#வாசித்ததை பகிர்வோம்,
பகிர்வதற்காக வாசிப்போம்#
*புத்தக அறிமுகம் எண் 141*
திண்டுக்கல் புத்தக திருவிழா இன்று துவங்குகிறது.
டிசம்பர். 1⃣1⃣ வரை இனி தினம்தோறும் கொண்டாட்டம் தான்.
அதுவரை 50 புத்தகங்கள் அறிமுகம் செய்வது என்கிற முயற்சியில் 41ஆவது புத்தகம்.
இன்று
*கவிமதி. சோலச்சி* எழுதிய கவிதை புத்தகம்
*காட்டு நெறிஞ்சி...*
நம் கண்கள் பார்த்து கவணிக்க தவறியவற்றை தன் கவிதை வரிகளில் நினைவூட்டி குட்டுகிறார்..
மொத்தமாக 68 தலைப்புகள்.
கவிதை எழுதி தான் பெற்ற முதல் பரிசான கட்டம் போட்ட சட்டையும் ஊதா டவுசரும். அதனை வழங்கிய இக்னேசியஸ் ஆசிரியருக்கு வசணநடையிலும், கல்வித்தாய்க்கு கவிநடையிலும் நன்றி காட்டி புறப்படுகிறார்.
*எனது இல்லங்கள்*
*இருந்திருந்தால் -நீ*
*நிர்வாணமாய்*
*நிவாரணம் கேட்கும்*
*நிலை எதற்கு....?*
என்கிற மழைநீரின் வரிகள் சாட்டையடிகள்.
*கொள்ளையடிக்கப்பட்ட*
*விடுதலையால்!*
*பாரதியும் தாகூரும்*
*கண்ணீரால்*
*கைகோர்த்தபடி*
*வங்கக்கடலில்!*
காலியாகிப்போன சனநாயகத்தின் கவலைகள் ஒரு கவிதையில்...
*உயிருள்ள உறவுகள்*
*உறவற்றுப் போனது*
*முதியோர் இல்லங்களில்....*
என உறவுகளின் உயிரிழப்பை சொல்லும் வரிகள்...
காதல்...
இயற்கை...
தலைவன்...
விலைவாசி...
மனிதம்...
கண்ணீர்...
கோபம்...
என எல்லாவற்றையும் சொல்ல கவிதை தான் வடிகால். அதனை வடித்தெடுத்து புத்தகமாய் வழங்கியிருக்கிறார் சோலச்சி....
எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசுவதற்கு கவிஞனுக்கு மட்டுமே அனுமதி இருக்கிறது...
தைரியம் இருக்கிறது...
ஈழத்தில் நம் தொப்புள் கொடி உறவுகளின் அழிப்பின் வேதனையினை கோபத்தை
*மலையாளம்*
*கன்னடம்*
*பஞ்சாபி*
*குழந்தையெனில்*
*கொதித்தல்லவா*
*எழுந்திருப்பாள்*
*பாரதம்!*
.
என சொல்லும் வரிகளில் இழப்பின் வரிகள் சோகம், கோபம், இயலாமை இகழ்ச்சி என எல்லாமும்...
இந்த கவிதைகள்...
நாம்கடந்து வந்த பாதையில் நாம் கவணிக்காமல் விட்டவை...
விட்டதை பிடிக்க...
அதனை உணர....
வாங்குங்க, வாசிங்க
புத்தக பெயர்:- *காட்டு நெறிஞ்சி*
ஆசிரியர் :- *கவிமதி. சோலச்சி*
விலை :- *₹110/- மட்டும்*
#வாசித்ததைப் பகிர்வோம்,
பகிர்வதற்காக வாசிப்போம்#
மு.வீரகடம்ப கோபு,
திண்டுக்கல்
#8489277070
http://veerakadambagobu.blogspot.com லும் வாசியுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக