களமாட நீ வராமல் கரங்கள் எப்படி வலுப்பெறும்
உளமார சொல்வதென்றால்
உணர்வற்று கிடந்தால்
இந்நிலமோ எப்படி உருப்படும்
கவர்ச்சியின் சாயம் பெருத்து போனால்
காக்கை குருவிக்கும் அலுத்துப் போகும்
கருத்தியல் ஒன்று நீர்த்துப் போனால்
கருவும் உருப்பெற மறுத்துப் போகும்
உச்சி சூரியனை உடலெங்கும் பரவவிடு
உன்னை விட்டால் வேறு வழி எது
மாய திரையை கிழித்து எறி
மண்ணில் நீயே ஒளிரும் விளக்கு திரி
- சோலச்சி
![]() |
| 19.11.2025 |
நவம்பர் 19 என் அகவை தினத்தில் தோழமைகளின் கரங்களை இறுகப் பற்றிக் கொள்கின்றேன்.
போற்றுதலுக்குரிய எங்கள் ஐயா கவிச்சுடர். கவிதைப்பித்தன்.
அவர்கள் திருக்கரங்களால் வழங்கிய ஆடையை அணிந்து கொண்டேன்.
மகிழ்ச்சி
சோலச்சி
19.11.2026




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக