இலக்கிய விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கிய விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 24 மார்ச், 2017

வாரந்தோறும் வியாழன் வெள்ளி

நீண்ட நாளாய் பதிய வேண்டும் என நினைத்த பதிவு .......

   எம் பள்ளியில் (ஊ.ஒ.ஆ.பள்ளி, மரிங்கிப்பட்டி. அன்னவாசல் ஒன்றியம், புதுக்கோட்டை ) ஒவ்வொரு வியாழனும் மதியம் விளையாட்டு விழா,  ஒவ்வொரு வெள்ளியும் மதியம் இலக்கிய விழா. மதியத்திற்கு  மேல் பாடப் புத்தகப் பயன்பாடு கிடையாது. இலக்கிய விழாவில் மாணவர்களே தலைமை ஏற்று தொகுத்தும் வழங்குவார்கள்.

  
இன்றைய நிகழ்வில் மாணவர்கள் தாங்களாகவே கவிதை வடிவில் பேசியும் அவர்களே தயார் செய்து பாடலும் பாடினார்கள். கதை சொல்வது, நகைச்சுவை, தனி நடிப்பு என பலதரப்பட்ட நிகழ்வுகள் இருக்கும். மாணவர்களுக்கு எது தோன்றுகிறதோ அதைச் செய்து காட்டுவார்கள்..

மாணவர்கள் பாடிக்கொண்டு நடனமாடும் காட்சி....

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

காட்டு நெறிஞ்சிக்கு பாராட்டு விழா

நெஞ்சம் நிறைந்த நன்றி....

எனது "காட்டு நெறிஞ்சி " நூலுக்கான விமர்சன கூட்டம் மற்றும் பாராட்டு விழா,  சென்னை எழில் இலக்கிய பேரவை மூலம் சென்னை ஆவடி முத்தமிழ் மன்றத்தில் ஞாயிற்றுக் கிழமை (14.08.2016) மாலை நடைபெற்றது. இந்த முத்தமிழ் மன்றமானது பேரறிஞர் அண்ணா அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.  விழாவில் சிலம்பிசைப் பாவலர் கவிஞர் வே. முனுசாமி அவர்கள், எழில் இலக்கியப் பேரவைத் தலைவர் முனைவர் எழில் சோம. பொன்னுசாமி அவர்கள், பேராசிரியர் பாரதி அவர்கள்,  வெண்பா வேந்தர் நாதமணி அவர்கள், கவிஞர் புதுகை.தீ.இர அவர்கள், கவி.தங்க.ஆரோக்கியதாசன்  போன்றோர் கலந்து கொண்டனர்.  இலக்கிய கூட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும்  ஏராளமான கவிஞர்கள் கலந்து கொண்டனர். "நம்மால் மலரும் நாடு " என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெற்றது. மாலை ஆறு மணிக்கு தொடங்கிய விழா இரவு ஒன்பது மணிக்கு நிறைவு பெற்றது. விழாவில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த எனது "முதல் பரிசு " சிறுகதை நூலையும் "காட்டு நெறிஞ்சி " கவிதை நூலையும் உரிய விலை கொடுத்து ஆர்வமுடன் வாங்கி சென்றதை எண்ணும்போது எழுத்தாளனாய் வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன்.  விழாவினை ஏற்பாடு செய்த எழில் இலக்கிய பொறுப்பாளர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.....