கிய பத்தாம் ஆண்டில் அதாவது 2015 ஆம் ஆண்டில் எனது முதல் சிறுகதை நூலான "முதல் பரிசு'' என்ற நூலினை புதுக்கோட்டை நகர்மன்றத்துல் என் குரு திருமதி. சோலச்சி அவர்கள் கரங்களால் வெளியிட்டு மகிழ்ந்தேன்.

     இரண்டாயிரம் ஆண்டுகளில் நந்தவனம் இதழ் கையடக்க அளவில் வெளி வந்தது.  எனது நிறைய கவிதைகள் தொடர்ந்து வெளியாகின. 


நந்தவனம் இதழ் மூலமாகத்தான் ராசிபுரம் நாணற்காடன் மற்றும் நீங்காதுயரில் என்னை இட்டுச் சென்ற அருமை மைந்துநர் வைகறை போன்றோர் அறிமுகமாகினர்.  ஒரிஜினல் தாஜ்மகால்,  சன்னல் திறந்தவன் எட்டிப்பார்க்கப்படுகின்றான் போன்ற கவிதை நூல்களை எழுதியவர் கவிஞர் வைகறை. எனது முதல் பரிசு சிறுகதை நூல் வெளியீட்டு விழாவுக்காக என்னோடு சேர்ந்து உழைத்தவர்.

    நந்தவனம் பதிப்பகம் மூலமாக புதிய படைப்பாளர்களின் எண்ணற்ற நூல்கள் வெளிவந்துள்ளன. நிறைய படைப்பாளர்களை தமிழ் உலகுக்கு அடையாளப்படுத்தியிருக்கிறார். 


வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைக்கிறார். நிகழ்ச்சிகள் பலவற்றில் பலரையும் பங்கெடுக்க வைக்கிறார்.  புதிய படைப்பாளர்களையும் அறமனச்செம்மல்களையும் தனது இதழ்மூலமாக அறிமுகம் செய்து வைத்து நல்லனவற்றை மனதார பாராட்டி விருதுகளையும் வழங்கி வருகின்றார்.

    சிறிய இதழாக தொடங்கிய நந்தவனம் இதழ் மாதந்தோறும் சிறப்பிதழாக வெளிவருகின்றது. உலக நாடுகள் பலவற்றிலும் கால் பதித்து தனது முத்திரையை பதித்து வருகின்றது. உலகப் படைப்பாளிகள் பலரும் நந்தவனத்தை வரவேற்று மகிழ்கின்றார்கள்.

    தாலியை அடமானம் வைத்து இதழ் நடத்துகின்றேன் என்று வருந்துபவர்கள் மத்தியில் அயராத உழைப்பால் எதையும் அலட்டிக்கொள்ளாமல் அகிலத்தில் பவனி வரும் நண்பர் நந்தவனம் சந்திரசேகரன் அவர்களின் இலக்கிய பணி சிறக்க நெஞ்சார வாழ்த்தி மகிழ்கின்றேன்.

                                                             பேரன்பின் வழியில்
                                                         சோலச்சி புதுக்கோட்டை
ஆசிரியர்
இனிய நந்தவனம் மாத இதழ்
த.பெ.எண் 214. எண்.17,
பாய்க்காரத் தெரு,
உறையூர்,
திருச்சிராப்பள்ளி - 620003
சந்தா ரூ 240/-
(கவிஞர் த.சந்திரசேகரன் 9443284823)

-------------------------




ஞாயிறு, 29 மார்ச், 2020

அட்டணக்கால் புகைப்படங்கள் - சோலச்சி


      

          "அவனியெங்கும் அட்டணக்கால்"


                                         அட்டணக்கால் புகைப்படங்கள் 





  போற்றுதலுக்குரிய அய்யா உயர்திரு.உ.சகாயம் ஐஏஎஸ் அவர்களின் திருக்கரங்களால் இன்று (06.02.2020 வியாழன்) சோலச்சியின் "அட்டணக்கால்'' சிறுகதை நூல் இப்பாரெங்கும் ஒளிவீசத் தொடங்கியுள்ளது.  



             அருகில் என் ப்ரியத்திற்குரிய நண்பன் இரமேஷ்.




                        கவிஞர் மு.மேத்தா அவர்கள் கைகளில் 




                                  இயக்குநர் திரு.பாண்டிராஜ்


     












































































வெள்ளி, 27 மார்ச், 2020

சோலச்சியின் ''அட்டணக்கால்'' குறித்து கவிஞர் பா.மலையப்பன்

*நூல் விமர்சனம் :*

                        *"அட்டணக்கால்"*


அண்ணன் சோலச்சி அவர்களின் ஐந்தாவது நூல் "அட்டணக்கால்". இதற்கு முன்னால் அவர் எழுதிய நான்கு நூல்களைப் போலவே இதுவும் முழுக்க முழுக்க சமூக நோக்கத்தோடு எழுதப்பட்டிருக்கிற நூல். சமூகத்தின் மீதுள்ள கோபங்களை தன்னுடைய பேனாவை கொண்டு குத்திக் கொலை செய்து கொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம். இந்த நூலில் மொத்தம் 20 சிறுகதைகள் இருக்கின்றது. ஒவ்வொன்றும் மணிமணியான சிறுகதைகள். பெரும்பாலும் அவரின் மிக நெருக்கத்தில் இருக்கும் நண்பர்களின் பெயரை கதாபாத்திரங்கள் ஆக்கியிருக்கிறார். மனதிற்குள் வைத்து பூட்டியிருந்த ரணங்களுக்கு வரிகளை கொடுத்து அதை கதைகளாக வடித்து தந்திருக்கிறார். முக்கியமான இரண்டு மூன்று கதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

முதலாவதாக இந்த புத்தகத்தின் தலைப்பான அட்டணக்கால். மிகுந்த வருத்தத்தையும் வேதனையும் அதேபோல தற்காலத்திலும் சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் கொடுமையையும் நேரில் பார்த்தது போலவே இருக்கிறது அந்தக் கதை. அதில் வரும் முருகேசனை போல எத்தனை பேர் துயரங்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர் என்று நினைக்கும் போதே மனம் விம்முகிறது. 

இரண்டாவதாக கடைசி சாவு சிறுகதை. குடும்பத்திற்கு ஒருவர் ராணுவத்திற்கு சென்ற காலம் போய் குடும்பத்திற்கு ஒருவர் மது மீது மயக்கம் கொண்டு தங்களுடைய வாழ்க்கையையும் தங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தையும் சீரழித்து கொண்டிருக்கக் கூடிய இந்த காலகட்டத்தில் நிரோசா போன்ற ஒரு பெண் எத்தனை துயரங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார் என்பதே கதை. அந்தக் கதையின் முடிவு எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

மூன்றாவதாக குறி . இளம் பெண்கள் தவறான ஆண்களால் எப்படி பார்க்கப்படுகிறார்கள் என்பதை வேறொரு கோணத்தில் கதை ஆக்கியிருக்கிறார் அண்ணன் சோலச்சி அவர்கள். 

இப்படியாக இவை அல்லாமல் இன்னும் 17 கதைகள் இன்னும் சொல்லப்போனால் 17 புதிய கதைக் களங்களை அண்ணன் தேர்வுசெய்து அசத்தி விட்டார் என்றே சொல்ல வேண்டும். குழந்தை இலக்கியத்துக்கான சியூக்கியின் பயணம் என்ற ஒரு கதையையும் முயற்சி செய்திருக்கிறார். நன்றாகவே வந்திருக்கிறது. சீக்கிரமாக குழந்தை இலக்கியத்துக்கான ஒரு சிறுகதை நூல் அவரிடமிருந்து வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள் அண்ணா.


ஒரு சாமானிய விமர்சகனாக இந்தக் கட்டத்தில் நான் சில கருத்துக்களையும் எழுத்தாளருக்கு வைக்க விரும்புகிறேன். பொதுவாக கதைக்கரு என்பது எழுத்தாளனின் குழந்தை. அந்த குழந்தை எப்படி வரவேண்டும் என்பது எழுத்தாளனின் உரிமை. இதை எந்தவொரு வாசிப்பாளனும் மறுக்க முடியாது. மாறாக ஒவ்வொரு கதையை எழுதும் போதும் வாசிப்பாளர்கள் நோக்கிலும் ஒவ்வொரு எழுத்தாளரும் சிந்திக்க வேண்டும். பள்ளிகளில் மெல்ல கற்கும் மாணவர்கள், தலைசிறந்த மாணவர்கள், சராசரி மாணவர்கள் இருப்பதைப் போலவே வாசிப்புக்கும் இந்த ரகம் உண்டு என்பது என்னுடைய கருத்து. நல்ல களத்தை தேர்வு செய்துவிட்டு தலைசிறந்த மாணவர்களுக்கு மட்டும் புரிந்துவிட்டால் போதுமென்று நினைத்து எழுதிவிட்டால் போதாது எல்லோரையும் மனதில்கொண்டு ஒரு கதைக்கருவும் ஒரு புத்தகமும் அதன் நடையும் வார்த்தைகளும் இருக்கவேண்டும் என்பது என்னுடைய எண்ணம். இதை அண்ணன் தன்னுடைய அடுத்தடுத்த களங்களில் முயற்சி செய்வார் என்று நம்புகிறேன். 

என்னுடைய தம்பி மலையப்பன் சிறந்த விமர்சகராக வளர்ந்து கொண்டிருக்கிறார் என்று முதலில் சொன்ன அண்ணனுக்கு முதன்முதலாக அவருடைய நூலுக்கு விமர்சனம் எழுதுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். அன்பும் பிரியங்களும் அண்ணா. 

*ஒவ்வொரு மனிதனும் சமூகத்தின் மீதும் அதில் நடக்கும் கொடுமைகளின் மீதும் கோபம் கொள்ள வேண்டும் , அந்தக் கொடுமைகளை மாற்றுவதற்கு முயற்சி செய்யவேண்டும் என்று அட்டணக்கால் போட்டுக்கொண்டு சொல்கிறார் அண்ணன் சோலச்சி.*

*அட்டணக்கால் - அட்டகாசம்*

*நூல் - அட்டணக்கால்*
*ஆசிரியர் : சோலச்சி*
* பேச: 9788210863
*விலை : ரூ.150/-*
*வெளியீடு : மின்னல் கலைக்கூடம்*

*விமர்சனம்:*
*பா. ஸ்ரீமலையப்பன் புதுக்கோட்டை *

புதன், 11 மார்ச், 2020

அதிகாரத்திமிர் - சோலச்சி


                        அதிகாரத்திமிர்






முறத்தால் புலியை விரட்டினாள்
இது பழைய கதை...

மாவுக் கோலமிட்டு மிரட்டுகிறாள்
இது புதிய விதை....

ஆணவப்போக்கு
அடி நாக்கில் அமர்ந்துகொண்டு
உருட்டுகிறது மிரட்டுகிறது...

உரக்கப்பேசி
ஊர்வலம் சென்று
உழைக்கும் கூட்டம்
திரட்டுகிறது
எத்தர்களை விரட்டுகிறது....

நிழலைத் தொட்டார்கள்
விட்டுவிட்டோம்
நெறிக்கிறார்கள் கழுத்தை
கத்துகிறோம் கதறுகிறோம்....

சிறையில் அடைக்கிறார்கள்
சிரத்தை உடைக்கிறார்கள்....

அதிகாரத் திமிர்
அழிவைக் கொடுக்கும்
உரிமைக் குரல்
போரைத் தொடுக்கும்.....

சந்து பொந்தெல்லாம்
மதம் திணித்து
மதம் பிடித்து
அலைகிறார்கள்
மங்கிய அறிவோடு சிலர்
விலையாகிறார்கள்....



மத சார்பற்ற நாடு
ஆமாம்....ஆமாம்
ஏட்டளவில்...

தொழுதவனை விட
தொட்டு இடித்தவர்க்கே
சொந்தம் என்கிறார்கள்...

கூட்டை விட்டு
ஓடு என்கிறார்கள்...

முகாமுக்குள் அடைக்கிறார்கள்
மூச்சுக்கும் வரி விதிக்கிறார்கள்....

முன்னுக்குப் போக முடியவில்லை
ஒன்னுக்குப் போகவும் வழியில்லை...

ஏதிலிகளாய் ஆக்க
ஏகப்பட்ட சட்டங்களை
ஏகாதிபத்தியம்
எடுத்து வரும் நிலை காணீர்...

சோத்துக்கும் வழியில்லை
ஆட்சியின்
கூத்துக்கு அளவேயில்லை.....!!!

          - சோலச்சி புதுக்கோட்டை

புதன், 12 பிப்ரவரி, 2020

மருத்துவ நுண்ணறிஞர் டாக்டர் ஆ.அழகேசன் அவர்களின் கைகளில் அட்டணக்கால்







                                        நெஞ்சம் நிறைந்த நன்றி




         ''சோலச்சியின் அட்டணக்கால்''



          சோலச்சியின் நூல்களுக்கு  தொடர்ந்து புரவலராக நல்லாதரவு வழங்கும் துர்கா அறுவைசிகிச்சை நிலையம் மற்றும் ஆராய்ச்சி மையம், பொன்னமராவதி மருத்துவ நுண்ணறிஞர்.டாக்டர் திரு.ஆ.அழகேசன் அவர்கள்   "அட்டணக்கால்" நூலினைப் பெற்றுக்கொள்கிறார்கள். 




      மருத்துவநுண்ணறிஞர் டாக்டர்.ஆ.அழகேசன் அவர்களுடன்


        ஆக்கபூர்வமான ஆதரவினை தொடர்ந்து வழங்கி வரும் பேரன்பு உள்ளங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.


   மருத்துவநுண்ணறிஞர் டாக்டர் ஆ.அழகேசன் அவர்களுடன் அரசமலை ஊராட்சிமன்றத்தலைவர் திரு. வெள்ளைச்சாமி அவர்கள் (நடுவில் இருப்பவர்)

நீங்களும் சோலச்சியின் ''அட்டணக்கால்'' சிறுகதை நூலினைப் பெற
கீழ்காணும் வங்கி கணக்கில் ரூபாய் நூற்றைம்பது (ரூபாய் 150 /-) மட்டும் நூலின் விலையாக செலுத்தவும்.  கூரியர் மூலம் நூல் அனுப்பி வைக்கப்படும்.

T.THIRUPPATHI
A/NO : 101001000004091
IFSC:IOBA0001010
BANK: INDIAN OVERSEAS BANK
            VAYALOGAM
PUDUKKOTTAI DISTRICT
வங்கியில் பணம் செலுத்தியதும் தங்களின் பெயர் மற்றும் முகவரியை தெரியப்படுத்தவும்.

சோலச்சி:  பேச: 9788210863

சனி, 8 பிப்ரவரி, 2020

சோலச்சியின் நூல்கள்(அட்டணக்கால் சிறுகதை நூல்) முன்பதிவு திட்டம் - சோலச்சி




                  ''சோலச்சியின் அட்டணக்கால்''



     சோலச்சியின் நூல்கள் முன்பதிவு திட்டத்தின் மூலம் தொடர்ந்து நல்லாதரவு வழங்கும் அன்னவாசல் குளவாய்பட்டியில் தலைமையாசிரியராக பணியாற்றி வரும்  அண்ணன் ஜிம்சன்  அவர்கள் "அட்டணக்கால்" நூலினைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
ஆக்கபூர்வமான ஆதரவினை தொடர்ந்து வழங்கி வரும் பேரன்பு உள்ளங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.



நீங்களும் சோலச்சியின் ''அட்டணக்கால்'' சிறுகதை நூலினைப் பெற
கீழ்காணும் வங்கி கணக்கில் ரூபாய் நூற்றைம்பது (ரூபாய் 150 /-) மட்டும் நூலின் விலையாக செலுத்தவும்.  கூரியர் மூலம் நூல் அனுப்பி வைக்கப்படும்.

T.THIRUPPATHI
A/NO : 101001000004091
IFSC:IOBA0001010
BANK: INDIAN OVERSEAS BANK
            VAYALOGAM
PUDUKKOTTAI DISTRICT

வங்கியில் பணம் செலுத்தியதும் தங்களின் பெயர் மற்றும் முகவரியை தெரியப்படுத்தவும்.
சோலச்சி:  பேச: 9788210863

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

அட்டணக்கால் முன்பதிவு திட்டம் - சோலச்சி

       ''சோலச்சியின் அட்டணக்கால்''


சோலச்சியின் நூல்கள் முன்பதிவு திட்டத்தின் மூலம் தொடர்ந்து நல்லாதரவு வழங்கி வரும் அண்ணன் அ.இரமேஷ் பட்டதாரி ஆசிரியர் அவர்கள் "அட்டணக்கால்" நூலினைப் பெற்றுக்கொள்கிறார்கள்.



 ஆக்கபூர்வமான ஆதரவினை தொடர்ந்து வழங்கி வரும் பேரன்பு உள்ளங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.

நீங்களும் சோலச்சியின் ''அட்டணக்கால்'' சிறுகதை நூலினைப் பெற 

கீழ்காணும் வங்கி கணக்கில் ரூபாய் நூற்றைம்பது (ரூபாய் 150 /-) மட்டும் நூலின் விலையாக செலுத்தவும்.  கூரியர் மூலம் நூல் அனுப்பி வைக்கப்படும். 

T.THIRUPPATHI
A/NO : 101001000004091
IFSC:IOBA0001010
BANK: INDIAN OVERSEAS BANK
            VAYALOGAM 
PUDUKKOTTAI DISTRICT 

வங்கியில் பணம் செலுத்தியதும் தங்களின் பெயர் மற்றும் முகவரியை தெரியப்படுத்தவும்.

சோலச்சி:  பேச: 9788210863

திங்கள், 20 ஜனவரி, 2020

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சமூக நல பேரவை விழா - சோலச்சி

      

          நடிகர் திலகம் சிவாஜிகணேசன்                                          அவர்களின்    

            92ஆவது பிறந்தநாள்விழா






       நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின்  92ஆவது பிறந்தநாள்விழா 19.01.2020 ஞாயிற்றுக்கிழமை காலையில்  ஒருநாள் நிகழ்வாக புதுக்கோட்டையில் இயங்கி வரும் நடிகர்திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் கொண்டாடப்பட்டது. அதில் எனது கவிதை .....


                               சிவாஜி விருது பெறுகின்றேன்


ஆழ்ந்த உறக்கம்
நடுநிசி என எண்ணுகின்றேன்

என் தோள்பட்டையில்
யாரோ தீண்டுவதாக உணர்கிறேன்

ம் ..... தூங்கு

என் சின்னவனாக இருக்குமோ என்று
சினுங்கியபடி உறக்கத்தை தொடர்கிறேன்

மீண்டும் அதே தீண்டல்

தம்பி.........

என்கிறது கனத்த குரல் ஒன்று...

விழிகளை விரிகோணத்திற்கு
கொண்டு செல்கின்றேன்...

தலையில் கிரீடம்
இடையில் கூர்வாள்
மின்னும் பொன்னிற மேனி...

யார்...யார்.....
எனக்குள் வினாக்கள் எழுகின்றன...

கூரிய விழிகளுக்குள்
குடியிருக்கும் கண்கள்
வசீகரத்தோடு பார்க்கின்றன என்னை....

இரவினை ஒளியாக்கி
நடந்து செல்கிறேன் வாசலுக்கு....

குதிரைகள் பூட்டப்பட்ட
தேர் ஒன்று நிற்கிறது ...

தம்பி.....

மீண்டும் கம்பீரக்குரல் கேட்கிறது...

குரல் வந்த திசை நோக்கி
திரும்புகின்றேன்...

''கூடிய நட்பின் இலக்கணமே
பராசக்தியின் மைந்தனே
பாசமலரே
புதிய பறவையே
இரத்தத்திலகமே கர்ணா''
என்றழைக்கின்றேன்....

என் கைகளை இறுக பற்றி
வசீகர பார்வையால்
வாஞ்சையோடு அணைத்து
தோளில் மெல்ல தட்டிக்கொடுத்து
தேரில் அமர்ந்து செல்கிறார்
மருதநாட்டு வீரன் ஜீவகன்....

என்னை நானே
கிள்ளிப் பார்த்துக்கொள்கிறேன்
மெல்ல... மெல்ல...
சொல்லிக் கொள்கிறேன்
கனவு....கனவு...கனவு...

என் விரல்கள்
எழுதுகோல் தீண்டிட
கொட்டுகிறது கவி மழை...

விழி அழகு
விளிக்கும் சொல் அழகு
நடை அழகு
நானிலத்தில் தனியொரு அழகு....

மேடை நாடகங்களில்
நடித்தாய்
மேனியெங்கும்
உணர்ச்சிதனை வடித்தாய்....

நான்காவதாக பிறந்தாய்
நடிகனாக வளர்ந்தாய்
நடிப்பால் உயர்ந்தாய்....

குணசேகரனாக
ஓடினாய் ஓடினாய்
வாழ்க்கையின் கடைசிக்கே ஓடினாய்...

ஓடிய நீ நின்றுவிடவில்லை
பொறுத்தது போதுமென
பொங்கி எழுந்தாய்
மனோகரனாக....

கூண்டுக்கிளியாக
அடைபட்டுவிடாமல்
வீரபாண்டிய கட்டபொம்மனை
எங்கள்
விழிகளில் நிறுத்தினாய்...

உந்தன்
திருவிளையாடலில்
மயங்கியே கிடக்கின்றோம்...

எங்களை
ரசிக்க வைத்துப் பார்ப்பதில்
ராஜபார்ட் ரங்கதுரைதான்...
எனினும்
முதல் தேதியில்
அழவைத்து வேடிக்கை பார்த்தாய்...

அந்தமான் காதலிக்காக
அலைந்து திரிந்து
வசந்த மாளிகை கட்டி
சிவந்த மண்ணில்
ராஜராஜசோழனாக
எங்களுடனே இருக்கின்றாய்....

கலைத்திறனில் செல்வாக்கு பெற்றாய்
கட்சி அரசியலில்
பாடம் நிறையக் கற்றாய்....

நடிப்புத்துறையின் பல்கலைக்கழகம்
நானிலம் போற்றும்
நடிகர் திலகம்...

எங்கள்
சண்முகசுந்தரமே
தில்லான மோகனம்பாளும்
உந்தன்
நாதஸ்வர இசைக்குள்....

எங்கள் கவிச்சக்கரவர்த்தியே
மனம் குளிர வைக்கும்
மிருதங்க சக்கரவர்த்தியே...

முதல் மரியாதை
எப்போதும் உனக்குத்தானே...

யார் சொன்னது....?

ஊட்டி வரைதான் உறவு என்று...!

எங்கள்
ஆறுபடையப்பனை
ஈன்ற தகப்பா...
இப்பாரெங்கும்
உந்தன் படையப்பா....!!!!
                  - சோலச்சி புதுக்கோட்டை