செவ்வாய், 28 அக்டோபர், 2025

சோலச்சியின் ஆப்பையால ஒரு அடி - நிழற்படங்கள்

     சோலச்சியின் ஆப்பையால ஒரு அடி நூல் வெளியீட்டு விழா நிழற்படங்கள். 2025 புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் நடைபெற்றது. 


கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்கள் வெளியிட 
தமிழ்ச்செம்மல் தங்கம் மூர்த்தி அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள்.




உயர்திரு. மாவட்ட ஆட்சியர் அவர்கள் 























பதிப்பகத்தார் சிறப்பு செய்யப்படுகிறார்கள்.





















































































































































































































கவிதை நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்.












































































மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் 






















கவிதை நூலை வாங்கி வாசிக்க:

செங்காந்தள் சோழன் பதிப்பகம்

+91 98657 80742


ஞாயிறு, 26 அக்டோபர், 2025

மழைச்சாரலில் மலர்ந்த மலர்கள் - மருத்துவர் ஆ.இந்திராணி

 

"மனம் சொல்லும் மகத்தான படைப்பு" - சோலச்சி

       "மலைச்சாரலில் மலர்ந்த மலர்கள்" என்னும் கவிதை நூலினை மருத்துவர் ஆ.இந்திராணி அவர்கள் எழுதி ஒளிரும் வளர்மதி பதிப்பகம் மூலமாக வெளியீடு செய்துள்ளார். அன்னை மொழியாம் தமிழுக்கு கவிதைகளால் அணிகலன்கள் செய்து பெருமை சேர்த்துள்ளார். எளிய சொற்களால் எல்லோரும் வாசித்து மகிழும்படியான இனிய நடையில் கவிதை நூலை படைத்திருப்பது சாலச் சிறந்தது. பார்த்தவுடனேயே வாசிக்கும்படியான கவிதைகளை படைத்திருக்கும் கவிஞருக்கு முதலில் மனம் நிறைந்த பாராட்டுகளை தெரிவித்து மகிழ்கிறேன்.

கரையில்நின்று கனவுகண்டால்

சிப்பி திறக்காது!.. நீ

கடலில்மூழ்கி எழுந்திடாமல்

முத்து கிடைக்காது!

பெருமுயற்சி, உழைப்பில்லாமல்

வெற்றி பிறக்காது!.. என்றும்

பிறரின்காலில் நிற்பவர்க்கு

வாழ்வு சிறக்காது!

     என்பார் கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்கள். இந்தக் கவிதை வரிகளை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்டு கரையில் நின்று வேடிக்கை பார்க்காமல் தமிழ் கடலில் மூழ்கி கவிதை என்னும் முத்துக்களை படைத்துள்ளார் கவிஞர் ஆ.இந்திராணி அவர்கள்.

   தன்னை ஈன்றெடுத்த தெய்வத்தாய் ஜெகதாம்பாள் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பித்துள்ளார். முப்பாலை தன்னகத்தே கொண்டு உலகப் பொதுமறையாக திகழ்ந்து கொண்டிருக்கும் திருக்குறளுக்கு மென்மேலும் மகுடம் சூட்டும் விதமாக திருக்குறள் பற்றிய கவிதை முதல் படைப்பாக பதிவு செய்துள்ளார். வாழ்க்கையை முறைப்படி நெறிப்படி வாழ்வதற்கான வழிமுறைகளை வகுத்துக் கொடுத்தவர் திருவள்ளுவர் என்று சொன்னால் மிகையாகாது.

உன் ஈற்றடி ஈகையால்

உலகமே

உயர்வு கொண்டது...!

என்று திருக்குறளின் பெருமையை திறம்பட பேசினார் கவிஞர். திருக்குறளை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்டால் உலகில் அமைதி திரும்பும்; இனிமை பெருகும்; வளமை கூடும்.

    ஒவ்வொரு மனிதனிடத்திலும் மற்றவர்களைப் போல் உயர வேண்டும் என்கிற உயர்வான சிந்தனை மேலோங்க வேண்டும். ஆனால், நடப்பது என்ன..? போட்டி போடுவதற்கு பதிலாக பெரும்பாலும் பொறாமை குணம்தான் மேலோங்கி நிற்கிறது. அதனால்தான் வளர்ச்சி என்பது வீழ்ச்சியாகவே தொடர்கிறது.

பொறாமை

கொள்வது

அறமல்ல..!

பொறாமை தீ

அணைக்கும்

ஆயுதம் அறம்..!

என அறம் பாடுகின்றார் கவிஞர். அறம் எது..? புறம் எது..? என இச்சமூகத்திற்கு நாம் சொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம். வளரும் தலைமுறையினர் விஞ்ஞானத்தை கரம் பிடித்து அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அறம் எது புறம் எது என தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. அவர்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து மேன்மையான சமூகத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு படைப்பாளிகளுக்கும் இருக்க வேண்டும். இதைத்தான் கவிஞர் திறம்பட செய்து இருக்கின்றார்.

தன் வாரிசு விந்தணுவை

தாயவள் கருவறையில்

வித்தென விதைத்து

விளைபயிரிடும் விவசாயி...!

ஊனை உருக்கி

உரமாய் உழைத்து

உயிராய் வளர்த்து

தலைக்கு மேல் உயர்த்தி

எட்ட உலகை

எடுத்துக் காண்பிப்பவன்...!

    என்று தந்தையைப் பற்றி குறிப்பிடுகின்றார். இன்றைய அவசர உலகில் வளர்த்து ஆளாக்கிய தாய் தந்தையை வயது முதிர்வு காலத்தில் எத்தனை குழந்தைகள் பேணிப் பாதுகாக்கிறார்கள் என்பது கேள்விக்குறிதான்..?

உன்

அஞ்சறைபெட்டியே

என்

அவசரகால

உதவி

வாங்கி...!

    என்று தாயின் அருமையை கொண்டாடுகின்றார். உலக வங்கியே நட்டத்தில் ஓடினாலும் தாயின் இந்த வங்கி பாதுகாப்பு பெட்டகத்தைப் போன்றது. எப்போதும் நட்டத்தில் இயங்காத வண்ணம் தாய் பார்த்துக் கொள்வாள். காரணம், அதில்தான் மருத்துவ குணங்கள் நிரம்பிய சீரகம், சோம்பு , வெந்தயம் , மிளகு, மஞ்சள் என அனைத்தும் அடங்கி இருக்கும்.

புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும்

உன்னால முடியாது தம்பி

அட.. பாதி புள்ள பொறக்குதப்பா

பசும்பாலா தாய் பாலா நம்பி...!

    இது அண்ணாமலை திரைப்படத்திற்காக கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பாடல் வரிகள். குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம். குழந்தையின் முதல் உணவு தாய்ப்பால்தான். தாய்ப்பாலில்தான் தேவையான அனைத்து சத்துகளும் நிறைந்த குழந்தைக்கு காணப்படுகிறது. தாய்ப்பால் இல்லாத குழந்தைகளுக்கு பசும்பால்தான் துணையாக இருக்கிறது.

எழுத்தாளர் ஆ.இந்திராணி


தாய்மை தரும் காப்பியம்

வெண்மை நிற ஓவியம்

அன்பு குன்றாத

அமுத சுரபி..!

என்கின்றார் கவிஞர். இன்று பணிக்கு செல்லும் பெரும்பாலான தாய்மார்களால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவது சிரமமாக உள்ளது. இதை கவனத்தில் கொண்டு தான் தமிழ்நாடு அரசு தமது பணியாளர்களுக்கு ஒரு வருட காலம் மகப்பேறு விடுப்பு அளித்து தாய்மையை கொண்டாடுகின்றது.

     உலகமே கொண்டாடும் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களை இந்திய சமூகம் சாதிக்குள் மதத்திற்குள் அடைத்து வைத்துள்ளது என்பது வேதனைக்குரியது. ஒப்பற்ற மேதையை கொண்டாடி மகிழ வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

சமத்துவம் முழங்கி

சாதி மத பேதங்களை

சாட்டை அடித்து விரட்டிய சகாப்தமே....!

   என்று அண்ணல் அம்பேத்கர் கவிதையில் முழங்குகின்றார் கவிஞர். அண்ணல் அம்பேத்கர் அவர்களை ஒரு வட்டத்திற்குள் அடைத்து வைத்து பார்க்கும் மனநிலையை இந்திய சமூகத்தின் மாபெரும் சாபக்கேடு என்றுதான் சொல்ல வேண்டும்.

காதலின் நறுமணம்

மோதலின் கரிய மேகம்

காதலின் நிசப்தம்

பிரிவின் பனித்துளி

பரிவின் பச்சை இலை

பாசத்தின் புது மொட்டு

அன்பின் வண்ண மலர்

எல்லாம் என் வரிகளில் விரிகிறது

ஆணவத்தின் முள் கூட

சாரலில் நனைந்து மென்மையடைகிறது.....

என்ற நூலின் நிறைவு கவிதையான மலைச்சாரலில் மலர்ந்த மலர்களில் தனது ஓட்டத்தை இவ்வாறாகப் பதிவு செய்கிறார் கவிஞர் ஆ. இந்திராணி அவர்கள். நூலில் வாசித்து மகிழ்வதற்கும் பார்த்து ரசிக்கும் எண்ணற்ற கவிதைகளை ஓவியமாக தீட்டியுள்ளார். ஒவ்வொரு கவிதையும் உங்களுக்குள் ஏதோ ஒரு உணர்ச்சியை வெளிப்படுத்தும். அலங்காரத்திற்காக சொற்களை செதுக்காமல் தமிழ்ச் சமூகம் அங்கீகரிக்கும் சொற்களை செதுக்கி புனைந்துள்ளார். தமிழுக்கு புதிய வரவாக கிடைத்திருக்கும் மழைச்சரலில் மலர்ந்த மலர்களை நாம் கொண்டாடி மகிழ்வோம்

   இந்நூலில் தந்தையைக் கொண்டாடுகின்றார்; தாயைக்கொண்டாடுகின்றார்; பெண்களை கொண்டாடி மகிழ்கிறார்; புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரை பாடுபொருளாகக் கொண்டு பாடி மகிழ்கின்றார். அறிவைப் புகட்டிய ஆசிரியர் பெருமக்களைப் போற்றி மகிழ்கின்றார். தேசிய தலைவர்களான ஜவர்கலால் நேரு, பெருந்தலைவர் காமராஜர், காந்தியடிகள் என எல்லோரையும் பாரபட்சம் பாராமல் பாடி மகிழ்கிறார். மீனவர்களின் நலனில் அக்கறை கொள்கிறார். குழந்தைகள் விளையாடுவதற்கு சொல்லிக் கொடுக்கிறார். தான் ஒரு மருத்துவர் என்பதால் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டு நோயில்லாமல் வாழ்வதற்கான நெடும்பட்டியலையும் தருகின்றார். யோகா செய்யுங்கள்.. காரணம், நோய் நொடி இல்லாமல் வாழலாம் என்ற வழிமுறைகளையும் தருகின்றார்.

    தமிழ்ச்சமூகம் மருத்துவர் ஆ.இந்திராணி அவர்களை போற்றிப் பாதுகாக்க வேண்டும். எனவே, அறிவியலை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கான எளிய வழிமுறைகளை எல்லோருக்கும் புரியும்படியான சொற்கள் பயன்படுத்தி நமக்கு கவிதை நூலாகப் படைத்திருக்கும் கவிஞர் அவர்களைநாம் கொண்டாடாமல் வேறு யார் கொண்டாடுவது....? அதனால்தான், கவிஞரைப் போற்றி பாதுகாக்க வேண்டும் என்று கூறுகின்றேன்.

   

    இந்நூலுக்கு புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழ்ச்செம்மல் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள், தமிழ்ச்செம்மல் ரமா இராமநாதன் அவர்கள், தமிழ் ஓலைச்சுவடிப் படியெடுப்பாளர் கவிஞர் அ.இரம்யா அவர்கள் வாழ்த்துரை வழங்கியுள்ளனர். மேலும், கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்கள் கவிதையால் வாழ்த்து மடல் வரைந்துள்ளார்கள்.

     இன்னும் நிறைய கவிதைகளைப் புனைந்து தமிழ் மொழிக்கு அணிகலனாய் சூட்டி மகிழ வேண்டும் என்று மனசார வாழ்த்தி மகிழ்கின்றேன். ஒவ்வொருவரும் தவறாமல் படிக்க வேண்டிய நூல். தமிழ் சான்றோர் போற்றும் இந்நூல் அனைத்து இல்லங்களிலும் உள்ளங்களிலும் குடியேறட்டும்.

பேரன்பின் வழியில்

சோலச்சி



நூல் வெளியீடு: ஒளிரும் வளர்மதி பதிப்பகம்

பதிப்பகத்தார் அலைபேசி: +91 70940 00253

ஆண்டு: 2025

பக்கங்கள்: 114

விலை ரூ 120/-






பின் குறிப்பு:

நான் உடல்நலம் குன்றி புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ( 9 சூலை 2025 ) அனுமதிக்கப்பட்டிருந்த காலக்கட்டத்தில் போற்றுதலுக்குரிய கவிஞர் ஐயா கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று கவிஞர் மருத்துவர் ஆ. இந்திராணி அவர்கள் தாயுள்ளத்தோடு என்னைக் கவனித்துக் கொண்டார்கள் என்றும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன். என்னை மட்டுமல்ல, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவப் பயனாளிகள் அனைவரையும் தாயுள்ளத்தோடு கவனித்துக் கொண்டதை கண்கூடாக பார்த்தேன். அவர்களின் மருத்துவப் பணியும் இலக்கியப் பணியும் சிறக்க மனசார வாழ்த்துகின்றேன்.

சனி, 25 அக்டோபர், 2025

சோலச்சியின் ஆப்பையால ஒரு அடி - ஆசிரியர் மாணிக்கம்


சோலச்சியின் ஆப்பையால ஒரு அடி - ஆசிரியர் மாணிக்கம் ( கருத்தளிப்பு )

       அன்பிற்குரிய சகோதரர். கவிஞர். ஆசிரியர். சோலச்சி அவர்களின் கை வண்ணத்தில் "ஆப்பையால ஒரு அடி" கவிதை நூல் வெளியிட்டு இருக்கிறார். அவர்களின் திருகரங்களால் புதுகை புத்தக கண்காட்சியில் வாங்கிய போது. ஒரு நூலை விமர்சனம் செய்யும் அளவிற்கு எனக்கு ஞானம் இல்லை. எளிய தமிழில் எல்லோரும் படிக்கும் வகையில் கவிதை அமைய பெற்றுள்ளது. இதில் என்னை ஈர்த்தது ஒரு சில கவிதை வரி.

1) இடியாய் முழங்கு :-

திசைகள் எட்டும் முழங்கிடு- 

தமிழைச் சீண்டுவோர் கதி கலங்கி ஓடட்டும்..


2) அதிகாரத் திமிர்:-

அதிகாரத் திமிர் அழிவைக் கொடுக்கும் 

உரிமைக் குரல் போரைத் தொடுக்கும்.


3) தோழா:-

அவன் போட்ட தண்டவாளத்துல இரயிலு போகுது 

இவன் கட்டுன பாலத்துல விரிசல் போகுது..


       இப்படி பல கவிதைகள் இடம் பெற்றுள்ளது. ஆர்வத்தோடு கவிதை நூலை வாசித்து .. நம்ம ஊர் கவிஞரின் பெருமையை.. உலகம் புகழ் பாட செய்யுங்கள்... 

     

ஆசிரியர் மாணிக்கம் அவர்களுடன் 

வாழ்த்துகளுடன்

உங்கள் நான் (ஆசிரியர். மாணிக்கம். மெரிட் பயிற்சி மையம்)



கவிதை நூலை வாங்கி வாசிக்க:

செங்காந்தள் சோழன் பதிப்பகம்

+91 98657 80742

சனி, 18 அக்டோபர், 2025

சோலச்சியின் ஆப்பையால ஒரு அடி - எழுத்தாளர் பிறைமதி

 சொற்களில் சலனமூட்டும் சோலச்சியின் எழுத்துகள்..

-------------



    எழுத்து என்பது அவ்வளவு எளிதாக எல்லோருக்கும் லாவகமாக கை கொடுப்பதில்லை. சிலருக்கு மட்டுமே அது கைக்குள் அடங்கி போகிறது. அது, மாமா சோலச்சி அவர்களின் கவிதைகளுக்குள் அடங்கி நிற்பதை ஆச்சரியத்துடன் பார்க்கிறேன்.

    கவிஞர் சோலச்சி அவர்களின் அனைத்து புத்தகங்களையும் நான் வாசித்திருக்கிறேன். அந்த வகையில் என்னுடைய கருத்து மிக முக்கியமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

நிற்க...

    சமூக மாற்றத்திற்கு குரலாக எழுந்த கவிஞர் சோலச்சி அவர்கள், தனது கவிதைகளில் சாதி, மதம், இனம், நாடு ஆகிய எல்லைகளைக் கடந்து பேசுகிறார். “ஆப்பையால ஒரு அடி” எனும் இந்த கவிதைத் தொகுப்பில், ஒரு போராளியின் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார். வெறும் அழகு சொல்லாகக் கவிதையை எழுதவில்லை; விழிப்புணர்வுக்கான கருவியாகக் கவிதையை மாற்றியிருக்கிறார்.

    இந்த நூலில் இடம் பெற்ற சில கவிதைகளைப் படித்த போது, ​​மனதை உலுக்கியதோடு மட்டுமல்லாமல் பல கவிதைகள் சிந்திக்கவும் வைத்தன. சில வரிகள் சமூக பிரச்சினைகளை கண் முன்னே கொண்டு வருகின்றன.. ஒவ்வொரு வரியிலும் சிந்தனையும், சமுதாயத்தின் அசிங்கங்களுக்கும் எதிரான சத்தமும் உள்ளது. ஏற்றத் தாழ்வுகள், சாதிவெறி, மதத்தின் பெயரிலான பாகுபாடுகள் போன்றவை இன்று நம் சமூகத்தில் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் பரவியிருக்கும் போது, சோலச்சியின் கவிதைகள் காலத்தை தாண்டி பேசுகின்றன.

      சோலச்சி எழுதிய சில வரிகளில் அம்மாவின் பாசமும், அப்பாவின் நேசமும், மாணவர்களின் தூய அன்பும் நம்மை ஈர்க்கும் வகையில் காட்சியளிக்கின்றன. பள்ளி என்பது வெறும் கல்விக் கூடமல்ல, வாழ்க்கை கற்பிக்கும் இடம் என்பதையும் உணர்த்துகிறார். மாணவர்கள், பள்ளி, ஆசிரியர்கள் ஆகிய மூன்றுக்கும் இடையே உள்ள உருக்கமான உறவை மிக நேர்த்தியாக வருணித்திருக்கிறார்.

      இதைவிட முக்கியமானது, சோலச்சி தனது எழுத்துக்களில் நிகழ்கால நிகழ்வுகளையும் பதிவு செய்கிறார். இது இவரை ஒரு கவிஞருக்கு மேலும் சமூக ஆய்வாளராக மாற்றுகிறது. சாதிய பிரிவினை, பாலியல் சித்திரவதைகள், பெண்கள் மீது நிகழும் குற்றங்கள், ஊக்கமளிக்கும் வரிகளை முன்வைத்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். வெறும் விமர்சனத்தில் அல்ல, மாற்றத்திற்கான முயற்சியிலும் ஈடுபடுகிறார்.

      இந்த, அவர் எழுத்துக்கள் பாராட்டைப் பெறும் வகையில் மட்டுமல்ல, பரிணாம மாற்றத்திற்கான ஊக்கமாகவும் அமைகின்றன. அவரது வார்த்தைகள் வாசகரின் உள்ளத்தைக் கடக்கின்றன. எதார்த்தங்களை மறைக்காமல், நேர்மையாக, உரக்கச் சொல்லும் எழுத்துகள். இந்த நூலை ஒரு சொல் புரட்சியாக மாற்றுகின்றன.

    நாம் வாழும் இந்த சமூகத்தில், பலரும் அடக்கப்படுகிறார்கள்; வாயடைக்கப் படுகிறார்கள். ஆனால், சோலச்சி மாதிரியானவர்கள், எழுத்துக்களால் அவர்கள் குரலை எழுப்ப முயற்சிக்கிறார்கள். அவருடைய வரிகளை வாசிக்கும்போது, ​​நமது உறைவிடங்களிலும், பள்ளி வளாகங்களிலும், தெருக்களிலும் ஒலிக்கும் குரலாய் உணர்கிறோம்.

     அத்தகைய கவிஞர் இன்னும் அதிகம் எழுத வேண்டும். சமூகத்தின் ஒவ்வொரு மூலையிலும் அவர் கவிதைகளில் ஒளிவிட வேண்டும்.

    “ஆப்பையால ஒரு அடி” போன்ற நூல்கள் மட்டும் இல்லாமல், இன்னும் பல நூல்களும் உருவாக வேண்டும். சமூகத்தின் முகத்தை மாற்றும் உந்துசக்தியாக அவர் எழுத்துக்கள் அமைவது உறுதி.

சோலச்சி ( Solachy Pudukkottai ) – எழுத்துப் புரட்சி கவிஞர் , குரலில்லாத மக்களின் பிரதிநிதி.

எழுத்தாளர் பிறைமதி

வாழ்த்துகள் மாமா...

நிறைய பாசங்களுடன்

பிறைமதி குப்புசாமி

சென்னை

98435 14251

17-10-2025

இரவு 08:02 மணி

நூல் வெளியீடு:

செங்காந்தள் சோழன் பதிப்பகம் 

பேச:  +91 98657 80742

வெள்ளி, 10 அக்டோபர், 2025

சோலச்சியின் ஆப்பையால ஒரு அடி - பேராசிரியர் சா.விஸ்வநாதன்

 சோலச்சியின் "ஆப்பையால ஒரு அடி" நூல் குறித்து பேராசிரியர் சா.விஸ்வநாதன்




நல் வணக்கங்கள்.

படி... படி... படி

மண்ணுக்குள் வைரம் உண்டு.

வைரத்தைச் சுற்றி ஈரம் உண்டு

மரத்திலும் வைரம் உண்டு

வைரத்தைச் சுற்றிலும் ஈரமும் உண்டு

மண்ணை வெட்டினால் வைரம் பிறக்கும்

மரத்தை வெட்டினால் ஈரமும் இறக்கும்...!

..........

படி படி படி

பலமுறை படி

பயனுள்ளதைப்

பயனுறப்படி..!

பக். 26-27.

            ......

விழிதெழு தோழா...

.........

முடியாது என்று நினைப்பது தவறு

முயலாமல் இன்னும்

முடங்கிக் கிடப்பதும் தவறு

இல்லை இல்லை இல்லை

என்ற சொல்லை மறந்தால்

தொடருமா தொல்லை தொல்லை

கால்களும் இரண்டு கைகளும் இரண்டு

பார்வையும் இங்கே பளிச்சென இருந்தும்

சாதிக்காமல் இருப்பது ஏனோ

சாதியத்தில் மூழ்கி தவிப்பது ஏனோ...!

வெறும் கோஷம் போடும்

கூட்டத்தோடு கூட்டுசேராதே

மோசம் செஞ்ச நெஞ்சத்தோடு

நேசம் கொள்ளாதே

தாழ்வு தாழ்வு தாழ்வு

இந்த மனநிலையை மாற்றினால்

வருமே உயர்வு உயர்வு உயர்வு

உலகமும் இருக்கு

உண்மையும் இருக்கு

உழைப்பும் இருக்கு

மலர்ந்திட வழியும் இருக்கு

எல்லோரும் மனிதன்தானே ஏற்றுக்கொள்ளு

உன் வாழ்வில் புனிதம் ஏற்றிச் செல்லு...!

பக்.30.

                 .....

உதிர்ந்த இலைக்கும்

ஆறுதல் சொல்கிறது

பூமி...!

பக். 93.

           .....

எங்கள் தேசத்தில்

பட்டொளி வீசி பறக்கிறது

விலைவாசி.

          ....

இனி எதை ஏற்றுவது

எதை இறக்குவது

எஞ்சியிருப்பதோ

கோவணம் !

பக்.111

               .....

'சோலச்சி' என்ற தன்  அறிவியல் ஆசிரியரின் பெயரைக் கொண்டு எழுதும், தொடக்கப் பள்ளி ஆசிரியர் தீ.திருப்பதி எழுதிய கவிதை நூல் தான்

"ஆப்பாயாலே ஒரு அடி "

நூலாசிரியர் சோலச்சி, பள்ளி ஆசிரியர், சமூக சேவகர், கவிஞர், சிறுகதை ஆசிரியர், நாவலாசியியர், தொழிற்சங்கவாதி என்று பன்முகங்களுக்குச் சொந்தக்காரர். எல்லா பன்முகங்களும் இவருடைய கவிதைகளில் இருக்கும்.

'ஆப்பையால் ஒரு அடி' என்ற இந்த கவிதை நூலிப் பெரிதும் சிறிதுமாக 57 கவிதைகளும், 8 கைக்கூ கவிதைகளும் உள்ளன.

இந்த நூல் எட்டாவது புத்தகத்திருவிழாவில் செங்காந்தள் சோழன் பதிப்பக அரங்கில், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன் வெளியிட புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்க தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி பெற்றுக் கொண்டார். இந்த நூலுக்கான தலைப்பு "ஆத்தா எழுந்துவா "தலைப்பிலான கவிதையில் உள்ளது. இரண்டு குழந்தைகளுக்கு இடையில் பிறந்தவன், தன் தாயிடம் ஆப்பையால் அடிவாங்குவதும், தற்போது மாண்டு கிடக்கும் தாயிடம்

"ஆத்தா.. எழுந்து வா

ஆப்பையால ஒரு அடி

நீ தந்தா போதும் 

பேராசிரியர் சா.விஸ்வநாதன் 

நிம்மதியா தூங்கி முழிப்பேன்" என்று அவன் கேட்பதுமாக இந்தக் கவிதை முடிந்திருக்கும். இந்தக் கவிதை முழுவதிலும் தன் தாயிடம் பெற்ற பாசத்தை, அன்பை, அரவணைப்பை அற்புதமாக வரைந்திருப்பார் சோலச்சி.

    இந்தக் கவிதைக்கு தன் வெளியீட்டு உரையின் மூலம் உயிர் ஊட்டினார் கவிதைப் பித்தன் . " சிறுவயதில் நானும் என் நண்பர்களும் என் தாயின் வாயில் புடைவையை போர்த்திக் கொண்டுதான் உறங்கினோம். அதில் இருந்த சுகம் எதிலும் கிடைக்கவில்லை. இன்றும் என் தாயின் புடவையை விரித்துக் கொண்டுதான் படுத்து உறங்குகிறேன். அதில் படுத்தவுடன் என்னிடம் உள்ள எல்லா மன அழுத்தங்களும் பறந்து போய் நிம்மதியாய் உறங்குகிறேன். உங்களில் யாராவது தாயின் புடவை வைத்திருந்தால், அதில் உறங்கிப் பாருங்கள் சுகம் தெரியும் என்று எதிரே நின்ற வாசகர்களிடம் சொன்னார். அவர் சொல்லிய விதம் அத்தனை அழகாக, உணர்வுபூர்வமாக இருந்தது. பின்னர் சோலச்சியோடு பேசும்போது சொன்னார் நான் இரண்டு புடவைகளை பத்திரமாக வைத்திருக்கிறேன். ஒன்று என் ஆசிரியை சோலச்சி அவர்கள் என் அம்மாவிற்கு கொடுத்தது. அதை அவர் கட்டாமலேயே காலமாகி விட்டார். மற்றொன்று என் தாயின் புடவை என்றார்.

நவம்பர் 25 என்ற கவிதையிலும் தான் தாயிடம் பெற்ற அரவணைப்பை உணர்வு பூர்வமாக பதிவு செய்திருக்கிறார் சோலச்சி

'ஆப்பையால் ஒரு அடி' கவிதை நூலில் உள்ள அத்தனை கவிதைகளும் எளிமையானவை, அறச்சிந்தனை கொண்டவை. என் போன்றவர்களால் கூட எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவை.  தாய்ப்பாசம், தந்தை நேசம், நிகழ்வில் உள்ள நம் தேசப் பிரச்சனைகள், உலகப் பிரச்சனைகள் அத்தனையும் கவிதையாக பிரவாகமெடுத்து பரவிக் கிடக்கிறது நூல் முழுவதும். இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் கவிதைகளும் உண்டு. பள்ளியில் தோன்றிய காதலும் சித்திரமாக்கப்பட்டுள்ளது.

இந்த நூலை பேராசிரியர். சா.விஸ்வநாதனாகிய எனக்கு சமர்ப்பித்திருக்கிறார். மிக்க நன்றி சோலச்சி.

சமூகம் வாழ நல்ல வழி சொல்லும் கவிதை நூல் இது

வாங்கி வாசியுங்கள்.

சக மனிதர்களை நேசியுங்கள்.

தற்போது புதுக்கோட்டை 8ஆவது புத்தகத்திருவிழாவில்

செங்காந்தள் சோழன் பதிப்பக அரங்கில் நூல் கிடைக்கிறது.

விலை ரூ.150/-

செங்காந்தள் பதிப்பகம்

9865780742.


ஞாயிறு, 5 அக்டோபர், 2025

சோலச்சியின் ஆப்பையால ஒரு அடி நூல் வெளியீட்டு விழா

 புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் சோலச்சியின் "ஆப்பையால ஒரு அடி" கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று 04.10.2025 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் செங்காந்தள் பதிப்பகம் அரங்கு எண் 28 இல் மிகச் சிறப்பாக நடைபெற்றது.






   தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும்  செங்காந்தள் சோழன் பதிப்பகமும் இணைந்து விழாவை நடத்தியது. 



எழுத்தாளர் அண்டனூர் சுரா  தலைமையில் தோழர்  கவிஞர் ஒட்டடை பாலச்சந்திரன் அவர்களின் ஒருங்கிணைப்பில் தோழரின் வரவேற்புரையுடன் நடைபெற்ற இவ்விழாவில் போற்றுதலுக்குரிய ஐயா மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்கள் கவிதை நூலை வெளியிட புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம் தலைவர் தமிழ்ச்செம்மல் கவிஞர் தங்கம் மூர்த்தி பெற்றுக் கொண்டார்கள்.  வட்டார கல்வி அலுவலர் அண்ணன் மகேஸ்வரன் அவர்கள், பேராசிரியர் விஸ்வநாதன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். எழுத்தாளர்கள் மாமா மணிமொழி, உலகக் கவிஞர் அண்ணன் பீர்முகமது, கவிஞர் மு.கீதா, மரபு கவிஞர் மாலதி, கவிஞர் சூரியகாந்தி, கவிஞர் மரிய எட்வின், கவிஞர் அழ கணேசன், தேசியக் கவிஞர் புதுகை புதல்வன், திரைப்பட இணை இயக்குனர் அண்ணன் முகேஷ் என ஏராளமான எழுத்து ஆளுமைகளும் இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.  செங்காந்தள் பதிப்பகம் நிறுவனர் அருமை தம்பி முனைவர் ஏசுராசா நன்றி கூறினார்.

செங்காந்தள் சோழன் பதிப்பகம் இணையர் பவுலி-ஏசுராசா



ஆளுமைகள் இருவரின் திருகரங்களால் நூலை வெளியிட்டது என் வாழ்வில் கிடைத்த வரமாக கருதி மகிழ்கின்றேன்.




சனி, 27 செப்டம்பர், 2025

ஆப்பையால ஒரு அடி - கவிச்சுடர். கவிதைப் பித்தன் அவர்களின் திருக்கரங்களில்

 எத்தனைநாள் ஒடுங்கிநிற்பாய்? 

அடிமை மாதிரி!.. 

சிலர் இதயங்களின் பொறாமையிலும் 

இறகு சேகரி!

சித்தமெல்லாம் வெற்றிக்கென்றே 

உரிய நாள்குறி!..

அந்தச் சிகரம்தாண்டி உயரம் தொடச் 

சிறகு நீவிரி!

        - கவிச்சுடர். கவிதைப்பித்தன்


   இந்தக் கவிதையை வாசிக்கின்ற பொழுது  முடங்கி கிடப்பவனுக்குள்ளும் எழுச்சி பிறக்கும். தாழ்வு மனப்பான்மை கொண்டோரையும் தலை நிமிரச் செய்யும். அச்சம் உடைத்து துச்சமன பயணிக்க வழித்துணையாகும். இந்தக் கவிதை மட்டுமல்ல;  ஐயா அவர்கள் எழுதுகின்ற ஒவ்வொரு கவிதையும் தமிழின் வரம் என்றே சொல்லலாம். கவிதைகள்தான் தமிழின் இனிமை என்றால்... ஐயா அவர்களிடம் உரையாடும் பொழுது கொட்டுகின்ற தமிழும் பேரின்பம்தான். 



     இலக்கிய ஆளுமைகளின் கூடாரமாய் நெடுங்காலம் தொட்டு புதுக்கோட்டையின் அடையாளமாக திகழ்ந்து கொண்டிருக்கும் கவிஞர்.முத்துப்பாண்டியன் அவர்களின் "பாண்டியன் புத்த-அகம்" எனும் அறிவு சுரங்கத்தில் போற்றுதலுக்குரிய பெருங்கவிஞர் ஐயா கவிச்சுடர்.கவிதைப்பித்தன் அவர்களைச் சந்தித்து "ஆப்பையால ஒரு அடி" என்னும் எனது கவிதை நூலை வழங்கி மகிழ்ந்தேன்.


அருகில் தண்டகாரண்யம் திரைப்படப் பாடலாசிரியர் அண்ணன் கவிஞர்.தனிக்கொடி , கவிஞர் வீம இளங்கோவன்,

கவிஞர் மரிய எட்வின், பாண்டியன் புத்த-அகம் உரிமையாளர் கவிஞர்.முத்துப் பாண்டியன் ஆகியோர்.

நாள்: 19.09.2025

புதுக்கோட்டை