புதுக்கோட்டையின் புகழ் மகுடமாய் திகழும் எங்கள் தமிழ்ச்செம்மல் தங்கம் மூர்த்தி அவர்களின் மற்றொரு பரிணாமம் " ஹைக்கூவின் ஞான ராகங்கள்"
ஹைக்கூ நூல்கள் மற்றும் இதழ்களுக்கு எழுதிய மதிப்புரையின் தொகுப்பே இந்நூல். ஹைக்கூ எழுத நினைப்பவர்கள் அல்லது நூல்களுக்கு மதிப்புரை எழுத வேண்டும் என நினைப்பவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய நல்லதொரு இலக்கிய நூல்.
தமிழ் ஹைக்கூ அப்துல் ரகுமான் முதல் மித்ரா வரை - மு.முருகேஷ்
பச்சையம் என்பது பச்சை ரத்தம் - பிருந்தா சாரதி
மழை வாசம் - இன்பா
தூண்டில் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரைகள்
பனைமரக்காடு - ஈழபாரதி ( பிரான்ஸ் )
வே - டெய்சி ராணி
மழை நின்ற வீதி - மகேந்திரன் நவமணி
ஹைக்கூ ஓர் கூர்நோக்கு - நந்தவனம் சந்திரசேகரன்
முற்றுப் பெறாத கவிதை - பிரேமா கிறிஸ்டி
இத்தகைய நூல்களையும் அதன் படைப்பாளர்களையும் இந்நூலில் பதிவு செய்து மதிப்புரையாக வழங்கி ஹைக்கூ நூல்களுக்கு மகுடம் சூட்டி மகிழ்ந்திருக்கின்றார் போற்றுதலுக்குரிய தமிழ்செம்மல் தங்கம் மூர்த்தி அவர்கள்.
இந்நூலில் தமிழ்ச்செம்மல் அவர்களின் நேர்த்தியான நேர்காணலும் இடம்பெற்று இருப்பது கூடுதல் சிறப்பு.
இந்நூலினை அகநி வெளியீடு செய்திருக்கிறது.
64 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை ரூபாய் 100/-
பதிப்பகத்தார் அலைபேசி எண்: 9444360421
இந்நூலை எனக்கு வழங்குகின்ற பொழுது சில இனிய சொற்களை பதிவு செய்து கையொப்பமிட்டு வழங்கி உள்ளார்கள். இப்படி ஒரு பதிவினை பதிவு செய்து எனக்கு வழங்கி இருப்பது மிக உயரிய விருதுகளுக்கும் மேலான விருதாக நெஞ்சுக்கு நெருக்கமாக உணர்கின்றேன். தங்களின் பேரன்பால் பெரும் மகிழ்ச்சி கொள்கின்றேன் ஐயா. தங்களைப் போன்றவர்களால் புதுக்கோட்டையின் மாண்பு மேலும் உயரட்டும்.
பேரன்பின் வழியில்
சோலச்சி
![]() |
| தமிழ்ச் செம்மல் அவர்களின் இனிய வாழ்த்துடன் |



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக