ரெட்டை சடை பின்னலோடு
அவள பார்த்தேன்
ஒற்றையடிப் பாதையிலே
ஆசைய கோர்த்தேன்
ஓரப்பார்வை வச்சவள இப்ப காணல
ஏ.... உசுர தவிக்க வச்ச ராகம் தெரியல...
துப்பட்டாவை தோளில் போட்டு சாடை காட்டினாள்
வானவில்லின் பேரழகை கண்ணில் மீட்டினாள்
கண் மை இல்லாமலே என்னை மயக்கினாள்
கண்டபடி எம்மனச வாட்டி வதக்கினாள்
இப்ப பைத்தியமா நானும் அலையுறேன் - என்
பாட்டு மூலம் அவள தேடுறேன்
அவளுக்காக பார்க்காத படமுனு எதுவுமில்ல
கேட்காத ஆளுன்னு எவருமில்ல
மின்னணுமூலம் கூட செய்தி தந்தேன் - அந்த
மின்னலோட முகவரிதான் இன்னும் வரல
அவளோட அடையாளம் நானும் காட்டுறேன்
அந்த நெனப்பில் ஆசையைத்தான் நானும் கூட்டுறேன்
கவிதை சொல்லும் விழிகள் கொண்ட கண்ணழகி
உண்மை மட்டும் பேசும் அவன் உதட்டழகி
நேர்த்தியாக வடிவமைத்த கைகள் இரண்டு
நிச்சயமாய் அவளை போல யாரு உண்டு
பூமிக்கு தெரியாமல் நடந்து போவாள்
அந்தப் பூக்கள் எல்லாம் நாணம் கொள்ள
வாசம் கொள்வாள்
அவள் உள்ளத்தில் என்னையே
எண்ணியிருப்பாள்
இந்த உலகத்தில் அவள் மட்டும்
மின்னி இருப்பாள்
இந்த கூட்டத்தில் அவ இருந்தா பார்த்து சொல்லுங்க
அவளுக்கு என்ன ஆச்சோ ஒன்னும் புரியல
அவ நெனப்பு மனச விட்டு இன்னும் விலகல
கண்களுக்குள் கூடு கட்டிய பைங்கிளி
கூடு வாட கண்கள் நோக்குதடி.....
- சோலச்சி


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக