வீதி கலை இலக்கியக் களம் 149

கவிஞர் க.சிவக்குமார், கவிஞர் ஜீவி, கவிஞர் நா.முத்துநிலவன், பேராசிரியர் சா.விஸ்வநாதன் இவர்களுடன் சோலச்சி
22.11.2026 அன்று காலை 10 மணி அளவில் புதுக்கோட்டையில் நடைபெற்ற வீதி கலை இலக்கியக் களம் 149 ஆவது கூட்டம் போற்றுதலுக்குரிய தமிழ்ச்செம்மல் கவிஞர் ஜீவி அவர்கள் தலைமை ஏற்க நானும் (சோலச்சி ) பேரன்பு கவிஞர் க.சிவக்குமார் அவர்களும் பொறுப்பேற்று நடத்தினோம். வீதி என்பது கூட்டுக் குடும்பம். இது ஒரு குடும்ப விழா என்பதை பறைசாற்றும் விதமாக இன்றைய நிகழ்வு குழந்தைகளை மையமாகக் கொண்டு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
குழந்தையர்:-
சாய் வந்தனா, சஷ்டிகா, கா.யுவராஜ், மங்கள வம்சிகா, நேத்ரன், நிரல்யா நா.செ, நிரஞ்சன் சித்தார்த்தா நீ.செ, நவீன் ராஜ் என குழந்தையர் பட்டாளம் விழா அரங்கினை மெருகேற்றினார்கள்.
கவிஞர் புதுகை எஸ். இளங்கோ, கவிஞர் விடிவெள்ளி, கவிஞர் பாஸ்கர் கோபால், கவிஞர் மாரிமதி, கவிஞர் ஸ்ரீ மலையப்பன், எழுச்சி கவிஞர் முருகேசன், கவிஞர் பாரதி செல்வன் போன்றோரின் உரை நேர்த்தியாக இருந்தது.
எங்களின் முன்னோடி ஐயா முத்திரையுடன் அவர்களின் இன்றைய நிகழ்வு குறித்த பின்னூட்டம் குழந்தையரை மகிழ்ச்சியடைய செய்தது.
எப்போதும் தனது மேடையை கலகலப்பாக வைத்திருக்கும் அண்ணன் தமிழ்ச் செம்மல் கவிஞர் ஜீவி அவர்களின் உரை பார்வையாளர்களுக்கு மிகவும் கொண்டாட்டமாக அமைந்தது.
குறித்த நேரத்திற்கு ஆரம்பித்து சரியான நேரத்தில் பேரன்பு கவிஞர் க.சிவகுமார் அவர்கள் நன்றியுரை கூற மிகச் சிறப்பாக நிறைவு பெற்றது.
நட்பின் வழியில்
சோலச்சி



































