இதய அஞ்சலியை காணிக்கையாக்குகின்றேன்....
பட்டி தொட்டி எங்கும்
பட்டையை கிளப்பியது
பாமரரும் கொண்டாட புதிய
பரிணாமத்தை எழுப்பியது
ஊர் தோறும் கோயில்களில்
உந்தன் இசையே ஒலிக்கிறது
உந்தன் மரணத்தை ஏற்கத்தான்
உள்ளம் இங்கே வலிக்கிறது
காந்த குரல் எடுத்து நீவீர் பாடும் கானா
காதுக்குள் பாய்கிறது தென்குமரி தேனா
இளையோரின் காதல் கோட்டையில்
நலம் நலம் அறிய கேட்டு அன்பு ஊற்றினாய்
கண்கலங்கும் நேரத்தில்
கவலைப்படாதே சகோதரா என்றே தேற்றினாய்
சூப்பர் ஸ்டாருக்கு பெயர் டைட்டில் கார்டு தந்து
மிரள வைத்தாய் அரங்கினை அதிர வைத்தாய்
இப்போதும் அதைக் கேட்டால்
கைத்தட்டல் கரவொலியோ விண்ணை பிளக்கும்
கடந்து வந்த பாதை கரடு முரடு உந்தன்
கண்ணியமோ அதை விளக்கும்
எல்லோரையும் கொண்டாடி குளிர்வித்தாய் மண்ணில்
யாரைக் கொண்டாடச் சென்றாய்
கரை தாண்டி வழிகிறது நீரோ கண்ணில்
பகட்டறியா பாட்டுக்காரன்
பாமரரின் கூட்டுக்காரன்
தங்க மகன் எனறு சிங்க நடை போட்டு வந்த
எங்கள் தேனிசைத் தென்றலே
செம்மாந்த வீர வணக்கத்தைச் செலுத்துகின்றேன்.....
-சோலச்சி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக